TNPSC Indian polity Fundamental Rights

இந்த கட்டுரை TNPSC Group 4 Exam இல் இந்திய Polity  பகுதியில் இதுவரை தோ்வுகளில் கேட்கப்பட்ட வினாகளை ஆராய்ந்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இக் கட்டுரையினை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம். ஒவ்வொரு மதி்பபெண்ணும் நம்மை வெற்றி பெற செய்யும் என்பது நிச்சயம்.

அடிப்படை உரிமைகள்

1. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) குறித்த ஷரத்துக்கள் பகுதி மூன்றில் (Part-Ill) ஷரத்து 12 முதல் 35 (Art.12-35) வரை அமைந்துள்ளன.

2. அடிப்படை உரிமைகளின்பாதுகாவலன் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்ந்திமன்றம் ஆகியவை. அவ்வாறே அரசியலமைப்பின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம் ஆகும்.

3. அடிப்படை உரிமைகள் சார்ந்த அரசியல் நிர்ணய சபைக் குழுவிற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமை தாங்கியது நினைவில் கொள்ளத்தக்கது.

அனைத்துக் குடிமக்களுக்கும், முக்கியமான அடிப்படை உரிமைகள் உண்மையான அரசியலமைப்பில் 7 தலைப்புக்களாக அமைந்திருந்தன.

ADVERTISEMENT

அவற்றில் சொத்துரிமை (Right to Property) என்ற ஒரு தலைப்பு நீக்கப்பட்டு தற்போது 6 தலைப்புக்களாக  அரசியலமைப்பில் அடங்கியுள்ளன. அவை –

(1) சமத்துவ உரிமை (Right to Equality) (Art. 14-18),

(2) சுதந்திர உரிமை (Right to Freedom) {Art.19-22),

(3) சுரண்டலுக்கு எதிரான உரிமை {Right against Exploitation) (Art.23-24),

(4) சமய சுதந்திரத்துக்கான உாிமை (Right of Religion) (Ar1.25-28),

(5) பண்பாடு கல்வி உரிமைகள்-Educational Rights) (Art.29-30),

ADVERTISEMENT

(6)  அரசியலமைப்பு சட்ட  நிவாரணம் பெறும் தீா்வு உரிமை (Right to Constitutional Remedies) (Art.32).

சமத்துவ உரிமைகள்

சமத்துவ உரிமைகள் ஷரத்து 14  முதல் 18 வரைஅமைந்துள்ளன. இவை அனைத்தும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன.

ஷரத்து 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்

ஷரத்து 14 (Equality before law & Equal protection by the law) – இந்தியப் பகுதிக்குள் வாழும் அனைத்துதியப் பகுதிமக்களும் சட்டத்தின் முன் சமமாக கருதப்படுவதுடன், சமமான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.

அதாவது சமூகத்தில் எந்த நிலையில் உள்ள மனிதனாக இருப்பினும், சட்டத்திற்கு கட்டுப்பவனே ஆவான். எனினும் குடியரசுத்தலைவர் மற்றும் மாநில ஆளுநர் ஆகிய இருவர் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.

சமமானவர்களுக்கிடையே சமத்துவம்’ என்பதையே ஷரத்து 14 உணர்த்துகிறது.

ஷரத்து 15

ஷரத்து 15 (Right against Discrimination) – (1) எந்த ஒரு குடிமகனையும், சாதி,  சமயம்,  இனம்,  பால், பிறப்பிடம் அல்லது இவற்றில் ஏதாவதொன்றின் காரணமாக மட்டுமே ஓரவஞசனையோடு நடத்தக் கூடாது, பாகுபாடு காட்டப்படக்கூடாது.

ADVERTISEMENT

எனினும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கென சிறப்புச் சட்டங்களை இயற்றுவதை இது தடைசெய்யாது. மேலும் சமூகத்தில் பின்தங்கியுள்ள வகுப்பினருக்கும்,  தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு தனிச்சலுகைகள் வழங்குவதையும் தடுக்க இயலாது.

ஷரத்து 16

ஷரத்து 16 (Equality in employment opportunity) அரசின் எந்த அலுவலகத்துக்கும் நியமிக்கப்படுவது மற்றும் பணிக்கு அமர்த்தப்படுவது, ஆகிய விஷயங்களில் குடிமக்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எனினும் பின்தங்கிய பிரிவினர்,  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்,  பெண்கள் ஆகியோருக்கு அரசுப் பணிகளில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கும் பொருட்டு சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் உண்டு.

ஷரத்து 17

தீண்டாமை ஒழிப்பு ஷரத்து Gabolition of Untouchability) ‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. எந்த வடிவிலும் அதைச் செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது. தீண்டாமையிலிருந்து எழும் எந்தத் தகுதிக் குறைவையும் செயல்படுத்துவது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனடிப்படையில் பாராளுமன்றம் 1955-ம் ஆண்டு தீண்டாமை (குற்றங்கள்) சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் தீண்டாமை செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு தண்டனைகளை வழங்குகிறது. இச்சட்டம் 1976-ல் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினால் தீண்டாமையை சமுதாயத்திலிருந்து முற்றிலும் நீக்கவழி செய்ததுடன்,  இச்சட்டத்தின் பெயரை மக்கள் உரிமைகள் (பாதுகாப்பு) சட்டம் (Civil Rights (Protection) Act) என்றும் மாற்றம் செய்தது.

ஷரத்து 18 – பட்டப் பெயர் ஒழிப்பு

குடிமகனுக்கோ அல்லது  குடிமகன் அல்லதாதவனுக்கோ, அரசு பட்டங்கள் (Abolition of Titles) வழங்குவதை ஷரத்து 18(1) தடை செய்கிறது. ஆனால் இராணுவம் மற்றும் கல்வியில் சிறப்புடையவா்களுக்கு பட்டங்களை அளிப்பதை இது தடை செய்யவில்லை.

ADVERTISEMENT

பல துறைகளில் ஈடுபட்டு, நற்பணி புரிந்ததால், ஒரு அரசு அங்கீகாரமாக வழங்கப்படும் பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, பரம்வீர்சக்ரா ஆகியவற்றைப் பெறுவதை ஷரத்து 18 தடைதடை செய்யவில்லை.

சுதந்திர உாிமை

சுதந்தர உாிமை (Right to Freedom) ஷரத்து 19 முதல் 22  வரை அமைந்துள்ளன. இவை அனைத்தும் சுதந்திரக் கோட்பாட்டை அடிப்டையாக கொண்டு அமைந்துள்ளது.

ஷரத்து 19 (1)  அடிப்படை சுதந்திர உாிமை

ஷரத்து 19 (1) குடிமக்களுக்கு முதலில் எழு வகையான சுதந்திரங்கைள அளித்திருந்தது. பின்னா்  1978-ஆம் ஆண்டின் 44-வது திருத்தச் சட்டத்தால் ஷரத்து 19. (1) (f)-ன் கீழான சொத்துரிமை சுதந்திரம் மட்டும் நீக்கப்பட்டு தற்பொழுது ஆறு சுதந்திர உரிமைகளாக உள்ளன. அவை பின்வருமாறு

1. ஷரத்து 19(1) (a) பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் பற்றி கூறுகிறது.

2. ஷரத்து 19 (1) (b) : ஆயுதங்களின்றி அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம்

3. ஷரத்து 19 (1) (c) : கழகங்கள், சங்கங்கள் மற்றும், கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்.

ADVERTISEMENT

4. ஷரத்து 19 (1) (d) : இந்தியா முழுவதும் சென்றுவருவதற்கான சுதந்திரம்

5. ஷரத்து 19(1) (e) : இந்தியாவிற்குள் எப்பகுதியிலும் தங்கி வாழும் உரிமை.

6. ஷரத்து 19 (1) (3) : எந்தத் தொழில், பணி மற்றும் வணிகம் அல்லது வியாபாரத்தைச் செய்யும் சுதந்திரம்.

7. ஷரத்து 19 (1) (a) –ல் உள்ள பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பது பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. அரசியலமைப்பில் பத்திரிகைச் சுதந்திரம் (Freedom of Press) குறித்து வேறு எங்கும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

8. ஷரத்து 19 (1) (f)-ஆனது சொத்துரிமையைப் பற்றிக் கூறியது. இதுசட்டத் திருத்தத்திற்கு பிறகு அடிப்படை உரிமை, உரிமை என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டு, ஷரத்து 300 (a)-ன்கீழ் சாதாரண சட்ட உரிமையாக சேர்க்கப்பட்டது.

அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, நீதி மன்ற அவமதிப்பு, அவதூறு கூறல், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமை.குற்றம் செய்யத் தூண்டுதல், பழங்குடியினர் நலன், பொதுமக்கள் நலன் ஆகிய காரணிகளின் பொருட்டு நியாயமான கட்டுப்பாடுகள் சுதந்திர உரிமைகள் மீது விதிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

352-ன் கீழ் அவசரகால நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் ஷரத்து 19 இயல்பாக, தாமாகவே செயலிழந்துவிடும் என்று ஷரத்து 358 குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின் 44-வது திருத்த சட்டத்தின் போது 1978-ல் ஒர் முக்கிய மாற்றம் இத்திருத்தத்தின்படி அடிப்படை ஷரத்து 20 மற்றும் 21 ஆகிய இரண்டையும் தேசிய நெருக்கடி நிலையின் போதும் கூட நிறுத்தி வைக்க இயலாது.

ஷரத்து 20 – தண்டனைக்கு எதிரான உடரிமை

ஷரத்து 20 (Protection in respect of conviction offences) – (1) குற்றம் என்று கருதப்படும் செயல் செய்யப்பட்ட போது நடைமுறையில் இருந்த சட்டத்தை மீறியதைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் எவரும் எந்தக் குற்றத்துக்காகவும் தண்டனையளிக்கப்படமாட்டார். குற்றம் புாியப்பட்டபோது நடைமுறையிலிருந்த சட்டத்தால் விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச தண்டனையைவிடக் கூடுதல் தண்டனை எவரும் ஆளாக்கப்படமட்டாா்.

(2) ஒரே குற்றத்துக்காக, எவரும் ஒரு முறைக்கு மேல் வழக்கு தொடரப்பட்டுத் தண்டிக்கப்பட மாட்டார்.

(3) எந்தக் குற்றத்துக்காகவும், குற்றம் தமக்கெதிராகச் சாட்சியம் வழங்குமாறு வற்புறுத்தப்பபுமாட்டார்.

ஷரத்து 21 வாழ்க்கை மற்றும் தனிப்பட்டசுதந்திரத்திற்கான பாதுகாப்பு உரிமை

1. ஷரத்து 21 (Protection of life and personal liberty) சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட  வழிமுறையைத் தவிர எவரது உயிரோ, தனிநபர் சுதந்திரமோ பறிக்கப்படமாட்டாது.

ADVERTISEMENT

2. ஷரத்து 19-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, இந்தியக் குடிமக்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். ஆனால் ஷரத்து 20, 21, 23-ன்கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை இந்திய குடிமக்கள் மட்டுமின்றி, குடிமக்கள் அல்லாதவா் அனுபவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *