TNPSC Group 4 Exam | Supreme Court | Important Notes

இந்த கட்டுரையில் TNPSC Group 4 Exam -க்கு அரசியல் அமைப்பு பாடப்பகுதியில்  Supreme Court தொடா்பான  Important Notes கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC Exam-க்கு உதவியாக இருக்கும் என்பது உறுதி. மேலும் இப்பகுதியினை திரும்பத் திரும்ப படிக்கும்போது தோ்வில் அதிக மதிப்பெண் எடுக்கலாம். ஒவ்வொரு மதிப்பெண்ணும் நம்மை நிச்சயம் வெற்றியடையச்செய்வும்.

உச்சநீதிமன்றம்

அரசியலமைப்பின் பகுதி-5-ல் ஷரத்து 124 முதல் 147 வரை ஒன்றிய நீதித்துறை அல்லது உச்சநீதிமன்றம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. உச்சநீதிமன்றம் டெல்லியில் தனது நிரந்தர அமைவிடத்தைக் கொண்டுள்ளது.

மற்ற கூட்டாட்சி நாடுகளில் உள்ளது போல, உதாரணமாக அமெரிக்காவில் உள்ளது போல், கூட்டாட்சி நீதிமன்றங்கள் என்றும், மாநில நீதிமன்றங்கள் என்றும் தனித்தனியான அதிகார அடுக்குமுறை இந்தியாவில் இல்லை.

இந்தியா முழுமைக்கும் ஒரே அதிகார அடுக்குமுறை கொண்ட ஒருங்கிணைந்த நீதித்துறையே உள்ளது. இந்த அதிகார அடுக்கின் தலைமை நீதிமன்றம் உச்சநீதிமன்றம் ஆகும்.

உண்மையான அரசியலமைப்பின்படி உச்சநீதி மன்றத்தில் (Supreme Court) ஒரு தலைமை நீதிபதியும், பிற 7 நீதிபதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

பாராளுமன்றம் சட்டமியற்றுவதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மேலும் நியமிக்க அரசியலமைப்பு வழி செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அதிகாரத்தின் அடிப்படையி பாராளுமன்றம், தற்போது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியும் (Chief Justice of India) மற்றும் பிற 30 நீதிபதிகளும் இடம் பெற சட்டமியற்றியுள்ளது.

எனவே, தற்போது, ஒரு தலைமை நீதிபதியும், பிற 30 நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் இடம் பெறுவர் (Art.124)

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளைக் கலந்தாலோசித்து செயல்படுகிறார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, ஜனாதிபதி எப்பொழுதும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் – தகுதிகள்

உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட கீழ்வரும் தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

ADVERTISEMENT

(1) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் 

(2) தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்

(3) தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ வழக்கறிஞராகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்

(4) ஜனாதிபதியின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதித்துறை அறிஞராக இருத்தல் வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் – பதவி

உச்சநீதிமன்ற நீதிபதி தமது பதவியை தமது 65 வயது நிறைவுற்றாலோ, அல்லது ஜனாதிபதிக்கு பதவி விலகல் (Resignation) கடிதம் அளிப்பதன் மூலமாகவோ, அல்லது பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களித்தவர்களின் மூன்றில் இரு பங்கு ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலோ பதவி நீக்கப்பெறலாம் அல்லது இழக்கலாம்.

சுப்ரீம் கோா்ட் தலைமை நீதிபதி பதவி காலியானாலோ, அல்லது அவர் பணியாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வேறு ஒருவரை பணியமர்த்த அதிகாரம் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் ஜனாதிபதியின் முன் அனுமதி பெற்று, தற்காலிகமாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிய அழைக்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம் பெற்றுள்ளார். அது போலவே போதிய நீதிபதிகள் இல்லாத சூழ்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஒருவரை, உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக (ad hoc Judge) தற்காலிகமாகப் பணியாற்றவும் வழி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்போ , குறிப்பிட்ட காலவரம்போ (term) வரையறுக்கப்படவில்லை .

உச்சநீதிமன்ற நீதிபதிகள் – ஊதியம்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரூ.1,00,000 மாத சம்பளமாகவும், பிற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூ.90,000 மாத சம்பளமாகவும் பெறுகின்றனர். மேலும் அரசின் வாடகையற்ற வீட்டு வசதியும் இவர்களுக்கு வழங்கப்படும்.

குற்ற விசாரணை முறை

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை குற்ற விசாரணை நடைமுறைப்படுத்த (Impeachment Process) கீழ்வரும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

ஜனாதிபதிக்கு அளிக்கத்தக்க, லோக்சபையாக இருப்பின் 100 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, சபாநாயகரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ, அல்லது இராஜ்ய சபையாக இருப்பின் 50 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, தலைவரால் (Chairman) ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ நிறைவேற்றப்பட வேண்டும்.

அத்தீர்மானம் மூன்று நபர்கள் கொண்ட ஒரு குழுவினால் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் ஒரு நீதித்துறை வல்லுநர்) விசாரிக்கப்படும்.

ADVERTISEMENT

அக்குழு, குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நீதிபதியின் திறமையின்மை (incapacity) அல்லது தவறான நடத்தையை (misbehavior) கண்டறிந்து உண்மையெனக் கண்டால், சபைக்குப் பரிந்துரைத்து அறிக்கை அளிப்பர்.

அதன்பின்ன அத் தீர்மானம் குழுவின் அறிக்கையுடன், சபையில் புகுத்தப்படும். அத்தீர்மானம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்போரில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டால், பின்னர் ஜனாதிபதியின்ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

இதன் பின்னர் ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவி நீக்கத்தை அறிவிப்பார்.

உச்சநீதிமன்ற தனித்தியங்கும் தன்மை

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக (Independency) செயல்படுவதற்கென கீழ்வரும் செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல் படுத்துகிறது.

உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்கும் போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஆலோசித்தே, ஜனாதிபதி செயல்பட வேண்டும்

ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை , தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஓய்வுக் காலத்திற்குப் பிறகு இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்ற அரசியலமைப்பு தடை விதிக்கிறது. எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல்

நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதன் படிகள் அனைத்தும் இந்திய தொகுப்பு நிதியத்தின் (Consolidated Fund of India). செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு தேவையில்லை.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை (Financial Emergency) தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட இயலாது.

உச்சநீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின், குற்ற விசாரணை தீர்மானம் கொண்டுவரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தங்களை அவமதித்த குற்றத்திற்காக எந்த நபரையும் தண்டிக்க அதிகாரம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றம் தனது பணியாளர்களை தாமே நியமனம் செய்து கொள்ளலாம். அவர்களின் பணிகளை வரையறை செய்யலாம்.

பாராளுமன்றம் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பையும், அதிகாரத்தையும் நீட்டிக்கலாமேயொழிய அதனைக் கட்டுப்படுத்த முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு

The jurisdiction of the Supreme Court are five-fold. 1) Original 2) Writ 3) Appellate 4) Advisory and 5) Revisory jurisdictions.

அதாவது இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாகத் திகழும் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை (1) உண்மையான அதிகார வரம்பு (அ) முதல் வழக்கு அதிகார வரம்பு (2) பேராணை நீதி வரம்பு (3) மேல் முறையீட்டு அதிகார வரம்பு (4) ஆலோசனை வழங்கும் நீதிவரம்பு (5) நீதி மறு ஆய்வு அதிகார வரம்பு ஆகிய தலைப்புக்களில் காண்போம்.

உச்சநீதிமன்றத்தின் மூல அதிகார வரம்பு ஓ உச்சநீதிமன்றத்தின் மூல வழக்கு விசாரணை (Original jurisdiction) வரம்பு என்பது பொதுவாக கூட்டாட்சி குறித்த விஷயங்களைக் குறித்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் அதிகாரமாகும்.

அ) இந்திய அரசாங்கத்திற்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்,

ADVERTISEMENT

ஆ) ஒரு புறத்தில் இந்திய அரசும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் மறுபுறத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையேயான தகராறுகள்,

இ ) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகள் ஆகிய மூன்று விதமான வழக்குகளிலும் மூல விசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கே உண்டு. மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர்த்தகராறுகள், நிதிக்கமிஷனின் ஆய்வுக்கு விடப்பட்ட விஷயங்கள், ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே சில வகை செலவுகள், ஓய்வூதியங்கள் போன்றவற்றை சரி செய்து கொள்வது போன்ற சில விஷயங்களிலும் உச்சநீதிமன்றத்தின் மூல வழக்கு விசாரணை வரம்பு பொருந்தாது.

உச்சநீதிமன்றத்தின் பேராணை நீதிவரம்பு

Art.32-ன்படி தனி நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்பான வழக்குகளிலும் மூல விசாரணை வரம்பு உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. அந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உச்சநீதிமன்றம் பல்வேறு நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கலாம்.

அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நேரிடையாகவே ஒருவர் உச்சநீதி மன்றத்தினை அணுகலாம் என்பது நமது அரசியலமைப்பில் உள்ள தனிச் சிறப்பாகும்.

உச்சநீதிமன்றத்தின் இந்த பேராணை வழங்கும் அதிகாரத்தைப் பொருத்தவரை, ஒரு தனிநபர் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி அடிப்படை உரிமைகளுக்கான தீர்வினைப் பெற இயல்கிறது என்ற நோக்கின் அடிப்படையில், இது மூல அதிகாரமாக கருதப்படுகிறது. ஆனால் மூல அதிகாரம் என்பது முற்றிலும் கூட்டாட்சி குறித்த விஷயங்கள் குறித்ததே ஆகும்.

மேல் முறையீட்டு நீதி வரம்பு ஓ உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு விசாரணை வரம்பைப் பொருத்தவரை மூன்று தலைப்புக்களில் காணப்படுகின்றன.

ADVERTISEMENT

(1) அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் (Constitutional), உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஓர் உயர்நீதிமன்றம் இறுதித தீர்ப்பளிக்கும்போது, ஏதேனும் ஓர் வழக்கு அரசியலமைப்புக்கு விளக்கமுரைப்பதில் அனைத்து தரப்பிறக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட வினா சம்பந்தப்பட்டுள்ளது என்றும், அதனை உச்சநீதிமன்றமே தீர்த்து வைக்க முடியும் என்றும் உயர்நீதிமன்றம் ஒரு சான்றளித்தால், அவ்வழக்கு பற்றி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

(2) உரிமையியல் (Civil) – உரிமையியல் வழக்குகளில் உயர்நீதிமன்றம், அவ்வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தக்கதென்று சான்றளித்தால், உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்குகள் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

(3) குற்றவியல் (Criminal) – குற்றவியல் வழக்குகளில் அ) ஓர் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் விடுதலைத் தீர்ப்பை மாற்றி அவருக்கு மரண தண்டணை அளித்தாலும்,

ஆ) உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குக் கீழ் நிலையில் உள்ள ஏதேனும் நீதிமன்றத்திலிருக்கும் வழக்கைத் தனக்கு மாற்றிக் கொண்டு, அந்த வழக்கின் விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளித்தாலும், அந்தத்தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

இ) ஓர் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு உகந்த வழக்கு என்று அந்த உயர்நீதிமன்றம் சான்றளித்தால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

ஆலோசனை வழங்கும் நீதி வரம்பு

Article 143-ன்படி ஆலோசனை வழங்கும் நீதிவரம்பை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது. பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் தொடர்பான வினாவுக்கு உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுவது உசிதமானது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்டறியலாம்.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படிப்பட்ட செய்தி உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டால் நீதிமன்றமும் தேவையான விசாரணைகளை நடத்திய பின்னர் தனது கருத்துக்களைக் குடியரசுத் தலைவருக்கு அறிவிக்கும்.

அவ்வாறு உச்சநீதிமன்றம் அளிக்கின்ற கருத்து, ஆலோசனை வழங்குவது போன்றதால், குடியரசுத் தலைவர் விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளலாம்., ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.

 நீதி மறு ஆய்வு வரம்பு

உச்சநீதிமன்றம் தன்னால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்புரையை மறு ஆய்வு செய்வதற்குரிய அதிகாரத்தை Art.137 வழங்குகிறது.

அதாவது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புரைகள், ஆணைகள் போன்றவை அதன் கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்றாலும், அவை உச்சநீதிமன்றத்தினைக் கட்டுப்படுத்தாது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

நீதிமன்ற அவமதிப்பு

உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாக (court of record) திகழ்கிறது.

நீதிமன்றத்தைப் பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும் நல்லெண்ணத்துடன் செய்யப்படும் விமர்சனங்கள், பொதுநலன் கருதி, நீதித்துறையின் செயல்பாடு குறித்துச் சொல்லப்படும் நியாயமான விமர்சனம் ஆகியவை தவிர பிறவகைகளில் அது குறித்த விமர்சனங்களுக்காக, உச்சநீதிமன்றம் தண்டனைகளை விதிக்கலாம்.

ADVERTISEMENT

நீதிமன்ற அவமதிப்பு என்பது சிவில் மற்றும் கிரிமினல் ஆகிய வழக்குகளுக்கும் பொருந்தும். சிவில் வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு என்பது, நீதிமன்றத்தின் தீர்ப்புக்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காமை ஆகும்.

அரசியலமைப்பின் பாதுகாவலன்

உச்சநீதிமன்றத்தின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுவது, அது அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல்படுவதே ஆகும்.

மேலும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் பணியிலும், அது இந்தியக் குடிமக்களின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.

பொது நல வழக்கு

உச்சநீதிமன்றம் தக்கதென்று கருதும் விஷயங்களையும், வழக்குகளையும் தாமே முன்வந்து பொதுநல வழக்கு (Public Interest Litigation) என்ற அடிப்படையில், எடுத்துக் கொண்டு உரிய தீர்வுகளை மக்களுக்கு வழங்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. இதனால் சமுதாய சமநீதி உறுதி செய்யப்படுகிறது.

பொதுவாக, பாதிக்கப்பட்டவர் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கிட முடியும்.

ஆனால் பாதிக்கப்படாதவர் கூட பொதுநலன் கருதி அடிப்படை உரிமைகள் மீறலுக்காக நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்கக் கோரி ஷரத்து 32-இன்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கே, பொது நலனுக்கான வழக்கு எனப்படுகிறது.

ADVERTISEMENT

ஷரத்து 226-ன்படி உயர்நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம்.

பொது நல வழக்கு என்னும் கருத்து முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தோன்றியது.

பி.என்.பகவதி மற்றும் வி.ஆர்.கிருஷ்ண ய்யர் ஆகிய நீதிபதிகளே முதன் முதலாக பொது நல வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதித்தவர்கள்.

உச்சநீதிமன்றத்தின் இதர அதிகாரங்கள்

உச்சநீதிமன்றம் தமக்குத் தேவைப்படும் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை ஜனாதிபதியின் அனுமதியின்பேரில், தாமே உருவாக்கிக் கொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அதிகாரிகளும், பிற அலுவலர்களும் தலைமை நீதிபதியால் அல்லது அவர் சொற்படி பிற நீதிபதியால், அல்லது அதிகாரியால் நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து ஏதேனும் வழக்குகள் தோன்றினால் அதனை தீர்க்கும் அதிகாரமும், உச்சநீதிமன்றம் வசமே உள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசுத் தேர்வுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள், அதன் தலைவர் ஆகியோரை நீக்க வேண்டுமென்று, ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்யும் அதிகாரத்தையும் உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *