TNPSC GROUP 4 EXAM preparation INDIAN POLITICS FREE materials

அரசியல் நிர்ணய சபை அமைச்சரவை டிசம்பர் 6, 1946 இல்  நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய பணி இந்தியாவிற்கான அரசியல் அமைப்பை உருவாக்குவதே ஆகும்.

இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்

அரசியலமைப்பு என்பது அரசியல் முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளை உடைய தொகுப்பாகும். இதன் அடிப்படையிலேயே நாட்டு மக்கள் ஆளப்படுகின்றனா்.

இந்தியா பேட்ரியாட் என்னும் நூலில் 1927 இல் நூலில் 1927-ல் முதன் முதலில் அரசியலமைப்பு குறித்து எம்.என்.ராய் ஒருகட்டுரைஎழுதினார். எனவே அரசியலமைப்புக் கருத்தை முன்னிலைப்படுத்தியவர் என கருதப்படுகிறது.

அரசியல் நிர்ணய சபை

1. டிசம்பர் 9, 1946 முற்பகல் 11.00 மணியளவில் டெல்லியில் தனது முதல்கூட்டத்தைக் கூட்டியது.

2. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக (Interim President) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினரான சச்சிதானந்த சின்ஹா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. டிசம்பர் 11, 1946-ல் நடை பெற்ற தேர்தல் மூலம், தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் தேர்வுசெய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இவரே அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் காலம் வரை தலைவராக செயல்பாட்பல்பட்டார்.

4. டி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் பி.என். முகர்ஜி ஆகிய இருவரும் அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவர்களாகவும் (Vice Presidents) செயல்பட்டனர். 

5. அரசியல் சட்டங்களை உருவாக்குவதில் தோன்றிய பல்வேறு அரசியல் சிக்கல்களைப் பற்றி ஆராய அரசியல் நிர்ணய சபை 13 முக்கிய நிரந்தர குழுக்களை நியமித்தது. ஒவ்வொரு தலைவர்களின் கீழ் இயங்க ஆரம்பித்தன.

தற்காலிக நடைமுறைக்குழுகள்

1. மொத்தம் 22 குழுக்களை அமைத்தாலும் அவற்றில் 10 குழுக்கள் தற்காலிக நடைமுறைக் குழுக்கள்.

2. உதாரணமாக கே.எம்.முன்ஷி தலைமையிலான கண்காணிப்புக் குழு, டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைமையிலான நடைமுறைகள் குழு போன்றவை ஆகும். 

நிரந்தரகுழுக்கள்

1. ஜவகர்லால் நேரு தலைமையிலான ஒன்றிய அரசியலமைப்பு குழு  (Union Constitution Committee), சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான மாகாண அரசியலமைப்பு குழு (Provincial Constitution Committee), சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் குழு (Fundamental Rights &Minorities Committee), டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான எழுதுவரைவுக் குழு (Drafting Committee), ஜே. பி. கிருபளானி தலைமையிலான தேசியக் கொடி குழு ஆகியன சில முக்கிய நிரந்தரகுழுக்கள் ஆகும்.

ADVERTISEMENT

2. நிர்ண இந்திய அரசியலமைப்பு சபை,  முழு இறைமை பெற்ற சுதந்திர அமைப்பாக ஆகஸ்ட் 15, 1947-ல்கூடியது.

4. மௌண்ட் பேட்டன் திட்டத்தின்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கென்று தனி அரசியல் நிர்ணய சபை ஜுன்3, 1947-ல் தோற்றுவிக்கப்பட்டது.

5. இதன் விளைவாக இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது.

6. 299 உறுப்பினர்களில்,  229 உறுப்பினர்கள் மாகாணங்களில் இருந்தும்,  70 உறுப்பினர்கள் சுதேச அரசுகளிலிருந்தும் வந்தவர்களாவர்.

7. பல்வேறு விவாதக் கூட்டத் தொடர்களின் முடிவில், 284 உறுப்பினர்கள் வந்திருந்து, வாக்களித்து நவம்பர் 26, 1949-ல் இந்திய அரசியலமைப்பை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதாக கையொப்பமிட்டனர்.

முக்கிய உறுப்பினர்கள்

ஜவகர்லால் நேரு,  டாக்டர் இராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டாக்டர் அம்பேத்கர்,  சரத் சந்திரபோஸ், ஆசஃப் அலி, சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட்,  டாக்டர் இராதாகிருஷ்ணன் நிர்ணய சபையின் சில முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.

ADVERTISEMENT

1. அரசியலமைப்பு பணிகள் நிறைவுற்ற நவம்பர் 26,1949-ம் நாள் சட்ட தினம் (Law Day) என்றும், ஆகஸ்ட் 15, 1947 ஆம் நாள் நியமன நாள் (Appointment Day) என்றும் குறிப்பிடப்படுகிறது.

2. நவம்பர் 26, 1949 முதல் அரசியலமைப்பின் முக்கியப்பகுதிகளான குடியுரிமை, தேர்தல்கள், இடைக்கால, பாராளுமன்றம் போன்றவை உடனடியாக நடைமுறைக்கு வந்தன.

4. அரசியலமைப்பின் எஞ்சிய பகுதிகள் அனைத்தும், ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதுடன் ஜனவாி 26, 1950-ம் நாள் குடியரசு தினம் என்றும், அரசியலமைப்பு தொடக்க தினம் (Commencement Day) என்றும் குறிப்பிடப்பட்டது.

5. நவம்பர் 27, 1949 முதல் மார்ச் 1952 வரை இந்திய அரசியல் நிர்ணய சபை தற்காலிக பாராளுமன்றமாக மாற்றம் பெற்று செயல்பட்டது.

6. அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் பணி  2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் நடைபெற்றது. மேலும் 11 திட்டமிட்ட கூட்டத் தொடர்களில், அரசியலமைப்புச் சட்டம் பற்றிக் கலந்துரையாட 114 நாட்கள் ஆயிற்று.

7. அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டம், அதாவது 11-வது கூட்டம் நவம்பர் 14, 1949 முதல் நவம்பர் 26, 1949 வரை நடைபெற்றது. அனைவரும் கையொப்பமிட ஒரு இறுதி நாளாக 24.01.1950 தேர்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

எழுது வரைவுக்குழு

எழுது வரைவுக்குழு (Drafting Committee) ஆகஸ்ட் 29, 1947-ல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நியமிக்கப்பட்டது.

இக்குழுவில் என். கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யர், கே. எம். முன்ஷி, முகமது சாதுல்லா, பி.எல்.மிட்டர், டி.பி.கைதான் ஆகிய பிற 6 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

1948-ல் டி.பி.கைதான் மறைவின் காரணமாக டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்களும், பி. எல். மிட்டருக்குப் பதிலாக என்.மாதவராவ் அவர்களும் வரைவுக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.

அரசியல் நிர்ணய கபையின் சட்ட ஆலோசகராக (Legal Advisor) பி. என்.ராவ் (B.N. Rao) அவர்களும், அரசியல் நிர்ணய சபையின் முதன்மை வரைவாளராக (Principal Draftsman.) எஸ்.என்.முகர்ஜி என்பவரும் பணியாற்றினர்.

இந்திய அரசியலமைப்பு முதன் முதலாக ஆங்கில மொழியிலேயே வரைவு செய்யப்பட்டது.

ஜனவரி 24, 1950ல் நடைபெற்ற நிர்ணய-சபையின் இறுதிக் கூட்டத்தின் போது இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக, டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ADVERTISEMENT

இந்தியாவின் தேசிய சின்னங்கள்

நமது தேசிய கீதமான “ஜன கன மன” பாடல் ஜனவரி 24, 1950 ல் இந்திய அரசியல் நிர்ணயசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வங்காள மொழியில் உள்ள இந்தப் பாடல் 5 பத்திகளை கொண்டுள்ளது. இதில் முதல் பத்தியில் உள்ள பாடல் மட்டுமே தேசிய கீதமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

1911 டிசம்பர் 27-ம் நாள் கல்கத்தாவில் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் முதன் முறையாகப் பாடப்பட்டது. தேசிய கீதத்தைப்பாடும், இசைக்கும் கால அளவு 52 வினாடிகள் ஆகும். நமது தேசியக் கொடியின் வடிவம் ஜுலை 22, 1947-அரசியல் நிர்ணய சபையால்  ஏற்றுக் கொள்ளப்பட்டது. அங்கீகாரத்திற்குப் பிறகு முதன் முறையாக தேசியக் கொடி ஆகஸ்ட் 15, 1947-ல் ஏற்றப்பட்டது.

தேசியக்கொடி

செவ்வக வடிவமைப்பைக் கொண்ட நமது தேசியக்கொடி மேற்பகுதியில் காவி ( வீரம், தியாகம்) நிறத்தையும், நடுவில் வெண்மை (உண்மை) நிறத்தையும், கீழே கரும்பச்சை (செழிப்பு, பசுமை, நம்பிக்கை) கொண்டுள்ளது. அதன் நீள அகல விகிதம் 3 : 2 ஆகும்.

கொடியின் வெண்மை நிறப்பட்டையில் கருநீல நிறத் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது. நமது தேசியச் சின்னமாக (இலச்சினை) அசோகரின் சாரநாத் தூணில் மேற்பகுதியாக உள்ள நான்முக சிங்க அமைப்பும், அதன் கீழ்ப்பட்டையில் அசோகசக்கரத்துடன் தேவநாகரி எழுத்தில் ‘சத்யமேவஜெயதே’ (வாய்மையே வெல்லும்) என்று பொறிக்கப்பட்ட  அமைப்பு ஜனவரி 26, 1950ல் இந்திய அரசின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இச்சிங்கங்களின் கீழே உள்ள அடித்தட்டு பீடத்தில் வரிசையில் இடது புறம் குதிரையும் (ஆற்றல்,வேகம்) மத்தியில் சக்கரமும் (தர்மம், அறவழி) வலப்புறம் காளையும் (உழைப்பு உறுதி) உள்ளன.

இந்தியாவின் தேசிய நாட்காட்டி சகா ஆண்டு அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி மார்ச் 22,  1957 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

வந்தே மாதரம் என தொடங்கும் பக்தி பாடல் பக்கிம் சந்திர சட்டர்ஜி  அவா்களால் சமஸ்கிருத மொழியில் இயற்றிய பாடல் 1950 இல் இந்திய அரசால் இந்தியாவின் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இப்பாடல் இக்கவிஞர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் 1882 இல் வெளியிடப்பட்டது.

1896 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இப்பாடல் முதல் முறையாக ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் பாடப்பட்டது.

இந்தியாவின் தேசிய மலர் தாமரை மலரும், தேசிய கனியாக மாம்பழமும், கங்கை நதி நமது தேசிய நதியாகவும், தேசிய மரமாக ஆலமரமும், புலி நமது தேசிய விலங்காக, ஹாக்கி நமது தேசிய விளையாட்டாகவும், தேசிய நீர்வாழ் விலங்காக நதிகளில் வாழ்விலும் டால்பின் மீனும், மயில் நமது தேசியப் பறவையாகும் உள்ளன.

இந்திய அரசியலமைப்பு

1. இந்திய அரசியல் சட்டம் 1935 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் அரசாங்க சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் நிர்ணய சபையை முஸ்லீம் லீக் நிராகரித்தது.

2. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக முக்கிய காரணமான டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்றும், அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பி என்றும் குறிப்பிடப்படுகிறார்.

ADVERTISEMENT

3. இந்திய அரசியமைப்பின் எழுத்து வரைவுக்குழு இங்கிலாந்து,  அமெரிக்கா,  அயர்லாந்து,  ரஷ்யா, பிரான்ஸ்,  சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 60 நாடுகளில் அரசியலமைப்பு சட்டத்தை ஆய்ந்து படித்து அவற்றில் உள்ள தகுதிமிக்க சிறப்புக் கூறுகளை ஏற்றுக்கொண்டது.

4. இந்திய அரசியலமைப்பு பெரும்பாலும் இங்கிலாந்து நாட்டு அரசியல் அமைப்பை ஒத்துக் காணப்படுகிறது.

5. மேலும் 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் பெரும்பான்மையான அம்சங்களும் நமது அரசியல் அமைப்பில் காணப்படுகின்றன.

6. நமது இந்திய அரசின் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட போது 395 சத்துக்களையும், 22 பகுதிகளையும், 8 அட்டவணைகளையும் கொண்டிருந்தது.

7. எனினும் கால வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றம் அடைந்து தற்போது சுமார் 450 ஷரத்துக்களின் 25 பகுதிகளையும் 12 அட்டவணைகளையும் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *