TNPSC Group 4, 2, II-A Exam|Local Government |Notes

ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தங்கள் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், தம் தல விவகாரங்களைக் கவனிக்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓரளவு அதிகாரமிக்க ஓர் அமைப்பை உள்ளாட்சி அரசாங்க அமைப்பு (Local Self Government) எனலாம்.

உள்ளாட்சி அரசாங்கம்

முற்கால இந்தியாவில் சோழர் கால குடவோலை முறையில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டதை உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிகிறோம்.

எனினும் தற்போதைய உள்ளாட்சி முறை ஆங்கிலேயர் காலத்தில் தான் தோன்றி வளர்ந்தது. 

1687-ல் இந்தியாவின் முதல் உள்ளாட்சி சென்னை மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டது. உள்ளாட்சியில் முக்கிய சீர்திருத்தங்களை ரிப்பன் பிரபு மேற்கொண்டார். எனவே தான் ஸ்தலசுய ஆட்சியின் தந்தை என ரிப்பன் பிரபு அழைக்கப்படுகிறார்.

இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 40 ன்படி மாநில அரசு கிராமப் பஞ்சாயத்துக்களை ஏற்படுத்தி அவை சுய ஆட்சி அமைப்புகளாக இயங்குவதற்குத் தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

பல்வந்த் ராய் மேத்தா குழு

ஷரத்து 40-ஐக் கருத்தளவில் மட்டும் விட்டுவிடாமல், செயல்முறைப்படுத்தும் பொருட்டு ஜனவரி 1957-ல் பல்வந்த் ராய் (Balwant Ray Mehta) என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இக்குழு இந்திய அரசின் சமுதாய மேம்பாட்டுத் (Community Development Program) திட்ட ம் (1952), தேசிய விரிவாக்கப் பணித்திட்டம் (National Extension Service) – (1953) ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக இந்திய அரசால் நியமிக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 1957-ல் சமர்ப்பித்தது.

பல்வந்த்ராய் மேத்தாவின் அறிக்கை பஞ்சாயத்து இராஜ்ய முறையின் மகா சாசனம் என்று புகழாரம் சூட்டப்பட்ட, அந்த அறிக்கையில் மக்களாட்சி அதிகாரப் பரவல் (Democratic Decentralization) என்னும் திட்டத்தைப் பரிந்துரைத்தது. இதுவே பஞ்சாயத்து ராஜ் (Panchayat Raj) எனப்படுகிறது.

மூன்று அடுக்கு

இதன்படி, (1) மூன்று அடுக்கு கொண்ட (Three Tier System) கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அதாவது (அ) கிராம மட்டத்தில் (Village Level) கிராம பஞ்சாயத்தும் (Village Panchayat),

(ஆ) வட்டார (Block Level) அளவில் பஞ்சாயத்து ஒன்றியமும் (Panchayat Union/Panchayat Samiti),

(இ) மாவட்ட அளவில் (District Level) மாவட்ட பஞ்சாயத்தும் (District Panchayat/Zilla Parishad) இடம் பெற வேண்டும் என மூன்று அடுக்கு முறையை பல்வந்த் ராய் மேத்தா குழு பரிந்துரை செய்தது.

இக்குழுவின் மேற்கண்ட பரிந்துரைகள் ஜனவரி 1958-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் பஞ்சாயத்து இராஜ்ய அமைப்பு இந்தியாவில் முதன் முதலாக இராஜஸ்தானில் அக்டோபர் 2, 1959-ல் இந்தியப் பிரதமர் பண்டித நேரு அவர்களால் நகோர் மாவட்டத்தில் (Nagor District) அறிமுகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பஞ்சாயத்து இராஜ்ய முறை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாநிலம் இராஜஸ்தான். இரண்டாவது மாநிலம் ஆந்திரப் பிரதேசம் (1959).

இக்கால கட்டத்தில் மூன்றடுக்கு முறைக்கு விதி விலக்காக தமிழ்நாடு இரண்டு அடுக்கு முறையையும், மேற்கு வங்காளம் நான்கு அடுக்கு முறையையும் கொண்ட பஞ்சாயத்து அமைப்பு முறையைக் கொண்டிருந்தன.

மேத்தா அறிக்கை தலைசிறந்த அறிக்கை (Master Blue Print) எனவும், பஞ்சாயத்து ராஜ்யத்தின் பைபிள் (Bible of Panchayat Raj) எனவும் அழைக்கப்பட்டது.

அசோக் மேத்தா குழு

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாட்டை ஆய்வு செய்யவும், அவற்றை வலிமைப்படுத்தவும் உரிய ஆலோசனைகளை வழங்கவும் 1977-ல் அசோக் மேத்தா (Ashok Mehta) என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தன் அறிக்கையை 1978-ல் சமர்ப்பித்தது.

இக்குழு மூன்று அடுக்கு முறைக்குப் பதிலாக இரண்டு அடுக்கு முறை (Two Tier System) பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், 15,000 (மகல் 20,000 வரை மக்கள் தொகை கொண்ட மண்டல் பஞ்சாயத்து (Mandal Panchayat) மற்றும் மாவட்டப் பஞ்சாயத்து (District Panchayat) என்னும் 2 அடுக்குகள் இருத்தல் வேண்டும் என்றும் பரிந்துரை வழங்கியது.

மேற்கூறிய இரு குழுக்களின் அறிக்கைகள், பஞ்சாயத்து இராஜ்ய அமைப்புக்களின் மூலமாக ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவத்தை வழங்கின.

ADVERTISEMENT

எனினும் ஜனதா கட்சி தலைமையிலான அரசு பதவியிழந்ததும் அசோக் மேத்தா குழு அறிக்கையின் பரிந்துரைகள் முறையாக செயல்படுத்தப்படாததால், பஞ்சாயத்து ராஜ்ய முறை முடங்கிக் கிடந்தது.

எனினும் அசோக் மேத்தா குழு அறிக்கை அடிப்படையில் கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களும் தம் மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பு முறையை சீரமைத்துக் கொண்டன.

73-வது திருத்தச் சட்டம்

73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி அரசியலமைப்பில் புதிதாக பஞ்சாயத்துக்கள் (Panchayat Raj) என்ற தலைப்பில் பகுதி 9 (Part IX) இணைக்கப்பட்டது. இப்பகுதியில் Art.243 முதல் Art.243-0 வரை அமைந்துள்ளன.

பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 29 வகையான அதிகாரத் தலைப்புக்களைக் குறிப்பிடும் (Art.243 G) 11-வது அட்டவணையும் இச்சட்டக்காலத்தில் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.

விவசாயம், சிறு நீர்ப்பாசன வகைகள், நில மேம்பாடு மற்றும் மண் வளப் பாதுகாப்பு, மீன்வளம், சமூக நலக் காடுகள், கிராமப்புற வீட்டு வசதி, குடிநீர் வசதி, முறைசாரா சக்தி மூலங்கள், நூலகங்கள், ஏழ்மை ஒழிப்புத் திட்டங்கள், துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உட்பட்ட கல்வி, அங்காடி வீதிகள் மற்றும் சந்தைகள், குடும்ப நலம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், சமூக நலம், பொது விநியோக முறை போன்றவை 11-ம் அட்டவணையில் உள்ள சில முக்கியத் தலைப்புக்கள்.

முக்கிய அம்சம்

மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு முறை 73-வது திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும். கிராம அளவில், ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் என மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறையை இது தோற்றுவிக்கிறது.

ADVERTISEMENT

ஒவ்வொரு அடுக்கிற்கும் உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாவட்ட மற்றும் ஒன்றியப் பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் மட்டும் மறைமுகமாக அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்பின் 11-வது அட்டவணையில் உள்ள 29 தலைப்புக்களின் மீதும் முழுமையான அதிகாரம் பஞ்சாயத்து அமைப்புக்கள் பெற்றுள்ளன.

73-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் இருந்து ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து, மேகாலயா, மிசோராம் ஆகியவை விதி விலக்கு பெற்றுள்ளன.

தமிழக உள்ளாட்சி அமைப்பு

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அரசு முறை, தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ன்படி ஏற்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின்படி தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் அமைப்பானது 1994-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.

73-வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசாங்கம், தமிழ்நாடு பஞ்சாயத்து இராஜ் சட்டம் 1994-ஐ இயற்றியது. இச்சட்டம் ஏப்ரல் 22, 1994-ல் நடைமுறைக்கு வந்தது.

ADVERTISEMENT

தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம், 1994-ன்படி தமிழகத்தில் மூன்றடுக்கு (Three-Tier System) பஞ்சாயத்து அமைப்பு முறை பின்பற்றப்படுகிறது.

அவை (1) கிராம பஞ்சாயத்துக்கள் (2) ஊராட்சி ஒன்றியங்கள்  (3) மாவட்ட பஞ்சாயத்துக்கள்

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அமைப்புக்களும் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இயங்குகின்றன.

1994-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து இராஜ் சட்டம் 2006-ல் திருத்தப்பட்டது.

கிராம சபை

பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடித்தளமாக இருப்பது கிராம (Gram Sabha) சபை. இது சராசரியாக 500 மக்கள் தொகை கொண்ட ஒன்று அல்லது இரண்டு கிராமங்களைத் தனது அதிகார எல்லைக்குள் கொண்டிருக்கும்.

கிராம சபையானது நேரடி மக்களாட்சியின் அடிப்படை அலகாகத் திகழ்கிறது.

ADVERTISEMENT

கிராம சபை கூட்டம் ஓர் ஆண்டில் குறைந்தது நான்கு முறையாவது கூட்டப்பட வேண்டும். தற்போது ஜனவரி 26 (குடியரசுத் தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய தினங்களில் கூடுகிறது.

Village Panchayat

பஞ்சாயத்து இராஜ்ய அதிகாரத்தின் முதல் அடுக்காகவும், முக்கிய அலகாகவும் கிராமப் பஞ்சாயத்து (Village Panchayat) உள்ள து.

குறைந்தபட்சம் 500 மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊரக பஞ்சாயத்து அமைக்கப்படுகிறது.

வில்லேஜ் பஞ்சாயத்து உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 5 ஆகவும், அதிகபட்ச எண்ணிக்கை 15 ஆகவும் அதன் மக்கள் தொகையை பொறுத்து அமைந்திருக்கும்.

18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவரும் பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர். 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட முடியும்.

கிராம பஞ்சாயத்தின் பதவிக்காலமும், அதன் உறுப்பினர்களின் பதவிக்காலமும் 5 ஆண்டுகள். முன்கூட்டியே பஞ்சாயத்து அமைப்பு கலைக்கப்படுமானால், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT

ஊரக பஞ்சாயத்து ஒரு தலைவரால் (Panchayat President) தலைமையேற்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்தின் தலைவர் கிராம சபையின் உறுப்பினர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

கிராம சபையின் மூன்றில் ஒரு பங்கினரின் பெரும்பான்மையுடன் அவருக்கு எதிரான வன நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றம் படுமானால் அவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படலாம்.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ஒரு துணைத் தலைவரும் இருக்கிறார். கிராம பஞ்சாயத்தின் பதவிக்காலமும் அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலமும் 5 ஆண்டுகள்.

கிராம பஞ்சாயத்தின் தலைவர் கிராம சபை மற்றும் கிராம பஞ்சாயத்துக் கூட்டங்களை கூட்டி, தலைமை வகிக்கிறார். கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பினைப் பெற்றுள்ளார். தனது பஞ்சாயத்தின் பிரதிநிதியாக ஊராட்சி ஒன்றிய கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

வேளாண்மை முன்னேற்றம், குடிசைத் தொழில்கள் வளர்ச்சி, குடிநீர் விநியோகம் செய்தல், துப்புரவு மற்றும் வடிகாலுக்கு ஏற்பாடு செய்தல், கிராம சாலைகளிலும் பொது இடங்களிலும் விளக்குகள் அமைத்தல், இடுகாடு மற்றும் சுடுகாடுகளை பராமரித்தல், பிறப்பு-இறப்பு-திருமணங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தல், கிராம பஞ்சாயத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்ற கட்டாயப் பணிகளை கிராமப் பஞ்சாயத்து செய்தாக வேண்டும்.

கால்நடை மீதான வரி, கட்டிட வரி, பஞ்சாயத்து சட்டங்களை மீறிய காரணத்தால் விதிக்கப்படும் அபராதங்கள், கிராம சொத்துக்களில் இருந்து பெறப்படும் வாடகை, மாட்டு வண்டிகள் போன்ற ஊர்திகள் மீதான வரி, அரசின் உதவி மானியங்கள் போன்றவையே கிராம பஞ்சாயத்துக்கான வருவாய் ஆதாரங்கள் ஆகும்.

ADVERTISEMENT

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்தின் ஒரு செயல் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) இருக்கிறார். அவர் மாநில அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படுகிறார்.

கிராம பஞ்சாயத்தின் தீர்மானங்களை கிராம நிர்வாக அலுவலர் செயல்படுத்துகிறார். கிராம பஞ்சாயத்தின் அன்றாட நிர்வாகத்தையும் இவரே கவனித்துக் கொள்கிறார்.

தமிழகத்தில் மொத்தம் 12618 (மார்ச் 2015 வரை) கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 394 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துக்களைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். இதில் 35 கிராமப் பஞ்சாயத்துக்கள் மட்டுமே உள்ளன.

பஞ்சாயத்து சமிதி / ஊராட்சி ஒன்றியம்

பஞ்சாய்த்து இராஜ்ஜிய அமைப்பில் நடு அடுக்காக (Middle Layer) பஞ்சாயத்து சமிதி (Panchayat Samiti/Panchayat Union) அமைந்துள்ள து. இது பஞ்சாயத்து யூனியன் அல்லது ஊராட்சி ஒன்றியம் என அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

(1) ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union) உள்ள வட்டாரங்களில் இருந்து நேரசை நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

(2) ஊராட்சி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்.

(3) ஊராட்சி ஒன்றியத்தின் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள்.

(4) ஊராட்சி ஒன்றிய மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு என்ற வகையில் கிராம பஞ்சாயத்து அவையில் இடம் பெறுகின்றனர்.

ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் பிரமுகர், பிரதன் என பல மாநிலங்களில் பெயரிடப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அவர் சேர்மன் (தலைவர்) (Panchayat Union Chairman) என்று அழைக்கப்படுகிறார். துணைத் தலைவர் ஒருவரும் உள்ளார்.

பஞ்சாயத்து சமிதியின் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளும் காலியாக இருக்குமானால், வருவாய்க் கோட்ட அலுவர் (Revenue Divisional Officer) பஞ்சாயத்து சமிதியின் அலுவல் சார்பான உறுப்பினராகவும் தலைவராகவும் இருப்பார்.

ADVERTISEMENT

ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் அரசியல் ரீதியான செயலாக்கத் தலைவர் ஆவார். ஊராட்சி ஒன்றியத்தின் கூட்டங்களைக் கூட்டித் தலைமை வகிக்கிறார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் (Block Development Officer) மற்றும் அவரது பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை தலைவர் செலுத்துகிறார்.

கிராம சாலைகளைத் தவிர்த்து, ஒன்றிய எல்லைக்குள் சாலைகள் அமைத்து பராமரித்தல், குடிநீர் வழங்கல், வடிகால் குழாய்களைப் பராமரித்தல், ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவுதல், நூலகங்களை நிறுவுதல், ஆரம்பப் பள்ளிகளுக்கான ஏற்பாடு செய்தல், தாய் சேய் நல இல்லங்கள் நிறுவுதல், இளைஞர் அமைப்புக்கள் நிறுவுதல் போன்ற பொறுப்புக்களை ஊராட்சி ஒன்றியம் பெற்றுள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர்

ஊராட்சி ஒன்றியம் தனது பணிகளை ஆற்றும் பொருட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (Block Development Officer) தலைமையிலான நிர்வாக இயந்திரம் ஒன்றைப் பெற்றுள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு வட்டத்தின் நிர்வாகியாக உள்ளார். இவரே ஊராட்சி ஒன்றியத்தின் செயலாளரும், தலைமை செயலாக்க அதிகாரியும் ஆவார்.

தமிழகத்தில் மொத்தம் 385 (மார்ச் 2015 வரை) ஊராட்சி ஒன்றியங்கள் (Panchayat Union) (Block) உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

ADVERTISEMENT

நம் தமிழ்நாட்டில் அதிக ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். இதில் 22 ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் ஊராட்சி ஒன்றியங்களைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். இதில் 4 ஊராட்சி ஒன்றியங்கள் மட்டுமே உள்ளன.

மாவட்ட பஞ்சாயத்து

மாவட்ட பஞ்சாயத்து (District Panchayat) என்பது பஞ்சாயத்து இராஜ்ஜிய அமைப்பில் மேல் அடுக்காக அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் (Revenue District) ஒரு மாவட்ட பஞ்சாயத்து அமைக்கப்படுகிறது. இது மாவட்டம் முழுவதும் அதிகார எல்லையைக் கொண்டுள்ளது.

எனினும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகள், நகரப் பஞ்சாயத்து, தொழில் நகரியம், இராணுவக்கூட வாரியம் போன்றவை இதனுள் அடங்காது.

மாவட்ட பஞ்சாயத்து பின்வருவோரை உறுப்பினர் களாகக் கொண்டுள்ளது, அவை

ADVERTISEMENT

(அ) மாவட்ட பஞ்சாயத்து வட்டங்களில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள். மாவட்ட பஞ்சாயத்து எல்லையில் உள்ள ஏறத்தாழ 50,000 மக்களுக்கென ஒவ்வொரு வட்டமும் அமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வட்டத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட பஞ்சாயத்தின் உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.

(ஆ) மாவட்ட பஞ்சாயத்து பகுதியின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்.

(இ) மாவட்டத்திற்குள் ஓர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களின் அவை உறுப்பினர்.

(ஈ) பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்களில் இருந்து ஐந்தில் ஒரு பங்கினர் மாவட்டப் பஞ்சாயத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்தும் ஒரு தலை வரையும், துணைத் தலைவரையும் பெற்றுள்ளது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் களால், தமக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பர்.

ADVERTISEMENT

மாவட்ட பஞ்சாயத்தின் அரசியல் ரீதியான தலைமை நிர்வாக அதன் தலைவர் (District Panchayat Chairman) ஆவார். மாவட்ட பஞ்சாயத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, நடத்துகிறார்.

வரிகள்

தொழில் வர்த்தகம் மீது விதிக்கப்படும் வரி, பொது கேளிக்கைகள் மற்றும் நீர் மீது விதிக்கப்படும் வரி, பயணிகள் மீதான வரி, மாநில அரசாங்கம் வழங்கும் மானியங்கள் மற்றும் கடன்கள், திட்டம் மற்றும் வட்டாரம் குறித்த மானியங்கள், இறைச்சி விற்பனையாளர்கள் செலுத்தும் உரிமக் கட்டணம், சந்தையில் விற்பனையாகும் கால்நடைகள் மற்றும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி, பஞ்சாயத்து சொத்து ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம் ஆகியவையே மாவட்டப் பஞ்சாயத்தின் வருவாய் ஆதாரங்கள் ஆகும்.

ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்திற்கும், ஒரு தலைமை அலுவலர் அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாட்டில் இந்த அலுவலர் கிராம வளர்ச்சி இணை இயக்குனருக்குண்டான நிலையை வகிக்கிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு

தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் (Municipal Corporations) உள்ளன. சென்னை , ஈரோடு, சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, மதுரை, தூத்துக்கடி, திருநெல்வேலி, வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகியவை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளாகும்.

இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநகராட்சி சென்னை மாநகராட்சி (1687).

நம் மாநிலம், தமிழகத்தில் உள்ள நகராட்சிகளின் (Municipalities) எண்ணிக்கை 125.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்துக்களின் (Town Panchayat) எண்ணிக்கை 561.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகள்

அரசியலமைப்பின் Art.243- உள்ளாட்சி அமைப்புக்களில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத இடங்கள் (33 சதவீதம்) பெண்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 2009-ல் ஒப்புதல் அளித்தது. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் பீகார் (2005) ஆகும்.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-5 இயற்றப்பட்டாலும், தமிழகத்தில் அக்டோபர் 1996ல் தான் முதல் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற்றது.

தமிழக அரசு பஞ்சாயத்து அமைப்புக்களின் அதிகாரங்கள்

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வ செய்ய முதல் உயர்மட்டக் குழு 1996-ல் எல்.சி.ஜெயின் தலைமையிலும், இரண்டாவது உயர்மட்டக் குழு 1997-ல் கோ.சி.மணி தலைமையிலும், மூன்றாவது உயர்மட்டக் குழு 2007-ல் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் அமைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவே நவம்பர் 1-ம் தேதியை உள்ளாட்சி அமைப்பு நாளாக கொண்டாட பரிந்துரை செய்தது.

ADVERTISEMENT

தமிழக அரசு நவம்பர் 1-ம் தேதியை உள்ளாட்சி அமைப்புகள் நாளாக கொண்டாட, அக்டோபர் 26, 2007-ல் அரசாணை வெளியிட்டது. சிறந்த ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் உத்தமர் காந்தி ஊராட்சி விருது 2006-07-ம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *