TNPSC Group.2 Exam Polity important notes

இக்கட்டுரையில் TNPSC Group 2 Exam-ல் இந்திய அரசியலமைப்பு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கும் வகையில் சுருக்கமாகவும், முக்கிய ஷரத்துக்கள் விடுபடாமலும் எழுதப்பட்டுள்ளது.

இந்திய அட்டர்னி ஜெனரல்

அரசியலமைப்பின் ஷரத்து 76 Attorney General of India நியமனம் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்திய அரசின் முதன்மை மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர் ஆவார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளை உடைய ஒருவரை, ஷரத்து 76-ன்படி ஜனாதிபதி நியமிக்கிறார்.

இவா், ஜனாதிபதி விரும்பும் வரை பதவி வகிப்பார். அரசாங்கத்திற்கு சட்ட சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனை வழங்குவதும், சட்ட சம்பந்தமாக ஜனாதிபதியால் இடப்படும் பிற பணிகளைச் செய்வதுமே இந்திய அட்டர்னி ஜெனரலின் பணியாகும்.

இவா், இந்திய நீதிமன்றங்கள் அனைத்திலும் பங்கேற்கவும், பார்வையாளராக இருக்கவும் உரிமை பெற்றவர்.

மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலுமே, கூட்டத் தொடரின்போது சபை நடவடிக்கைகளில் பங்கு கொண்டு பேசவோ, பாராளுமன்றக் குழுக்களில் கலந்து கொள்ளவோ உரிமை பெற்றவர் ஆவார்.

ADVERTISEMENT

எனினும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உரிமை இல்லை. இந்திய அரசு மற்றும் இந்திய மாநிலங்களுக்கான நீதிமன்றப் பிரதிநிதியாக விளங்குகிறார். அரசுக்கு எதிரான வழக்குகள் தவிர பிற வழக்குகளில் அட்டர்னி ஜெனரல் விரும்பினால் ஆஜராகலாம்

அதாவது தனியே வழக்காடலாம். எனவே அட்டர்னி ஜெனரலுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உச்சநீதிமன்ற நீதிபதியின் சம்பளத்திற்கு இணையால் பணிக்கூலி வழங்கப்படுகிறார்.

அட்டர்னி ஜெனரலுக்கு உதவி செய்ய , சொலிசிட்டர் ஜெனரல்களும், 4 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களும் நியமிக்கப்படுவர்.

பாராளுமன்ற உறுப்பினருக்கு இணையான சலுகைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அட்டர்னி ஜெனரல் பெற்றுள்ளார்.

இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியவர் எம்.சி.செட்டல்வாட்.

தற்போது (நவம்பர் 2017) இந்திய அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றுபவர் கே.கே. வேணுகோபால்.

ADVERTISEMENT

இந்திய கணக்கு தணிக்கைஅலுவலர்

இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 148 இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் (Comptroller & Auditor General of India) நியமனம் பற்றிக் குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின்படி, இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியை ஜனாதிபதியே நியமிக்கிறார்.

தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் பற்றி ஷரத்து 148 முதல் 151 வரை குறிப்பிடப்படுகிறது.

இவர் 65 வயது வரை, அலலது 6 ஆண்டுகள் வ. இவற்றில் எது முன்னரே நடைமுறை வருகிறதோ, அதுவரை பதவியில் இருப்பார். பொதுப்பணத்தின் (Guardian of Public Purse) பாதுகாவலன் எனப்படுகிறார்.

இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர். தற்போதைய (நவம்பர் 2017) மாதச் சம்பளம் ரூ.90,000. அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிக்க இணையான சம்பளத்தை இவர் பெறுவதற்கு அரசியலமைப்பு வழி செய்துள்ளது.

இந்திய கணக்கு தணிக்கை அலுவலரது பதவிக்காலத்திற்குப் பின்னர் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கீழ் எந்தப் பதவியையும் வகிக்க இயலாது.

ADVERTISEMENT

ஒன்றிய மற்றும் மாநிலங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதும், இந்திய தொகுப்பு நிதியம் மற்றும் மாநில தொகுப்பு நிதியம் ஆகியவற்றிலிருந்து – பாராளுமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செலவழிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதுமே இவரது கடமையாகும்.

முன்னாள் இந்திய கணக்கு மற்றும் தணிக்கை அலுவலரான வினோத் ராய் அவர்களின் ஆய்வறிக்கையின் மூலமாகவே 2-ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான ஊழல் போன்றவை வெளிக் கொண்டுவரப்பட்டது.

பாராளுமன்ற குழுக்கள்

நம் அரசியலமைப்பு பாராளுமன்றக் குழுக்களைப் பற்றி எந்த ஒரு பகுதியிலும் தனியே குறிப்பிடவில்லை . எனினும் பல ஷரத்துக்களில் இது பற்றிப் பரவலாகக் குறிப்பாக பட்டுள்ளன.

பாராளுமன்ற குழுக்கள்

பாராளுமன்ற குழுக்கள் பொதுவாக முழுமையான விவாதம் நடத்தி, உரிய துறை சார்ந்த அறிஞர்களின் விளக்கங்களையும் பெற்று குழு அல்லது மசோதா தொடர்பாக விரிவாக பரிசீலிக்கும் பணியை மேற்கொள்கின்றன.

இத்தகைய குழுக்கள் (1) பொதுவான குழுக்கள் (2) சட்டமியற்றுதல் சார்ந்த குழுக்கள் (3) நிதிக்குழுக்கள் என 3 வகைப்படுகின்றன.

பொதுவாக பாராளுமன்ற குழுக்கள் சபாநாயகர் அல்லது அவைத்தலைவரால் (Speaker or Chairman) நியமிக்கப்படத்தக்கதாகவோ, அல்லது சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவதாகவோ இருக்கிறது.

ADVERTISEMENT

சபாநாயகர் அல்லது அவைத்தலைவரின் கீழ் செயல்படுகிறது. சபையிலோ அல்லது சபாநாயகர் அல்லது அவைத் தலைவரிமோ தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது.

மொத்தத்தில் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், 45 நிலைப்புக் குழுக்கள் (Standing Committees) உள்ள ன.

பாராளுமன்றத்தின் சில முக்கியக் குழுக்கள்

மதிப்பீட்டுக் குழு

1950 ஆம் ஆண்டு ஜான் மத்தாய் அவர்களின் பரிந்துரையின்பேரில் மதிப்பீட்டுக் குழு தோற்றுவிக்கப்பட்டது. இக்குழுவின் 30 உறுப்பினர்களும் ஒற்றை மாற்று வாக்கு அடிப்படையில் லோக்சபையில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

மதிப்பீட்டுக் குழுவில் (Estimates Committee) மொத்தம் 30 உறுப்பினர்கள் இருப்பர். அனைத்து உறுப்பினர்களும்

லோக்சபையைச் சார்ந்தவர்களாவர். ஒவ்வொரு ஆண்டும் இதன் உறுப்பினர்கள் லோக் சபையிலிருந்து தேர்வு செய்யப்படுவர்.

அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த உரிய ஆலோசனைகளை அளிக்கும் குழு மதிப்பீட்டுக் குழுவாகும். மேலும் இக்குழு ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஆய்ந்தறிந்து, தேவையான ஆலோசனைகளையும், பொருளாதார நிலையை மேம்படுத்தும் உத்திகளையும், நிர்வாக மேம்பாட்டுக்கான வழிமுறைகளையும் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மதிப்பீட்டுக் குழுவின் தலைவரை சபாநாயகர், அதன் உறுப்பினர்களிலிருந்து நிமிக்கிறார்.

ஒரு அமைச்சர் இக்குழுவின் உறுப்பினராக செயலாற்ற இயலாது. ஒருவேளை இக்குழுவின் உறுப்பினர் ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட நேர்ந்தால், அவர் அமைச்சராகப் பதவியேற்றவுடன், அவரது மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் பதவி நீக்கப் பெறும்.

இக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும்.

பொதுக் கணக்குக் குழு

பொதுக் கணக்குக் குழுவே (Public Accounts Committee) மிகப்பழமையான நிதிக் குழு ஆகும். இக்குழுவில் மொத்தம் 22 உறுப்பினர்கள், அதாவது லோக் சபையிலிருந்து 15 உறுப்பினர்களும், இராஜ்ய சபையிலிருந்து 7 உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

 1967-ம் ஆண்டு முதல் மரபு அடிப்படையில் எதிர்க்கட்சியின் தலைவரே இக்கமலின் தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார்.

மதிப்பீட்டுக் குழுவும், பொதுக் கணக்குக் குழுவும் இரட்டைச் சகோதரர்களாக கருதப்படுவதுண்டு. காரணம் பொதுக் கணக்குக் குழுவும், மதிப்பீட்டுக் குழுவும் ஒன்றையொன்று சார்ந்தே பணி புரிகின்றன.

ADVERTISEMENT

மதிப்பீட்டுக் குழு அரசின் பொதுச் செலவுகளைப் பற்றி ஆராய்கிறது. ஆனால் பொதுக் கணக்குக் குழு அத்தகைய பொதுச் செலவுகளின் கணக்குகளைப் – பற்றி ஆய்கிறது.

அதாவது பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று செலவு செய்யப்பட்ட பணம் குறிப்பிட்ட அந்தச் செயலுக்காகத் தான் செலவு செய்யப்பட்டதா என்பது குறித்தும் ஆய்கிறது.

மேலும் பொதுக் கணக்குக் குழு இந்திய தணிக்கை அலுவலரின் (Comptroller and Auditor-General) அறிக்கை குறித்தும் ஆய்வு செய்கிறது.

பொதுத் துறை நிறுவனங்கள் மீதான குழு

கிருஷ்ண மேனன் குழுவின் பரிந்துரையின்படி 1964-ல் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குழு தோற்றுவிக்கப்பட்டது.

பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குழுவில் (Public Undertakings Committee) மொத்தம் 22 உறுப்பினர்கள், அதாவது லோக் சபையிலிருந்து, 15 உறுப்பினர்களும், இராஜ்ய சபையிலிருந்து 7 உறுப்பினர்களும் இடம் பெறுவர்.

பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குழுவின் தலைவரை லோக்சபை உறுப்பினர்களிலிருந்து, சபாநாயகரே நியமிக்கிறார்.

ADVERTISEMENT

பொதுத் துறை நிறுவனங்களின் அறிக்கைகள், கணக்குகள், இந்திய தணிக்கை அலம் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான அறிக் ஆகியவற்றைக் ஆய்வு செய்வதே இக்குமன் முதன்மைப் பணி.

மாநில ஆளுநர் & நிர்வாகம்

இந்தியாவின் அரசியலமைப்பு மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் தனியே நிர்வாக முறையை அளித்து வரு கூட்டாட்சி அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பகுதி-6 மாநிலங்கள் பற்றிக் (ஷரத்து 152 முதல் ஷரத்து 237 வரை) குறிப்பிடுகிறது.

மாநில ஆளுநர்

அரசியலமைப்பின் பகுதி-6, ஜம்மு-காஷ்மீர் தவிர இதர அனைத்து இந்திய மாநிலங்களும் ஒரே மாதிரியான நிர்வாக அமைப்பைப் பெற்றுள்ளன என்று குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின் ஷரத்து 370-ன்படி ஜம்முகாஷ்மீர் மாநிலம் அதற்கென்று தனி அரசியலமைப்பைப் பெற்றுள்ளது நினைவு கூறத்தக்கது.

பொதுவாக மத்திய அரசு பெற்றுள்ள பாராளுமன்ற அரசாங்க முறையே எல்லா மாநிலங்களிலும் உள்ளது.

இந்தியாவில் தற்போது 29 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும், புதுடெல்லி என்ற தேசிய தலைநகரப் பகுதியும் உள்ளன. மாநில நிர்வாகம் என்பது மாநில ஆளுநர், முதலமைச்சர், அமைச்சரவை மற்றும் மாநில தலைமை வழக்குரைஞர் போன்றோர் உடையதாகும்.

ADVERTISEMENT

அரச யலமைப்பின்படி, மாநில நரவாகத்த மா தலைவராக மாநில ஆளுநரே திகழ்கிறார். ஆளுநர் மாநில நிர்வாகத்தின் பெயரளவு தலைவராக விளங்குகிறார்.

குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் (Executive Head of a State) ஆளுநர் ஆவார். மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.

மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி, எல்லாவிதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர்செயல்படுத்துவார்.

மாநில ஆளுநர் நியமனம்

பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க (ஷரத்து 153) வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் – ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்கிறார். பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே, பதவியிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.

குடியரசுத் தலைவர் விரும்புகிற வரையில் மட்டுமே ஆளுநர் பதவியில் இருப்பார். குடியரசுத் தலைவரின் விருப்பத்தை நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்த இயலாது. ஒன்றிய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் செயல் படுகிறார். ஆளுநரின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுற்ற பின்னரும், அவரைத் தொடர்ந்து வேறு ஆளுநர் நியமிக்கப்படும் வரை, தொடர்ந்து பதவி வகிக்க கேட்டுக்கொள்ளப்படுவார்.

ADVERTISEMENT

ஆளுநருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். ஆளுநர் தம் பதவியை இராஜினாமா செய்ய விரும்பினால, இராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆளுநரை ஒரு மாநிலத்தை விட்டு மற்றோரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கும் குடியரசுக் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

ஆளுநர் மாத ஊதியமாக ரூ.1,10,000 பெறுகிறார் ஆளுநரின் ஊதியம் அந்தந்த மாநிலத்தின் மாநில ஒருங்கிணைப்பு நிதியத்திலிருந்து (Consolidated Fund of the State) வாக்கெடுப்பின்றியே வழங்கப்பட அரசியலமைப்பு வழி செய்துள்ளது.

ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இருப்பிடம் இலவசமாக தரப்படுவதுடன், சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் இதர படிகளும் அவருக்கு வழங்கப்படும்.

ஆளுநராக நியமிக்கப்பட வேண்டிய ஒரு நபர் மற்ற மாநிலத்திலிருந்து வரும் ஒருவராக இருக்க வேண்டும் என்றும், மாநில அரசியலில் நெருங்கிய தொடர்பு இல்லாதவராக இருக்க வேண்டும் என்றும், சமீப கால அரசியலில் பங்கெடுக்காதவராக இருக்க வேண்டும் என்றும் சர்க்காரியா ஆணையம் கூறியுள்ளது.

சர்க்காரியா குழு என்பது ஜுன் 1983-ல் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் அதிகாரப் பங்கீடு போன்றவற்றைப் பற்றி ஆய்வு செய்யவும், தேவையான பரிந்துரைகள் வழங்கவும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான இரஞ்சித் சிங் சர்க்காரியா என்பவர் தலைமையில் (1+2) நியமிக்கப்பட்ட குழுவாகும்.

ADVERTISEMENT

சர்க்காரியா குழு தனது அறிக்கையை ஜனவரி 1988ல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் 247 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *