TNPSC GR4 EXAM | Election Commissions | Notes

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையை அமல் படுத்தியிருப்பதால், நாட்டில் இரு வகையான அரசாங்கங்கள் (மத்திய, மாநிலஅரசுகள்) செயல்படுகின்றன. இவ்விரு அரசாங்கங்களுக்கிடையே அதிகாரங்கள் மிக விரிவான முறையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

மத்திய மாநில உறவுகள்

அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை மூன்று வகையான அதிகாரப் பட்டியல்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவையே.

மூன்று அதிகாரப் பட்டியல்கள்

அவை. மத்தியப் பட்டியலில் (Union List) பாதுகாப்பு, நீதி, அணுசக்தி, வெளி உறவு, ஐ.நா.சபை , உடன்படிக்கைகள், குடியுரிமை, இரயில்வே, கப்பல் போக்குவரத்து, தபால் தந்தி, நாணயம், வெளிநாட்டுக்க டன்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, வருமான வரி, ஏற்றுமதி வரி போன்ற 97 தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. இத்தலைப்புகள் மீது சட்டமியற்றும் அதிகாரத்தை மைய அரசு பெற்றுள்ளது.

மாநிலப் பட்டியலில் (State List) காவல் துறை, சிறைச்சாலை, ஸ்தலசுய ஆட்சி, பொது சுகாதாரம், நூல நிலையங்கள், விவசாயம், திரைப்பட அரங்கு, பந்தயங்கள் மற்றும் சூதாட்டங்கள், உள்ளாட்சித் துறை அதிகாரங்கள், சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகள், புதையல்கள், விவசாய வருமான வரி, நிலங்கள் மற்றும் கட்டிட வரி, மது தொழில் வரி போன்ற 66 தலைப்புக்கள் பெற்றுள்ளன. இத்தலைப்புக்கள் சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு பட்டுள்ளது.

பொதுப் பட்டியலில் (Concurrent List) தடுப் காவல், திருமணம், மணவிலக்கு, திவாலாக நீதிமன்ற அவதூறு, சமூக பொருளாதார திட்டங்கள் காடுகள், தொழிலாளர் சங்கம், கல்வி, சமூக நலப் பாதுகாப்பு, தொழிலாளர் நலம், மருந்துகள், மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்ப நலத்திட்டம், பிறப்பு-இறப்பு புள்ளி விவரங்கள் பதிவு செய்தல், சிறு துறைமுகங்கள், மின்சாரம், நாளேடுகள், போன்ற 47 தலைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலைப்புக்கள் மீது சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இருவருக்கும் உள்ளது.

மூன்று பட்டியலிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரங்கள் அதாவது சொல்லப்படாத அதிகாரங்கள் மத்திய அரசு வசமுள்ளது என ஷரத்து 248 குறிப்பிடுகிறது. 

ADVERTISEMENT

இராஜமன்னார் குழு

மத்திய-மாநில உறவுகள் குறித்தும், மத்திய-மாநில மாநிலங்களுக்கான தன்னிச்சை அதிகாரம் (Autonomy) குறித்தும் ஆராய்வதற்காக, தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் 1969ல் பி.வி.இராஜமன்னார் அவர்களின் தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழுவாகும். இக்குழு தனது அறிக்கையில் இந்திய ஆட்சிப் பணியிடங்களைக் கலைக்கப் பரிந்துரை வழங்கியது குறிப்பிடத்தக்கது. பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.

 மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஜுன் 1983-ல் ஆர். எஸ்.சர்க்காரியா என்னும் நீதிபதி தலைமையில் ஒரு குழு இந்திய அரசால் அமைக்கப்பட்டது.

மத்திய – மாநில உறவுகளை கூர்ந்து ஆய்வு செய்து, உறவுகளை திறம்பட மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்காக சர்க்காரியா குழு அமைக்கப்பட்டது.

சர்க்காரியா குழு தனது அறிக்கையை ஜனவரி 1988ல் மைய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய-மாநில உறவுகளுக்கிடையிலான அமைப்பு முறையில் எந்த மாற்றங்களையும் இக்குழு பரிந்துரைக்கவில்லை .

இரு அரசுகளின் செயல்பாடுகளில் பல்வேறு பரிந்துரைகளை இக்குழு தனது அறிக்கையில் வழங்கியது.

ADVERTISEMENT

மாநிலங்களுக்கு இடையிலான குழு

மாநிலங்களுக்கு இடையே நல்லுறவுகளை வளர்ப்பதற்காக மாநிலங்களுக்கு இடையிலான குழு (Inter-State Council) அமைக்க வேண்டும் என ஷரத்து 263 குறிப்பிடுகிறது.

இதன்படி குடியரசுத் தலைவர் பொதுநலன் கருதி இத்தகைய குழுவை அமைக்கலாம். இக்குழு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளை விசாரித்து, தீர்க்க தக்க அறிவுரைகளை வழங்குகிறது.

மாநிலங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கவும், மாநிலங்களுக்கிடையிலான பொதுவான விஷயங்கள் பற்றி விவாதித்து முடிவெடுக்கவோ இக்குழு உதவுகிறது.

க்குழு அமைக்கப்பட வேண்டுமென சர்க்காரியா குழு வலியுறுத்தியதன் அடிப்படையில், 1990-ம் மாநிலங்களுக்கிடையிலான குழு (Inter-State Council) அமைக்கப்பட்டது.

மாநில இடைக்குழுவின் (Inter-State Council) தலைவர் பிரதமர் ஆவார். எல்லா மாநில முதலமைச்சர்கள் டெல்லி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் மற்றும் 6 மத்திய அமைச்சர்களுடன் மாநில இடைக்காம செயல்படுகிறது.

தேர்தல்கள் & தேர்தல் ஆணையம்

இந்திய அரசியலமைப்பின் பகுதி-15-ல் (Part XV) ஷரத்து 324 முதல் ஷரத்து 329 வரை தேர்தல்கள் (Elections) பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும், தேர்தலை நடத்தவும், கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் ஒரு தேர்தல் ஆணையத்தை (Election Commission) நிறுவ ஷரத்து 324 வகை செய்கிறது.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, லோக்சபை, இராஜ்யசபை மற்றும் மாநில சட்டப்பேரவை, சட்ட மேலவைத் தேர்தல்களை நடத்துவதே இதன் பணியாகும்.

இந்தியாவில் நாம் பின்பற்றி வரும் தேர்தல் முறையானது இங்கிலாந்தின் தேர்தல் முறையை ஒட்டியே அமைந்துள்ளது.

இந்தியாவில் தேர்தல்கள் முதன் முதலாக 1909-2 ஆண்டு மிண்டோ -மார்லி சட்டத்தின்படி அறிமுகப்படுத்தப்பட்டது.

சுதந்தரதத்திற்கு பிறகு  ஷரத்து 324-ன்படிஇந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டு  25.01.1950 முதல் செயல்பட்டு வருகிறது.

ஒரு தலைமை தேர்தல் ஆணையரையும் (Chief Election Commissioner) அவருக்கு உதவியாக மற்ற (தற்போது பிற 2 தேர்தல் ஆணையர்கள்) தேர்தல் ஆணையர்களைக் (Election Commissioner) கொண்டிருக்கும் என்றும். இவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையத்தின் தலைவர் தலைமை தேர்தல் ஆணையரே ஆவார். மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையர் தனது கடமைகளை நிறைவேற்ற உதவும் பொருட்டு, தேர்தல் ஆணையத்தைக் கலந்தாலோசித்த பிறகு, தேவையான எண்ணிக்கையில் மண்டல தேர்தல் ஆணையர்களை (Regional Election Commissioners) குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.

பிற தேர்தல் ஆணையர்களை விட தலைமை தேர்தல் ஆணையர் அதிகாரத்தில் உயர்ந்தவர் என்று கருதப்படுவதில்லை. அனைத்து தேர்தல் ஆணையர்களும் சம அதிகாரம் பெற்றவர்களே.

தேர்தல் ஆணையர்கள் எடுக்கும் முடிவில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஆணையர்களின் பெரும்பான்மையான முடிவே செல்லத்தக்கதாகும்.

வயது வந்தோர் வாக்குரிமை

தேர்தல்கள் வயது வந்தோர் வாக்குரிமை (Adult Franchise) அடிப்படையில் நடைபெறுகிறது. அதாவது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஷரத்து 326-ன்படி வாக்குரிமை உள்ளது.

இந்தியாவில் குடியிராதவர், புத்தி சுவாதனமற்றவர் குற்றம் அல்லது சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட காரணங்களுக்காக சட்டப்படி தகுதியிழப்பு செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு வாக்குரிமை இல்லை .

61-வது இந்திய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி 1988-ல் வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. இது 1989 முதல் நடைமுறைக்கு வந்தது.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம்

ஷரத்து 324 (5)-ன்படி தேர்தல் ஆணையர்களின் பணி மற்றும் பதவிக்காலம் குறித்து சட்டமியற்ற பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

அதன்படி இயற்றப்பட்ட பாராளுமன்ற சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் தாங்கள் பதவியேற்ற நாளிலிருந்து 6 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பர். இவர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆகும்.

மேற்கண்டவற்றில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி தங்கள் பதவியில் இருந்து வெளியேறுவர்.தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான சம்பளத்தைப் பெறுகிறார்.

தற்போது தலைமை தேர்தல் ஆணையரின் மாதச் சம்பளம் ரூ.90,000/-. பிற தேர்தல் ஆணையர்கள் மாதச் சம்ப ளம் ரூ.80,000/

தேர்தல் ஆணையர்களின் பதவி நீக்கம்

 ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றியே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் பாராளுமன்றத்தின் மூலம் நீக்க இயலும்.

தகுதியின்மை மற்றும் தவறான நடத்தை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு பதவி நீக்கம் செய்யப்படலாம். வேறு எந்த வழிமுறையிலம் தேர்தல் ஆணையர்களை பதவி நீக்கம் செய்ய இயலாது.

ADVERTISEMENT

மேலும் மண்டல தேர்தல் ஆணையர்கள், பிற தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தலைமை தேர்தல் ஆணையரின் பரிந்துரையின்றி பதவி நீக்க நடைமுறைகளை மேற்கொள்ள இயலாது.

தேர்தல் ஆணையர்கள் மீண்டும் நியமிக்கப்பட தகுதியுடையவரல்லர். தேர்தல் ஆணையர் பதவிக்குப் பின்னர், மைய அரசிலோ அல்லது மாநிலங்களிலோ எந்தப் பதவியையும் அவர்கள் வகிக்க இயலாது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களும் பணிகளும்

ஷரத்து 324 (1)-ன்படி, பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல், துணைக் குடியரசுத்த லைவர் தேர்தல் ஆகியவற்றுக்குண்டான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.

 மேற்கண்ட தேர்தல்களை நடத்தவும், கண்காணிக்கவும், நெறிப்படுத்தவும், கட்டுப் படுத்தவும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.

அரசியல் கட்சிகளுக்குச் சின்னம் ஒதுக்குவது தொடர்பான எழும் தகராறுகளைத் தீர்த்து வைக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து முறையே குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் கருத்துரை வழங்குகிறது.

ADVERTISEMENT

பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளை வரையரை செய்தல், கட்சிகளையும்  அங்கீகரித்தல் போன்ற பணிகளையும் ஆணையம் மேற்கொள்கிறது.

ககுடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரித்து தீர்ப்பளிக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of People Act, 1951) இயற்றப்பட்டுள்ளது,

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதாவது ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப் வேட்பாளர் மரணமடையும் நிலையிலோ, விலகிய நிலையிலோ, அத் தொகுதியில் மட்டும் நடைபெறும் தேர்தல் இடைத்தேர்தல் எனப்படும்

சில சமயங்களில் நாடாளுமன்றமோ அல்லது மாநில சட்டசபைகளோ அது செயல்படுவதற்குரிய 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே கலைக்கப்பட்டால். மீண்டும் அவற்றுக்கு நடத்தப்படும் தேர்தல் இடைப்பருவத் தேர்தல் எனப்படும்.

தேசியக் கட்சி & மாநிலக்கட்சி அங்கீகாரம்

ஒரு கட்சி மாநிலக் கட்சியாக (State Party) அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், அக்கட்சி அந்த மாநிலத்தில் நடைபெறும் லோக்சபை உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது அந்த மாநிலத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலோ, மொத்தம் பதிவான செல்லத்தக்க வாக்குகளில், குறைந்தபட்சம். சதவிகித வாக்குகளையாவது பெற்றிருத்தல் வேண்டும்.

அது மட்டுமின்றி, (1) அந்த மாநிலத்தின் பேரவைத் தேர்தலில் (Legislative Ass குறைந்தபட்சம் 2 இடங்களிலாவது வென்ற வேண்டும்,

ADVERTISEMENT

(அல்லது) (2) அந்த மாநிலத்தின் சட்டப் பேரவைத் குறைந்தபட்சம் 3 சதவீத இடங்களிலோ (அ) அவைத் தேர்தலில்  (அல்லது) வங்களிலோ (இவ்விரு காரணிகளில் எது அதிகமோ அது வென்றிருக்க வேண்டும். (அல்லது)

(3) ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு 25 லோக்சபை இடங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது லோக்சபை தேர்தலில் அம்மாநிலத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்,(அல்லது)

(4) அந்த மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் அல்லது லோக்சபை தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். (இது 2011-ல் புதிதாக சேர்க்கப்பட்டது) மேற்கூறியவாறு தகுதிபெற்ற கட்சிகளே மாநிலக் கட்சிகளாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும்.

தேசியக் கட்சிஅங்கீகாித்தல்

ஒரு கட்சி தேசியக் கட்சியாக (National Party) அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் மாநில சட்டப் பேரவைத் (Legislative Assembly) தேர்தல் அல்லது லோக்சபை தேர்தலில் (House of People) போட்டியிட்டு, பதிவான செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குளைப் பெற வேண்டும்,

மேலும் (1) அக்கட்சி தாம் போட்டியிட்ட மாநிலங்களில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களிலோ, குறைந்தபட்சம் 4 லோக்சபை இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்,

(அல்ல து) (2) குறைந்தபட்சம் லோக்சபை உறுப்பினர் இடங்களில், 2 சதவீத இடங்களிலாவது அக்கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும், இந்த இடங்களும் குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களின் வாயிலாக பெறப்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

(3) நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தேசியக் கட்சியாக மேற்கூறிய விதிகளை ஒரு கட்சி தி செய்திருப்பின், அக்கட்சியை தேசியக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது.

தற்போது இந்தியாவில் (1) பாரதிய ஜனதா கட்டு (2) இந்திய தேசிய காங்கிரஸ் (3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (4) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (5) பகுஜன் சமாஜ் கட்சி ) தேசியவாத காங்கிரஸ் கட்சி 7) அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகளே தற்போது தேசியக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கை 51. அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 1709.

தமிழகத்தில் (1) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) திராவிட முன்னேற்றக் கழகம் (4) தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. –

தமிழகத் தோ்தல்கள்

தமிழகத்தில் 234 சட்டமன்ற (சட்டப்பேரவை) தொகுதிகள் உள்ளன. இவற்றிக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல்கள் நடத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

இத்துடன் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சோ்ந்த ஒரு நபரை நியமன உறுப்பினராக மாநில ஆளுநா் நியமிக்க அதிகாரம் பெற்றுள்ளாா்.

நியமன உறுப்பினருடன் சோ்ந்து 235 உறுப்பினா்கள் சட்டப்பேரவையில் இடம் பெறுகின்றனா். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 188 பொதுத் தொகுதிகளும், 46 தனித்தொகுதிகளும் உள்ளன.

இந்த 46 தனித்தொகுதிகளில் 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏற்காடு (சேலம் மாவட்டம்), சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம்) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் பழங்குடியினருக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (Electors’ Photo Identity Card) 1996-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு 2009- மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற லோக்சபைக்கு மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. இதில் 32 பொதுத் தொகுதிகளும், 7 தனித்தொகுதிகளும் உள்ளன. தனித்தொகுதிகள் ஏழும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பழங்குடியினருக்கென லோக்சபைக்கு தனித்தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை .

ADVERTISEMENT

திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 7 லோக்சபை தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் காப்புத் தொகை

லோக்சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பின் ரூ.25,000 ஐயும், தாழ்த்த ப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராக இருப்பின் ரூ.12,500 ஐயும், தேர்தல் காப்புத் தொகையாக (Security Deposit) செலுத்த வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பின் ரூ.10,000/-மும், தாழ்த்த ப்பட்ட பிரிவைச்சேர்ந்தவராக இருப்பின் ரூ.5000/-மும், காப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட காப்புத் தொகையை வேட்பாளா், தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்து ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெறவில்லையெனில் இழக்க காப்புத்தொகையினை (Loss of Security Deposit) நேரிடும்.

தேர்தல் ஆணையம் – இதர தகவல்கள்

வாக்காளர் பட்டியல் முறைகேட்டைத் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 1993-ல் (தலைமை தேர்தல் ஆணையராக டி.என். சேஷன் இருந்தபோது) இந்திய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (Elector’s Photo Identity Card – EPIC) வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.

ஒரு தேர்தல் வாக்கு இயந்திரம் அதிகபட்சம் 3840 வாக்குகளைப் பதிவு செய்யும் திறன் கொண்டது.

ADVERTISEMENT

இந்தியாவில் தேர்தல் வாக்கு இயந்திரங்களை பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், ஹைதராபாதில் உள்ள எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் தயாரிக்கின்றன.

தேர்தல் ஆணையம் 2011 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதியை தேசிய வாக்காளர்கள் தினமாகக் (National Voters’ Day) கொண்டாடி வருகிறது.

ஜனவரி 25, 1950, தேர்தல் ஆணையம் செயல்பாடுகளைத் தொடங்கிய தினமாகும்.  ஆணையம் புதுடெல்லியைத் தலைமையிடம் (நிர்வாச்சன் சதன்) கொண்டு தோ்தல் ஆணைம் இயங்குகிறது. 

லோக்சபை தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர் செலவழிப்பதற்கான அதிகபட்ச செலவுத்தொகை ரூ.40 (Poll Fund Limit) இலட்சத்திருந்து ரூ.70 இலட்சமாகவும், சட்டமன்ற தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளர் செலவழிப்பதற்கான அதிகபட்ச தேர்தல் தொகை வரம்பு ரூ.16 இலட்சத்தில் இருந்து, 28 இலட்சமாக தேர்தல் ஆணையத்தால் 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசே தேர்தல் செலவுகளை மேற்கொண்டு தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரை வழங்குவதற்காக 8 உறுப்பினர்களுடன் மே 1998-ல் இந்திரஜித் குப்தா குழு நியமிக்கப்பட்டது.

இந்திரஜித் குப்தா குழு தனது அறிக்கையை ஜனவரி 1999-ல் சமர்ப்பித்தது. அதில் தேர்தல் தொகுப்பு நிதி (Election Corpus Fund) ஒன்றை மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஏற்படுத்தி, அதன் மூலம் தேர்தல் செலவுகளை அரசின் வழியாக நடத்தலாம் என பரிந்துரைத்தது. பொது நலன் கருதி அரசே தேர்தல் செலவுகளை ஏற்று நடத்த முன்வரலாம் என்று இக்குழு பரிந்துரை வழங்கியது.

ADVERTISEMENT

லோக்சபை மற்றும் சட்டப் பேரவை இடங்களின் எண்ணிக்கையை 2026-ம் ஆண்டு வரை நீட்டித்து, 84-வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம், 2001 நிறைவேற்றப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக சுகுமார் சென் என்பவர் 21.03.1950 முதல் 19.12.1958 வரை பணியாற்றினார்.

தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக மே 15, 2022 முதல் இன்று வரை திரு. இராஜீவ் குமாா் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *