இக்கட்டுரையில் TNPSC Group 4 Exam-ல் இந்திய அரசியலமைப்பு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கும் வகையில், நிதி மசோதா மற்றும் அரசியலமைப்பு திருத்தல் மசோதா பற்றி சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.
நிதி மசோதா
பண மசோதா என்பது ஷரத்து 110-ல் சொல்லப்பட்டுள்ள அம்சங்களைக் கொண்டிருக்கும். நிதி மசோதா (Finance Bill) என்பது பண மசோதாவுக்குரிய அனைத்து தகுதிகளையுமோ, ஏதேனும் ஒரு தகுதியையோ கொண்டுள்ளதுடன், அவை தவிரபிற விஷயங்களையும் கொண்டுள்ள மசோதா ஆகும்.
பொதுவாக வரவு-செலவுகளோடு தொடர்புடைய மசோதாக்கள் யாவும் நிதி மசோதாக்கள் எனப்படும்.
நிதி மசோதா (வகை – 1), நிதி மசோதா (வகை-2) என இரண்டு வகையான நிதி மசோதாக்கள் உள்ளன.
ஷரத்து 117 நிதி மசோதாக்கள் பற்றி குறிப்பிடுகிறது.
எல்லா பண மசோதாக்களும் நிதி மசோதாக்களாக இருக்க முடியும். ஆனால் எல்லா நிதி மசோதாக்களும் பண மசோதாக்களாக இருக்க முடியாது.
நிதி மசோதா தொடர்பாகவும் கூட்டுக் கூட்டம் கூட்ட இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள்
ஷரத்து 368-ன்படி அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது.
எனினும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கூறுகளை (Basic Structure of the Constitution) பாராளுமன்றம் திருத்த இயலாது என்று உச்சநீதிமன்றம் கேசவானந்த பாரதி வழக்கில் (1973) வரையறுத்துள்ளது.
எனவே சில பாராளுமன்றத்தின் திருத்த அதிகாரம் வரையறைகளுக்கு உட்பட்டதாக உள்ளது.
திருத்தச் சட்டங்கள் பாராளுமன்றத்தின் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைச் சிதைக்காமல் உள்ளதா என்று உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய அதிகாரம் பெற்றுள்ளது.
அரசியலமைப்பைத் திருத்த விழையும் மசோதாக்கள் முதல் நிலையில் லோக்சபையிலோ அல்லது இராஜ்ய சபையிலோ ஜனாதிபதியின் பரிந்துரையின்பேரில், அறிமுகம் செய்யப்படும்.
முதல் நிலையில் திருத்த மசோதா நிறைவேறிய பின், இரண்டாம் நிலையில் பாராளுமன்றத்தின் மற்றோரு அவைக்கு அனுப்பப்படும்.
அந்த அவையிலும் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக மாறும்.
இரண்டாம் நிலையில் ஒப்புதல் அளிக்கப் பெறாமல், இரண்டாவது அவையினால் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு நேரிடலாம்.
குறிப்பாக இராஜ்யசபைக்கு திருத்த மசோதாவைப் பொறுத்தவரை லோக்சபைக்கு இணையான அதிகாரம் (உண்மையான சம அதிகாரம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மீது கூட்டுக்கூட்டம் கூட்ட இயலாது. எனவே இரு அவைகளுக்கும் இந்த மசோதா மீது மட்டுமே சாி சமமான அதிகாரம் நிலவுகிறது என கருதலாம்.
ஜனாதிபதியின் ஒப்புதல்
ஒரு மசோதா இரு சபைகளிலுமோ அல்லது கூட்டுக் கூட்டத்திலோ நிறைவேற்றப்பட்ட பின்னா், அல்லது மொத்த மாநிலங்களில் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆதரவைப் பெற்ற பின்னா், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
பண மசோதாவாகவோ அல்லது அரசியலமைப்பு திருத்த மசோதாவாகவோ இருப்பின் ஜனாதிபதி (இரு சபைகளால்அனுப்பப்படும்) நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்படும்.
முதல் முறையிலேயே, தனது ஒப்புதலை அளித்தாக வேண்டும். எனினும் பிற மசோதாக்களாக இருப்பின் ஜனாதிபதி, பாராளுமன்ற சபைகளின் மறு பரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம்.
எனினும் அவ்வாறு திருப்பி அனுப்பப்படும் மசோதா, திருத்தங்களுடனோ அல்லது திருத்தங்களின்றியோ மீண்டும் அச்சபை அங்கீகரித்து நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பினால், ஜனாதிபதியால் அந்த மசோதாவை நிறுத்தி வைக்க இயலாது. அவரது ஒப்புதல் பெற்ற பின் அம்மசோதா சட்டமாக மாறும்.
பாராளுமன்ற கூட்டத் தொடர்கள்
ஷரத்து 85-ன்படி அவ்வப்போது, தாம் விரும்பும் சூழலிலும்,இடத்திலும்ஈ காலத்திலும், நாடாளுமன்றத்தின் சபைகள் ஒவ்வொன்றையும், ஜனாதிபதி கூட்ட இயலும்.
ஒரு கூட்டத் தொடருக்கும் (Session) மற்றோரு கூட்டத் தொடருக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்க கூடாது. எனவே பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரு முறையாவது கூட வேண்டும்.
நடைமுறையில் பாராளுமன்றம் ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படுகிறது.
(1) வரவு செலவு அறிக்கை (Budget Session) கூட்டத் தொடர் – இது பொதுவாக பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடைபெறும்.தொடர்களில் அதிக முக்கியத்துவம் இக்கூட்டத் தொடரே மிக நீண்ட கூட்டத் தொடராக உள்ளது.
((2) பருவ கால கூட்டத் தொடர் (Monsoon Session) பொதுவாக இக்கூட்டத் தொடர் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும்.
(3) குளிர்கால கூட்டத் தொடர் (Winter Session) -பொதுவாக இக்கூட்டத் தொடர் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும். கூட்டத் தொடர்களில் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர் இதுவே.
வரவு செலவு கூட்டத் தொடரில், பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்.
இத்தொடரிலேயே பொது வரவு செலவு (General Budget) மற்றும் இரயில்வே வரவு செலவு (Railway Budget) ஆகியவை மீது விவாதம் நடத்தி அவை ஏற்றுக்கொள்ளப்படும்.
கூட்ட அமா்வு கால அளவு
பாராளுமன்றத்தின் ஒரு கூட்டம் என்பது இரண்டு அமர்வுகளைக் கொண்டது. காலை அமர்வு 11.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், மாலை அமர்வு 2.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் நடைபெறும்.
ஓய்வுக் காலம்
ஒரு கூட்டத்தொடருக்கும் அடுத்த தொடருக்கும் இடையிலான இடைவெளிக் கூட்டத்தொடரற்ற காலம் (அல்லது) ஓய்வுக் காலம் (Non-Session) எனப்படும்.
குறைவெண் (Quorum)
அவைக் கூட்டங்களின் போது, அவை அலுவல்கள் நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த அளவு உறுப்பினர் வருகை எண்ணிக்கை உறுப்பினர் குறைவெண் (Quorum) எனப்படுகிறது.
எந்த சபையாக இருப்பினும் அதன் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு (10 சதவீதம்) அதன் உறுப்பினர் குறைவெண் ஆகும். பத்தில் ஒரு பங்குக்குக் கீழே உறுப்பினர் வருகை இருந்தால், அவைத் தலைவர் கூட்டத்தை ஒத்தி வைக்கலாம்.
குடியரசுத் தலைவர் அவ்வப்போது, பாராளுமன்றத்தின் அல்லது ஒரு சபை அல்லது இரு சபைகளின் கூட்டத்தை கூட்டலாம் அல்லது இரு சபைகளின் ஒத்திவைக்கலாம்.
ஒத்திவைக்ககும் அதிகாரம்
ஜனாதிபதியைப் பொறுத்தவரை இரு சபைகளையும் ஒத்திவைக்கவோ, லோக் சபையைக் கலைக்கவோ அதிகாரம் பெற்றுள்ளார். என்றால், சபைக் கூட்டங்களைத் தள்ளிவைக்கும் அதிகாரம் அந்தந்த சபைத் தலைவர்களின் வசமுள்ளது எனலாம்.
சபைக் கூட்டத்தைத் தற்காலிகமாகத் (Adjournment) தள்ளி வைப்பதால், அக்கூட்டத் தொடர் முடிவுக்கு வருவதில்லை. அச்செய்கை குறிப்பிட்ட நாட்கள் மணிகள், வாரங்கள் வரை கால நீட்டிப்பு மட்டுமே நடைபெறுகிறது.
ஆனால் ஒத்திவைப்பு (Prorogation) என்பது அந்தக் குறிப்பிட்ட சபையின் கூட்டத் தொடரை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
எனவே ஒரு கூட்டத் தொடர் (Session) என்பது பாராளுமன்றக் கூட்டம் துவங்கும் நாளிலிருந்து, அக்கூட்டத் தொடர் ஒத்திவைப்பு அல்லது கலைப்புக்கு இடையிலான காலமாகும்.
கூட்டத் தொடர் ஒத்திவைப்பு (Prorogation) என்பது குடியரசுத் தலைவரால் செய்யப்படும். அவை தள்ளிவைப்பு (Adjournment) என்பது சபைத்தலைவரால் மேற்கொள்ளப்படும்.
சபையைக் கலைத்தல்
சபையைக் கலைத்தல் (Dissolution) என்பது ஒரு சபையின் காலத்தை அல்லது வாழ்வை முடிவுக்குக கொண்டு வருவதாகும். சபையைக் கலைத்த பிறகு, புதிய அவையை பொதுத் தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேண்டும். கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசமுள்ளது.
லோக்சபையை மட்டுமே கலைக்க இயலும். இராஜ்யசபை நிரந்தர அவையாக உள்ளதால், அதைக் கலைக்க இயலாது. ஜனாதிபதியால் லோக்சபை கலைக்கப்பட்டால், அதன் பரிசீலனையில் இருந்த மசோதாக்கள், தீர்மானங்கள், அறிவிப்புகள் யாவும் முடிவுக்கு வந்து விடுகின்றன.
ஆண்டு நிதி நிலை அறிக்கை
பட்ஜெட் (Budget) என்பது இந்திய அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆகும். இது பண மசோதாவாக வரையறுக்கப்பட்டுள்ள ஒரு அரசாங்க மசோதா (Government Bill) ஆகும்.
பட்ஜெட் என்பது ஒரு பிரெஞ்சு மொழிச் (பௌகி) (பௌகி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் பணப்பை என்று பொருள்) சொல்
ஜனாதிபதியின் பரிந்துரைக்குப் பிறகு இந்த நிதிநிலை அறிக்கை லோக்சபையில் அறிமுகப் படுத்தப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டிலும், அந்த ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை, நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் சமர்ப்பிக்கும்படி செய்வது குடியரசுத் தலைவரின் கடமையாகும்.
இதை நிதியமைச்சர் பொதுவாக பிப்ரவரி இறுதி வாரத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் என்பது தொடர்ந்து வரும் நிதியாண்டுக்குரிய, முன்கூட்டியே எதிர்பார்க்கப்படும், இந்திய அரசின் செலவினங்கள் மற்றும் வரவினங்களைக் கொண்ட அறிக்கையாகும்.
மேலும் சென்ற ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினங்களுக்கான பற்றுச் சீட்டுகளும், ஆய்வறிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.
கேள்வி நேரம்
சபையின் முதல் ஒரு மணி நேரம் அதாவது காலை 11.00 முதல் 12.00 வரை கேள்வி நேரமாக (Question Hour) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி நேரத்தின்போது அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும்.
பொதுவாக அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து விமர்சிக்கும் வகையில் கேள்விகள் எழுப்பப்படும். இந்நேரத்தில் அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர்.
சுழி நேரம்
சபையின் கேள்வி நேர முடிவிற்கும் அடுத்த நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட நேரமே சுழி நேரம் (Zero Hour) எனப்படும். பொதுவாக காலை 12.00 முதல் தொடங்கப்படும். இதற்கு கால வரையறை இல்லை . இத்தகைய சுழி நேரத்தில் முன்னறிவிப்பின்றி உறுப்பினர்கள் கேள்விகள் கேட்கலாம்.
1962-ம் ஆண்டு முதல் சுழி நேரம் என்ற நடைமுறை இந்தியப் பாராளுமன்ற நடைமுறையில் இடம் பெற்று வருகிறது.
பாராளுமன்ற நடவடிக்கைகளில் எதிலும் சுழி நேரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை . இது இந்தியப் – பத்திரிகைகளின் புதிய கண்டுபிடிப்பே ஆகும்.
பொதுவாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த செயல்களுக்காக அரசின் மீதான கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்படும் நேரமே இது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
லோக்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை மட்டுமே அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும், பிரதமரும் ஆட்சியில் நீடித்திருக்க இயலும்.
லோக்சபையின் நம்பிக்கையை எந்தத் தருணத்தில் இழந்தாலும், இழக்க நேரிட்டாலும், அக்கணம் முதலாகவே, அந்த அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டியது அதன் அரசியலமைப்பு ரீதியான கடமையாகும்.
அமைச்சரவை அத்தகைய நம்பிக்கையை லோக்சபையிடம் பெற்றிருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் (No Confidence Motion) என்ற முறை நடைமுறையில் உள்ளது.
தனிப்பொறுப்பு
அரசியலமைப்பில் தனியொரு அமைச்சருக்கென எந்த ஒரு தனிப்பொறுப்பும் (Responsibility) அளிக்கப்படவில்லை. மாறாக கூட்டுப்பொறுப்பு (Collective Responsibility) வழங்கப்பட்டுள்ளது.
எனவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது ஒட்டுமொத்த அமைச்சரவைக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் இன்றி கொண்டு வரப்படலாம்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை லோக்சபையில் மட்டுமே அறிமுகம் செய்து, லோக்சபையில் மட்டுமே நிறைவேற்ற இயலும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு 50 உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவிப்பின், அதற்கான முன்மொழிவுக்கு ஆதரவு கிடைத்ததாகக் கருதி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளைக் குறிப்பிட்டு, சபாநாயகர் அறிவிப்பார்.
இத் தீர்மானம் கொண்டுவரப்பட குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் (லோக்சபை உறுப்பினர்கள்) ஆதரவு தேவை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்று நிறைவேறினால், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகும்.
இந்நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தால், அமைச்சரவை பதவி விலகத் தேவையில்லை. ஒரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது தோல்வியுற்ற பின், மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்ச இடைவெளி 6 மாதங்கள் தேவை.
இந்தியாவில் முதன் முதலாக 1963-ல் ஜவகர்லால் நேருவிற்கு எதிராக ஆச்சார்யா கிருபளானி அவர்களால் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எனினும் இத்தீர்மானம் தோல்வி அடைந்தது.
எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர் (Leader of Opposition) அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படவில்லை .
ஆளுங்கட்சிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான பா)ள,டன்ற இடங்களைப் பெற்றுள்ள கட் யே எதிர்க்கட்சி ஆகும்.
எனினும் லோக்சபையில் மொத்த உறுப்பின் இடங்களில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு இடங்களையாவது பெற்றிருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
லோக்சபையின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக ஒய்.பி. பவான் பணியாற்றியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அமைச்சரவையின் காபினட் அந்தஸ்து பெற்றவர் ஆவார்.