இக்கட்டுரையில் TNPSC Group 4 Exam இல் Political Science பகுதியில் கேட்ககூடிய மிக முக்கிய குறிப்புகள் தரப்பட்டுள்ளது. TNPSC Group 4 Exam -க்கு தயாாிப்பில் உள்ளவா்களுக்கு உதவியாக அமையும் என்பது நிச்சியம்.
சட்டம்
அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் சமூக நியதி அல்லது ஒழுங்கு சட்டம் எனப்படும்.
அரசால் ஆக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள், உரிமைகளின் பாதுகாப்பு ஆகியவற்றின் தொகுப்பே சட்டம் என்று கிரீன் குறிப்பிடுகிறார்.
மேக் ஐவர் என்பவர் சட்டத்தை ஐந்து வகைகளாகப் பிரிக்கிறார். 1) இயற்கைச் சட்டம் 2) நேர்மறைச் சட்டம் 3) தேசியச் சட்டம் 4) சர்வதேச சட்டம் ஆகியவை அவற்றில் உள்ளடங்கியவை.
இயற்கைச் சட்டம்
இயற்கைச் சட்டம் என்பது எங்கும் இயற்றப்பட்ட சட்டமன்று. மனிதர்களால் உருவாக்கப்பட்டதுமன்று. அதன்பால் உள்ள மதிப்பினாலும், அச்சத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
நேர்மறைச் சட்டம்
நேர்மறைச் சட்டம் என்பது அரசியல் சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மக்கள் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடியதாகும்.
தேசியச் சட்டம்
நாட்டின் இறையாண்மை காட்டும் நெறிப்படி வகுக்கப்பட்டு மக்களின் தனிப்பட்ட மற்றும் பொதுவான உறவுமுறைகள் குறித்து இயற்றப்படும் சட்டம் தேசியச் சட்டமாகும்.
சர்வதேச சட்டம்
1780ல் ஜெரமிபெந்தம் என்ற சிந்தனையாளரால் உருவாக்கப்பட்டதே சர்வதேசச் சட்டம் ஆகும். உலகில் உள்ள நாடுகள் தங்களுக்குள் ஏற்படுகின்ற உறவுகள் மற்றும் அதனைச் சார்ந்த நடத்தை முறைகள் குறித்து பின்பற்றப்படுவது சர்வதேச சட்டம் ஆகும்.
சட்டத்தின் ஆட்சி
சட்டத்தின் ஆட்சி என்பது ஆங்கிலேய அரசியலமைப்பின் முக்கிய அம்சமாகும். இது பின்னர் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சட்டத்தின் அதிகாரத்தினால் மட்டுமின்றி வேறு எதனாலும் ஒரு மனிதன் தண்டிக்கப்படக் கூடாது என்பதே சட்டத்தின் ஆட்சி குறிப்பிடுவதாகும்.
நீதி
கருத்து மற்றும் சொல் அல்லது சேர்த்தல் அல்லது பொருத்துதல் என்று பொருள்படும் இலத்தீன் மொழிச் சொல்லான Justica என்ற சொல்லிலிருந்து நீதி அல்லது Justice பெறப்பட்டுள்ளது.
அரிஸ்டாட்டில் நீதியை மூன்று வகைகளாக் குறிப்பிடுகிறார். 1) தண்டனை நீதி 2) இழப்பீட்டு நீதி 3) மறுபகிர்மான நீதி ஆகியன.
நீதி குறித்த அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள், அவரது நூலான நிக்கோ மேக்கியன் காணப்படுகிறது.
சுதந்திரம்
சுதந்திரம் என்னும் சொல் லைபர் என்னும் லக்கின் மொழியில் வேர்ச்சொல்லாகக் கொண்ட அந்தி சொல் லிபர்ட்டி என்பதன் தமிழாக்கமாகும். இச்சொல் சுதந்திரம், விடுதலை என பல்வேறு கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றன.
நாம் செய்ய விழைபவற்றை செய்யும் ஆற்றலே சுதந்திரம் என்கிறார் மாண்டெஸ்கியூ.
கட்டுப்பாடில்லமையே சுதந்திரம் வரையறுக்கியார் பேராசிரியர் சீலி.
அரசின் சட்டங்களுக்குப் பணிவதே சுதந்திரமாகும் என்று தனிநபர் சுதந்திரக் கருத்தை ஏற்காத கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ், பிளாட்டோ ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
எவ்விதக் கட்டுப்பாடுன் இன்றி இருப்பதே சுதந்திரம் என்று ஹாப்ஸ் வரையறுக்கிறார்.
லாஸ்கி 1) தனி நபர் சுதந்திரம் 2) அரசியல் சுதந்திரம் 3) பொருளாதார சுதந்திரம் ஆகிய மூன்று வகைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
பிரெஞ்சு நாட்டில் உதயமான பொருள் முதல்வாதக் கோட்பாடு சுதந்திரம் ஆகும்.
சமத்துவம்
வாஸ்கி தனது நூலான அரசியலின் இலக்கணத்தில். பக்கவம் என்பது அடிப்படையில் சமன்படுத்தப்படும் செய்வகை என வரையறுத்துள்ளார்.
சாதி, சமயம், மொழி, இனம், வலிமை, பணம், பிறப்பிடம், தொழில், நம்பிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் காட்டப்படாமல் இருக்கும் நிலையே சமத்துவம் ஆகும்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட இக்கருத்து அமெரிக்க விடுதலைப் போரிலும் எதிரொலித்தது.
மக்களாட்சி
மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் ஆளப்படும் அரசாங்கமாகும் என்று ஆப்ரகாம் லிங்கன் வரையறுக்கிறார்.
மக்கள் என்று பொருள் படும் Demos மற்றும், ஆட்சியதிகாரம் என்று பொருள் தரும் Kratos என்ற கிரேக்க மொழிச் சொற்களிலிருந்து மக்களாட்சி (Democracy) என்னும் சொல் தோன்றியது.
மக்களாட்சியின் அடிப்படைக் கருத்தே அரசியல் சமத்துவம் ஆகும். மக்களாட்சி முறை மக்களின் இறைமைத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மக்களாட்சியை நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சி என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இக்கோட்பாட்டை சோசலிசவாதிகளும் சர்வாதிகாரிகளும் ஆதரித்தனர்.
மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் போன்ற சமதர்மவாதிகள் வலிமைக் கொள்கையை வலியுறுத்தி தங்களுடைய கருத்தினை வெளியிட்டனர்.
வலிமைக் கொள்கையை மிகவும் ஆதரித்த ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஓப்பன்ஹீமர் ஆவார்.
தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக், ரூசோ ஆகியோர் சமுதாய ஒப்பந்தக் கோட்பாட்டை (Social Contract Theory) வலியுறுத்தினர்.
கட்சி முறை
பல அரசியல் நிறுவனங்களின் தாய் என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தில் தான் கட்சிமுறை முதன் முதலில் தோன்றியது. கட்சி முறை இரண்டாம் சார்லஸ் மன்னரின் காலத்தில் தான் தோன்றியது.
இங்கிலாந்தின் அரசியலமைப்பு ஒரு பகுதி மட்டும் எழுதப்பட்டதாக விளங்குகிறது.
அமெரிக்க அரசியலமைப்பு
இங்கிலாந்திடமிருந்து 1785-ல் விடுதலை பெற்ற நாடு அமெரிக்கா ஆகும். 1789-ல் புதிய அரசியலமைப்பு அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியலமைப்பே மக்களாட்சியின் அஸ்திவாரம் என்று குறிப்பிடப்படுகிறது.
இறைவனின் உறைவிடத்தை இறைவன் என்கிறார். ஹாப்ஸ் முழுமையான முடியாட்சியை ஆதரிக்கிறார்.
தனிமனிதக் கோட்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தவர் தாமஸ் ஹாப்ஸ் ஆவார். இவர் கற்பனை, சிந்தனை, பகுத்தறிவு ஆகிய காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காரல் மார்க்ஸ்-க்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
தாமஸ் ஹாப்ஸ்
இறைமை பற்றிய கருத்தை அரசியல் அறிவுக்கு அளித்தவர் ஹாப்ஸ் ஆவார்.
மனிதன் சுயநலமானவன், இயற்கை, உடலாலும் அறிவாலும் மனிதர்களைச் சமமாகவே படைத்திருக்கிறது என்பது இவரது கருத்து.
அறிஞர் மனிதனைப் பற்றிய மாக்கியவல்லியின் கருத்துக்களை ஒத்திருக்கும் வகையில் தாமஸ் ஹாப்ஸ் தனது கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
தாமஸ் ஹாப்ஸ் தமது இயற்கைச் சட்டங்களை மனிதனின் ஆசைகள், பகுத்தறிவு அடிப்படையில் உருவாக்கினார். 19 இயற்கைச் சட்டங்கள் பற்றி தாமஸ் ஹாப்ஸ் தெளிவுபடுத்துகறார்.
தாமஸ் ஏற்படுத்திய லேவியாதன் என்பது ஒரு அறநெறி இறைவன். ஹாப்ஸ் இறைவனின் உறைவிடத்தை லெவியாதன் என்கிறார். இது ஒரு நபராகவோ அல்லது சில நபர்கள் அடங்கிய அமைப்பாகவோ இருக்கலாம். அவன் சமுதாய ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்டவன்.
முடியாட்சியை தாமஸ் ஹாப்ஸ் முழுமையான ஆதரிக்கிறார்.
ஹாப்சின் அரசு மனிதர்களால் ஆன ஒரு சமுதாயம் என்பதைக் காட்டிலும், அடிமைகளின் தோட்ட அல்லது காட்டு மிருகங்களின் கூட்டம்.
ஹாப்சின் கருத்துப்படி நல்ல அரசு என்பது ஆயுதத்தைப் பயன்படுத்தாமலேயே மக்கள் அரசுக்குப் பயப்படும் நிலை. இதை கத்தியின்றி வார்த்தைகளால் ஏற்படுத்தப்படும் கூட்டு ஒப்பந்தம் என்றார்.
தாமஸ் ஹாப்சின் முழுமையான வரம்பற்ற அரசு என்பது இறைமையான நவீன அரசுக்கு முன்னோடியாக அமைந்தது. தனிநபர் கோட்பாட்டுக்கு ஹாப்ஸ் முக்கியத்துவம் அளித்தார்.
பயன்கருது கோட்பாட்டின் தந்தை ஹாப்ஸ். பெந்தாமின் கோட்பாடு இவரது சித்தாந்தத்தையே சார்ந்தது.
கற்பனை, சிந்தனை, பகுத்தறிவு ஆகிய காரணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து காரல்மார்க்ஸ்க்கு முன்னோடியாக தாமஸ் ஹாப்ஸ் இருந்தார்.
இயற்கைச் சட்டங்கள் என்பது ஒரு புதிய அணுகுமுறை கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றை வற்புறுத்திய முதல் அரசியலறிஞர் தாமஸ் ஹாப்ஸ் ஆவார்.
இறைமை பற்றி கருத்தை அரசியல் அறிவியலுக்கு அளித்தவர் ஹாப்ஸ். ஹாப்சின் இறைமைக் கருத்தைத் தழுவியே ஆஸ்டின் தனது சட்ட இறைமைக் கருத்தை விளக்கினார்.
அரசின் முழுமையான இறைமை பற்றிய கோட்பாட்டை தெளிவாகக் கூறிய முதல் சிந்தனையாளர் ஹாப்ள் ஆவார்.
ஜான் லாக் சிந்தனைகள்
சுதந்திர (லிபரல்) கோட்பாட்டின் தந்தை என்று ஜான் லாக் குறிப்பிடப்படுகிறார்.
இயற்கை நிலையின் குறைபாடுகளிலிருந்து தப்புவதற்கும், போர் நிகழ்வதைத் தடுப்பதற்கும் மக்கள் சமுதாய ஒப்பந்தத்தை செய்து கொண்டனர் என்று ஜான் லாக்கின் சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு கூறுகிறது.
ஜான் லாக் இயற்கை உரிமைக்கோட்பாடு, புரட்சிக் கோட்பாடு, மக்கள் இறைமைக் கோட்பாடு, பயன்பாட்டுக் கோட்பாடு ஆகியவற்றைக் கூறியுள்ளார்.
ஜான் லாக்கின் கருத்துப்படி மனிதன் பகுத்தறிவுள்ள சமுதாயப் பிராணி, அவன் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வாழக்கூடியவன். அவனுக்கு இரக்கம், அன்பு, கனிவு ஆகிய குணங்கள் உண்டு. அவன் பிற மனிதர்களுடன் இணைந்து அமைதியாகவும், நல்லுறவுடனும் வாழக்கூடியவன்.
மக்கள் பொது சமுதாயமாக இணைந்து ஒரு அரசின் கீழ் தம்மைக் கொண்டு வருவதற்கு ஒரு பெரும் முக்கியமான உரிமை சொத்துரிமை என்பது லாக்கின் கருத்து.
இயற்கை நிலையின் குறைபாடுகளிலிருந்து தப்புவதற்கும், போர் நிகழ்வதைத் தடுப்பதற்கும் மக்கள் சமுதாய ஒப்பந்தத்தை செய்து கொண்டனர் என்று லாக் குறிப்பிடுகிறார்.
தனி நபர் சொத்துரிமையை மக்களின் ஒப்புதலின்றி சாங்கம் பறிக்க இயலாது என்றும் லாக் தமது ஒப்பந்தத்தில் குறிப்பிடுகிறார்.
மக்கள் அரசுக்காக மக்கள் நலனை அரசு மக்களுக்காக இருக்கிறது, மக்கள் அர இருக்கவில்லை . அரசின் நோக்கம் மக்கள் – உருவாக்குவதாகும் என்று லாக் அரசு பற்றி விவரிக்கி
அரசிற்கு எதிராக புரட்சி செய்யும் உரிமை மக்கள் உண்டு என்றும், அரசாங்கம் கலைக்கப்படலாம், அனாம் அரசு கலைக்கப்பட முடியாது என்றும் லாக் கருதுகிறார்
முதலில் சமுதாயமும், பிறகு அரசும் அதன் பின் அரசாங்கமும் ஏற்பட்டது என்ற தெளிவான கருத்தை வெளிப்படுத்தியவர் ஜான் லாக் ஆவார்.
ரூசோ சிந்தனைகள்
ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் என்ற நூல் (1792) பிரெஞ்சுப் புரட்சியின் வேத நூலாகக் கருதப்படுகிறது.
ரூசோவின் கருத்துப்படி மனிதன் இயற்கையில் நல்லவன், மனித வாழ்க்கையில் அவனது அடிப்படை உணர்வுகள் திரிந்து, கெட்டவனாகிறான்.
மனிதனை பண்பட்ட காட்டுமிராண்டி (Noble savage) என்று குறிப்பிடுகிறார். ரூசோவின் சமூக உடன்பாட்டுக் கொள்கையின் முக்கிய சாரம்சம் பொது விருப்பம் ஆகும்.
ஹாப்ஸ் குறிப்பிடுவதைப் போன்று மனிதன் சுயநலம் மிக்க காட்டுமிராண்டியல்ல. லாக் கூறுகின்றவாறு மனிதன் ஆண்டவனைப் போன்றவனுமல்ல. ரூசோவின் கணிப்பில் அவன் எளிமையானவனாக, சுதந்திர உரிமையை அனுபவிப்பவனாக காணப்படுகிறான்.
ரூசோவின் கருத்துப்படி மக்கள் அனைவரும் அரசியலில் பங்கேற்க வேண்டும். நாடு சிறியதாக இருக்க வேண்டும். ஆடம்பரம் இல்லாமல் மக்கள் வாழ வேண்டும்.
அடிமைத்தனத்தை விடக்கூடிய சுதந்திரம் தேவை என்று ரூசோ அமைதியுடன் ஆபத்துடன் கூடியது என்று குறிப்பிட்டார்.
ஒரு துண்டு நிலத்தைச் சுற்றி வேலியிட்டு என் நிலம் என எந்த மனிதன் அறிவித்தானோ அவன் 5 சீரியல் சமுதாயத்திற்கு வித்திட்டவன் என்று ரூசோ ஒப்பிடுகிறார். தனியார் சொத்துரிமை மனிதனால் உருவாக்கப்பட்டது.
பொது விருப்பம்
ரூசோ விவரிக்கும் ஒப்பந்தத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் தனது உரிமைகளை விட்டுக் கொடுத்தான். அதே சமயத்தில் சமுதாயத்தின் உறுப்பினர் என்ற முறையில் சமுதாயத்திற்கு விட்டுக்கொடுக்கப்பட்ட உரிமைகளில் அவனுக்குரிய பங்கையும் பெற்றுக் கொண்டான்.
ரூசோவின் சமூக உடன்பாட்டுக் கொள்கையின் சாராம்சம் பொது விருப்பம் ஆகும். பொது விருப்பத்தின் அடிப்படையில் அரசு அமைந்துள்ளதால் தனி மனிதன் பெறும் நன்மைகள் – உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு மற்றும் சமத்துவம் ஆகும்.
ரூசோவின் சமூக உடன்பாட்டுக் கொள்கை வரம்பிலா முடியாட்சியை ஒழித்து மக்களாட்சி அரசாங்கத்தை நிலைநாட்டுகிறது.
அமைதியுடன் கூடிய அடிமைத்தனததை ஆபத்துடன கூடிய சுதந்திரம் தேவை என்றார் ரூசோ.
மக்கள் அரசுக்காக மக்கள் நலனை அரசு மக்களுக்காக இருக்கிறது, மக்கள் அரசு இருக்கவில்லை . அரசின் நோக்கம் மக்கள் – உருவாக்குவதாகும் என்று லாக் அரசு பற்றி விவரிக்கிறாா்.
அரசிற்கு எதிராக புரட்சி செய்யும் உரிமை மக்கள் உண்டு என்றும், அரசாங்கம் கலைக்கப்படலாம், அனாம் அரசு கலைக்கப்பட முடியாது என்றும் லாக் கருதுகிறார்
முதலில் சமுதாயமும், பிறகு அரசும் அதன் பின் அரசாங்கமும் ஏற்பட்டது என்ற தெளிவான கருத்தை வெளிப்படுத்தியவர் ஜான் லாக் ஆவார்.
பிளாட்டோவின் கருத்துக்கள்
தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் பிளேட்டோ பிளேட்டோவின் ஆசிரியர் சாக்ரடீஸ். இவரது மாணவர் அரிஸ்டாட்டில் ஆவார்.
பிளேட்டோவின் நூல்களில் தலைசிறந்த நூல் குடியரசு ஆகும்.
சொத்துரிமை ஊழலுக்கு அடிப்படை என்பதால் அதனை ஒழிக்க வேண்டும் என்றார் பிளேட்டோ .
பிளோட்டோவின் கருத்துப்படி நிரந்தரமான மனைவிகள் இல்லை. எல்லா பெண்ணும் எல்லா ஆணுக்கும் பொது. 25 முதல் 55 வயதுடைய ஆண்க ளும், 20 முதல் 40 வயதுடைய பெண்களும் ஒரு வருடத்துக்கு சேர்த்து வைக்கப்படுவார்கள். அவர்கள், அரசுக்குத் தேவையான ஆளும் வர்க்கக் குழந்தைகளைப் பெற்றுத் தர வேண்டும்.
ஆளும் வர்க்கக் குழந்தைகள் அரசாங்கச் சொத்து. அவை செவிலியர்கள் மூலம் அரசு செலவில் வளர்க்கப்பட்டு சிறந்த கல்வியும் தரப்பட வேண்டும். இவை பிளேட்டோவின் கருத்துக்கள்.
அரிஸ்டாட்டில் தன் கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்த பள்ளி லைசியம் ஆகும். இவரது நூல் அரசியல் ஆகும். இவர் பிளேட்டோவின் சீடர் ஆவார்.
அரிஸ்டாட்டில் அரசுகளை 6 வகைகளாகப் பிரிக்கிறார். ஒரு தனிமனிதனின் ஆட்சி, அறத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அதுலே இலட்சிய அரசு என்று அரிஸ்டாட்டில் குறிப்பிடுகிறார்.
இளவரசர் என்ற நூலின் வாயிலாக மாக்கியவல்லி வெளியிட்ட கருத்துக்கள் பிளவுபட்ட இத்தாலியை ஒன்றாக்கும் முயற்சியின் பிரதிபலிப்பாகும்.
பிளாட்டோவின் அரசியல் சிந்தனைகளில் அவரின் சொந்தக் கருத்து தத்துவ ஞான அரசர் ஆவார்.
மாக்கியவல்லியின் கருத்துக்கள்
தற்கால அரசியல் சிந்தனைகளின் தந்தை மாக்கியவல்லி ஆவார். இவர் இத்தாலியில் பிறந்தவர்.
மாக்கியவல்லி மதச்சார்பற்ற அரசை ஆதரித்தார். இவர் அமைதிக்காலத்தில் குடியாட்சி, அபாய காலத்தில் முடியாட்சியையும் ஆதரித்தார்.
மனிதன் தன் தந்தையைக் கொன்றதை மறந்தாலும் மறப்பானே தவிர, தன் உடமைகளைக் கைப்பற்றியதை மறக்கவே மாட்டான். மனிதனுக்குப் பணமே பிரதானம், பந்தபாசம் இரண்டாம் பட்சமே என்று மாக்கியவல்லி குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியில் பிறந்த காரல் மார்க்ஸ் சோஷலிசத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். காரல் மார்க்ஸ் உருவாக்கிய கோட்பாடு விஞ்ஞான சமதர்மம் அல்லது பொதுவுடைமைத் தத்துவம்.
மூலதனம் (Das Capital) என்பது காரல் மார்க்சின் படைப்புக்களில் மிக முக்கியமானது. இது சமதர்மவாதிகளின் விவிலிய நூல் எனப்படுகிறது.
முக்கிய அரசியல் அறிவியல் மேற்கோள்கள்
இந்த முக்கிய மேற்கோள்களிலிருந்து உறுதியாக ஒரு வினா TNPSC Group 4 Exam -இல் வர வாய்ப்பு உள்ளது. படித்து மனதில் நிறுத்துக்கொள்ளவும்.
அரசியல் அறிவியல் அரசிலே துவங்கி அரசிலே முடிகிறது – கார்னர்.
காரல் மார்க்ஸ்
பொருளாதார சுதந்திரமற்ற அரசியல் சுதந்திரம் ஒர் மாயை – காரல் மார்க்ஸ்.
கம்யூனிச நாடுகளில் அரசு இருக்காது – காரல் மார்க்ஸ்.
உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள். உங்களை கட்டிப் பிணைத்திருக்கும் சங்கிலிகளைத் தவிர நீங்கள் இழக்கப்போவது வேறொன்றும் இல்லை – காரல் மார்க்ஸ்.
பொதுவுடைமை அமைப்பில் அரசற்ற சமுதாயம் அமையும் – காரல் மார்க்ஸ்.
பார்க்கர்
சமத்துவமும் சுதந்திரமும் எதிர்மறையானவை – பார்க்கர்.
சட்டம் என்பது தம் கீழ் உள்ளவர்கள் மீது செலுத்துகின்ற அதிகாரம் – பார்க்கர்.
இறையாண்மை என்ற கருத்தையே அரசியல் கோட்பாட்டிலிருந்து ஒழித்துவிட வேண்டும் – பார்க்கர்.
அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில் பற்றி உறுதியாக TNPSC Group 4 Exam -இல் வினா வர வாய்ப்பு உள்ளது.
மக்களாட்சி தீமை பயக்கும் அரசாங்கம் – அரிஸ்டாட்டில்.
குடும்பத்தின் விரிவே அரசு – அரிஸ்டாட்டில்.
மனிதன் ஓர் அரசியல் மிருகம் – அரிஸ்டாட்டில்.
அரசன் என்பவன் ஒரு சிங்கத்தைப் போன்றும், நரியைப் போன்றும் இருக்க வேண்டும். மாக்கியவல்லி.
அரசு என்பது அரசியல் சார்ந்த சங்கம் – எச்.ஜே.லாஸ்கி.
மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக செயல்படும் மக்களின் அரசாங்கம் – ஆபிரகாம் லிங்கன்.
ஜான் லாக்
மனிதன் ஒரு சமூக விலங்கு – ஜான் லாக்.
மக்களுடைய சமுதாயமே அரசுக்கு அடிப்படை – ஜான் லாக்.
மனிதன் பகுத்தறிவுள்ள சமுதாயப் பிராணி – ஜான் லாக்.
சட்டம் இல்லாத இடத்தில் சுதந்திரமும் இல்லை – ஜான் லாக்.
அரசை மாற்ற புரட்சி செய்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு – ஜான் லாக்.
உணர்ச்சிகள் பகுத்தறிவு செயற்கையானது. இயற்கையானது – ஹாப்ஸ்
எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இருப்பதே சுதந்திரம் ஹாப்ஸ்.
உரிமைகள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. இயற்கை தந்த பரிசு. – ஹாப்ஸ்.
நல்ல அரசு என்பது கத்தியின்றி வார்த்தைகளால் ஏற்படுத்தப்படுகிற கூட்டு ஒப்பந்தம் – ஹாப்ஸ்.
மனிதன் புனிதமான ஒரு காட்டுமிராண்டி – ரூசோ.
சொத்துரிமை சமத்துவத்திற்கு எதிரி – ரூசோ.
மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் எங்கும் கட்டுண்டு இருக்கிறான். – ரூசோ.
சட்டத்தால் ஆளப்படும் ஒவ்வொரு அரசும் குடியா ரூசோ .
தனி நபரின் நலனில் தான் நாட்டு நலன் உள்ளது – சர்க படேல்.
வாழ விரும்புபவன் சண்டையிட வேண்டும், சண்டையில் விரும்பாதவனுக்கு இவ்வுலகில் இடமில்லை – அடால்ஃப் ஹிட்ல ர்.
உலகப் பொய்களில் மிகப்பெரியது மக்களாட்சி அடால்ஃப் ஹிட்லர்.
எதிர்க்கட்சிகள் இல்லையேல் ஜனநாயகமும் இல்லை – ஐவரி ஜென்னிங்ஸ்.
நானே அரசு – 14ம் லூயி.
காந்தி இறந்துவிட்டார். ஆனால் காந்தியம் உயிரோடு உள்ளது – டாக்டர் இராதாகிருஷ்ணன்.
நாடென்ன செய்தது எனக்கு என்று கேட்காதே, நாட்டுக்கு நான் என்ன செய்தேன் என்று உன்னையே கேட்டுக்கொள் – ஜான் கென்னடி.
ஜூலியஸ் சீசர்
சென்றேன், கண்டேன், வென்றேன் – ஜூலியஸ் சீசர்.
உண்மை, அன்பு மற்றும் அமைதி வழிமுறையே ஓர் அதிகாரத்திற்கான மூலங்கள் – காந்தியடிகள்
நாட்டுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் இரத்தம், உழைப்பு இதைத்தவிர வேறு எதுவுமில்லை – வின்ஸ்ட ன் சர்ச்சில்.
அதிகாரம் துப்பாக்கி முனையிலிருந்து பிறக்கிறது மாசேதுங்.
இந்திய ஜனநாயகத்தினுடைய நெருக்கடி நிலை அதிகாரங்கள் அரசியல் சட்டத்தினுடைய மாபெரும் மோசடியாகும். – டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்.
அரசியலமைப்பு மூலம் குறைகளுக்கு தீர்வு காணும் உரிமையே இந்திய அரசியலமைப்பின் இதயம் – டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்.
எனது திட்டம் செயலே அன்றி சொல் அல்ல – முசோலினி.
புரட்சிக்கு மிகப்பெரிய காரணம் என்னவெனில் தேசங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கும்போது அரசியல் சட்டம் மாறாமல் இருப்பதாகும் – மெக்காலே.
அரசியல் வழிகாட்டு நெறிகள் என்பவை வங்கி விரும்பினால் மட்டுமே பணம் கொடுக்கத்தக்க காசோலை போன்றது. – கே.பி.ஷா.
அரசியல் அறிஞர்களின் சிறப்புக்கள்
சொத்துரிமையை மிகவும் வலியுறுத்தியவர் ஜான் லாக்
இரு சமூக ஒப்பபந்தத்தை எடுத்துக் கூறியவர் ஜான் லாக்.
உரிமைக் கோட்பாட்டை உருவாக்கியவர் ஜான் லாக்.
பயன் கருது கோட்பாட்டின் முன்னோடியாகக் கருதப்படுபவர் ஜான் லாக்.
சட்ட இறைமையை அரசியல் இறைமையிலிருந்து வேறுபடுத்திக் காட்டியவர் ஜான் லாக்.
தியாகிரகம் என்ற கருத்துப் படிவத்தை முதலில் மொழிந்தவர் காந்தியடிகள்.
சர்வோதயக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்திய காந்தியடிகள்.
சக்தி சமநிலை என்ற கருத்தை முதலில் மொழிக்க மார்கன்தன்.
அதிகார வர்க்கம் என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் வின்சண்ட்டி கோர்னி.
சட்ட ரீதியிலான இறைமையை வழங்கியவர் தான் ஆஸ்டின்.
உரிமைகள் பற்றிய சட்டக் கொள்கைகளை முன்மொழிந்தவர் ஜான் ஆஸ்டின். அரசின் தோற்றம் பற்றிய தாய்வழி மற்றும் தந்தை வழிக் கோட்பாட்டை ஆதரிப்பவர் ஹென்றி மெய்ன்.
அரசியல் அறிவியலின் தந்தை
அரசியல் அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில். இந்த கேள்வி அடிக்கடி TNPSC Group 4 Exam இல் கேட்கப்பட்டுள்ளது.
தற்கால பாணியில் அரசு என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் அரிஸ்டாட்டில்.
அடிமைத்துவத்தை ஆதரித்தவர் அரிஸ்டாட்டில்.
ஒப்பீட்டு முறையை அரசியல் அறிவியலில் புகுத்தியவர் அரிஸ்டாட்டில்.
அரசாங்கத்தை முறையாக வகைப்படுத்திய முதல் அறிஞர் அரிஸ்டாட்டில்.
இயற்கை, மனிதர்களை சமமாகப் படைத்தது என்று கூறுவது போலி வாதம் என்று குறிப்பிட்டவர் அரிஸ்டாட்டில்.
வலிமைக் கோட்பாட்டின்படி அரசு நடத்தியவர் ஹிட்லர்.
அரசு பற்றிய இலட்சியக் கொள்கையை உருவாக்கியவர் ஹிட்ல ர்.
அரசியலிலிருந்து ஒழுக்க நெறியையும், மதத்தையும் பிரித்தவர் மாக்கியவல்லி.
தனி நபர் உரிமையின் மிக உயர்ந்த ஆதரவாளர் ஜே.எஸ்.மில்.
திணிக்கப்பட்ட சுதந்திரம் என்ற கொள்கையைக் கூறியவர் ரூசோ .
நேரடி மக்களாட்சி முழுமையாக ஆதரித்தவர் ரூசோ.
மக்கள் சார்ந்த இறையாண்மை என்ற கொள்கையை முதன் முதலில் கூறியவர் ரூசோ.
மதத்தை இயற்கை மதம், தேசிய மதம், புரோகித மதம், சமுதாய மதம் என வகைப்படுத்தியவர் ரூசோ.
உணவு உழைப்புக் கோட்பாட்டுடன் தொடர்புடையவர் காரல் மார்க்ஸ்.
தனி மனித தத்துவத்தை பொருளாதார ரீதியில் ஆதரித்தவர் ஆடம்ஸ்மித்.
அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டை முதலில் உருவாக்கியவர் மாண்டெஸ்கியு.
பொதுத் துறை ஆட்சியியலின் தந்தை உட்ரோ வில்சன்.
பொதுத் துறை ஆட்சியியல் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் ஜார்ஜ் வாஷிங்டன்.
இலட்சிய வாத அரசின் தந்தை பிளாட்டோ
என்கையை ஆதரித்த அரசர் என்ற கொள்கையை தத்துவவாதி அரசியறிஞர் பிளாட்டோ .
ஆன்மாவிற்கு இசையும், உடலுக்குப் பயிற்சியும் தேன் என்று வலியுறுத்தியவர் பிளாட்டோ .
இங்கிலாந்தில் சட்டத்தின் ஆட்சி என்னும் கருக்க படிவத்தை மிகவும் வலியுறுத்தியவர் டைசி
தற்கால அரசு பற்றிய இலட்சியவாதக் கொள்கையை வலியுறுத்தியவர் ஹெகல்.
மகிழ்ச்சிக் கணக்கீட்டு முறை என்னும் அரசியல் கோட்பாட்டைத் தந்தவர் ஜெராமி பெந்தம்.
வடிவியலைக் கொண்டு அரசியலை மனோதத்துவத்தின் அடிப்படையிலும், மனோதத்துவத்தை பௌதீக அடிப்படையிலும் அமைத்தவர் தாமஸ் ஹாப்ஸ்.
மேம்பட்டவர்கள் என்ற கொள்கைகளைக் கூறியவர் மைக்கேல்ஸ் ஆவார்.
வலிமை மிக்கதே வாழும் எனற் கொள்கையை வகுத்தவர் டார்வின்.
கோட்பாடுடன் ஜனநாயகத்தின் பன்முகக் தொடர்புடையவர் பரெல்சன்.
அரசையும் சமுதாயத்தையும் வேறுபடுத்தி அறிய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தவர் மாக் ஐவா.
சுதந்திரத்தின் நேர்முறைக் கருத்திற்கு ஆதரவு அரசியல் சிந்தனையாளர் டி.எச்.கிரீன்.