இக்கட்டுரையில் TNPSC Group 4 Exam-ல் இந்திய அரசியலமைப்பு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கும் வகையில் சுருக்கமாகவும், முக்கிய ஷரத்துக்கள் விடுபடாமலும் எழுதப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் – சிறப்பு உரிமைகள்
பாராமன்றத்தின் இரு சபைகளின் சிறப்பியல்புகளை, இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சிறப்புகள்
2) பாராளுமன்றத்தின் ஒவ்வொரு சபைக்கும் ஒட்டுமொத்தமாக உள்ள சிறப்பியல்புகள்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கீழ்வரும் சிறப்பு அதிகாரங்களைப் பெற்றுள்ளனர். (1) பேச்சு சுதந்திரம் (2) கைது நடவடிக்கை மீதான சுதந்திரம் (3) நீதித்துறைப் பணிக்கான சுதந்திரம்.
பேச்சு சுதந்திரம்.
சபையில் பேசிய பேச்சுக்காக எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது. சபை குறித்து அவர் பேசும் எந்த விஷயத்திற்காகவும், நீதிமன்ற நடவடிக்கை உள்ளிட்ட, எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது.
எனினும், பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. அவையாவன
(1) சபையில் கடைபிடிக்க வேண்டிய சபை விதிகளுக்கு முரணாகவோ, அல்லது சபை விதிகளை மீறியோ பேச இயலாது
(2) உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தை, தீர்ப்பு மற்றும் பிற செயல்கள் குறித்து பேச இயலாது. எனினும் இவர்களை பணி நீக்கம் செய்வது குறித்த குற்ற விசாரணையின் போது, பாராளுமன்றத்தில் அது குறித்துப் பேசலாம்.
கைது நடவடிக்கையில் இருந்து சுதந்திரம்
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, சபைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக 40 நாட்கள் வரையிலும், சபை கூட்டம் முடிவடைந்த பிறகு தொடர்ந்து வரும் 40 நாட்கள் வரையிலும் சிவில் (உரிமையியல்) நடவடிக்கைகளுக்காக கைது செய்ய இயலாது.
எனினும் இந்த சிறப்பு அதிகாரம் நீதிமன்ற அவமதிப்பு, கிரிமினல் வழக்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்புக் காவல் சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றிற்குப் பொருந்தாது.
நீதிப்பணியில் இருந்து சுதந்திரம்
பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளிக்க இயலாது என்று மறுக்கலாம். இவரது இத்தகை சிறப்பு அதிகாரத்திற்குக் காரணம், பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு நாம் அளித்துள்ள முக்கியத்துவமே ஆகும்.
தகுதியற்ற உறுப்பினர் நடத்தை விதிகள்
பாராளுமன்றத்தின் இரு சபைகளில், எந்த ஒரு சபையிலும், உறுப்பினர்களாக தகுதி பெறாத நபர்களோ அல்லது உரிய முறையில் (தேர்ந்தெடுக்கப்படாமலோ, சபை நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருந்தால், அல்லது அவ்வாறு கலந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டால், அவ்வாறு கலந்து கொண்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500/அபராதம் விதிக்கப்படும்.
பாராளுமன்ற சபைகளின் சிறப்பு அதிகாரங்கள்
பாராளுமன்றத்தின் ஒவ்வொரு சபைக்கும் கீழ்வரும் சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அவையாவன
(1) பாராளுமன்ற நடவடிக்கைகள். விவாதங்கள் போன்றவை குறித்த விவரங்களை தாமே பிரசுரம் செய்யவும், பிறர் அவற்றைப் பிரசுரிப்பதைத் தடை செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளன.
(2) சபையின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், சபைக்குள் நடைபெறும் எந்த விஷயத்திலும் எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளன.
(3) பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் சபை அவமதிப்பு நடவடிக்கைகளுக்காக தண்டனை அளிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளன.
(4) அது போலவே பாராளுமன்ற உறுப்பினர்களையும், பிற நபர்களையும், பாராளுமன்ற அவமதிப்புக்காக தண்டிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளன.
இந்திய தொகுப்பு நிதி
இந்தியத் தொகுப்பு நிதி (Consolidated Fund of India) என்பது இந்திய அரசுக்கு வரும் அனைத்து வருவாய் மற்றும் கடன் இனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தேசிய ஒருங்கிணைப்பு நிதியாகும். இந்திய தொகுப்பு நிதியம் குறித்து ஷரத்து 266 குறிப்பிடுகிறது.
பாராளுமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் மற்றும் மதிப்பீடுகள் அல்லாத பிற வழிகளில் இந்த நிதியத்தில் இருந்து நிதியை எடுத்துப் பயன்படுத்த இயலாது. அதாவது பாராளுமன்றத்தின் சட்ட அனுமதி பெற்று மட்டுமே செலவழிக்க இயலும்.
மத்திய அரசின் வருமானங்கள் அனைத்தும், அதனால் எழுப்பப்பட்ட கடன்களும், பெறப்பட்டுள்ள தொகைகளும், முன் பணங்களும், கடன்களைத் திரும்பப் பெற்றதால் கிடைத்த தொகைகளும், இந்திய தொகுப்பு நிதியில் சேர்க்கப்பட வேண்டும்.
சட்டப்படியும், இந்திய அரசியலமைப்பின்படி விதிக்கப்பட்டுள்ள முறைப்படி அல்லாமல், இந்திய தொகுப்பு நிதியிலிருந்து எந்தத் தொகையையும், பாராளுமன்றத்தின் முன் அனுமதி அல்லது அங்கீகாரமின்றி செலவு செய்ய இயலாது.
செலவிடத்தக்க இனங்கள் (Charged Expenditure of Consolidated Fund of India) என்பது இந்திய தொகுப்பு நிதியிலிருந்து செலவிட, பாராளுமன்றத்தின் முன் அனுமதி தேவைப்படாத செலவினங்களே ஆகும்.
இத்தகைய செலவினங்கள் முன்பேயே அரசியலமைப்பாலோ அல்லது அதன்படி இயற்றப்பட்ட சட்டங்களாலோ அங்கீகரிக்கப்பட்டவையாகும். சில செலவிடத்தக்க இனங்களின் விவரம் பின்வருமாறு
(1) குடியரசுத் தலைவரின் ஊதியம், படிகள் மற்றும் அவரது அலுவல் சம்பந்தப்பட்ட செலவினங்கள்,
(2) இராஜ்யசபையின் தலைவர், துணைத்தலைவர், லோக் சபையின் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் ஊதியங்கள் மற்றும் படிகள்,
(3) இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ள கடன்கள், அவற்றைத் திருப்பிக் கொடுத்தல், மீட்டல் ஆகியவற்றுக்குரிய செலவினங்கள், நிரந்தரக் கடன் சம்பந்தப்பட்ட செலவினங்கள், வட்டிகள் மற்றும் அரசு பொறுப்பேற்றுள்ள கடன் சுமைகள்,
(4) உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்குத் தரப்பட வேண்டிய ஊதியங்கள், படிகள், ஒய்வூதியங்கள், இந்தியத் தலைமைத் தணிக்கையாளரின் ஊதியம், படிகள், ஒய்வூதியங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுடைய ஒய்வூதியங்கள்,
(5) அரசியலமைப்பின் மூலம் கூறப்படும், அல்லது பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூறப்படும் இதர செலவினங்கள்.
இந்திய அவசர தொகுப்பு நிதியம்
ஷரத்து 267-ன்படி 1950-ல் இந்தியப் பாராளுமன்ற சட்டத்தினால் அவசர தொகுப்பு நிதியம் (Contingency Fund of India) உருவாக்கப்பட்ட து.
இந்த நிதியம் 1976 முதல் 50 கோடி ரூபாய் வரையறை உடையதாக இருந்தது. தற்போது 500 கோடி ரூபாய் உடையதாக இந்திய அவசர தொகுப்பு நிதியம் உள்ளது.
இந்த நிதியத்தை எதிர்பாராத செலவினங்களுக்காக, பாராளுமன்றத்தின் அனுமதி பெற நேரமில்லாத சூழ்நிலையில், ஜனாதிபதி செலவிட அதிகாரம் பெற்றுள்ளார்.
எனினும் செலவிடப்பட்ட பின்னர், மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று, இந்த நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதி மீண்டும் அதில் சேர்க்கப்படும்.
இந்தியப் பிரதமர் மற்றும் அமைச்சரவை
இந்தியாவில் உள்ள அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்தைப் போன்று பாராளுமன்ற முறை (Parliamentary Type of Government) அரசாங்கமாகும். எனவே இங்கிலாந்தில் உள்ள அமைச்சரவையைப் போன்றே இந்திய அமைச்சரவையும் காபினெட் ஆட்சி முறையாக செயல்படுகிறது.
அமைச்சரவை
ஷரத்து 74-ன்படி பிரதமர் தலைமையிலான அமைச்சரவை (Council of Ministers) ஒன்று, ஜனாதிபதிக்கு உதவவும், ஆலோசனை அளிக்கவும் இருக்க வேண்டும். ஜனாதிபதி அதன் ஆலோசனையின் அடிப்படையிலேயே நடந்து கொள்ள வேண்டும்.
இந்திய அரசியலமைப்பில் அமைச்சரவை (Council of Ministers) என்ற சொற்றொடர் தான் பயன்படுத்தப்படுகிறது. கேபினட் (Cabinet) என்ற சொல் எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால் கேபினட் என்ற அமைச்சரவையின் உட்கூறு பகுதி இங்கிலாந்தைப் போன்று இந்தியாவிலும் இயங்குகிறது என்பதும், அமைச்சரவையின் முக்கிய அங்கத்தினர்கள் கேபினட்டின் உறுப்பினர்களாக அமர்ந்து அரசின் கொள்கையை உருவாக்கம் என்பதும் நடைமுறை உண்மை .
இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் பாராளுமன்ற ஆட்சி முறையில், இந்திய ஒன்றியத்தின் உண்மையான நிர்வாகம் அமைச்சரவை (Council of Ministers) வசமே உள்ளது. அரசியலமைப்பின்படி இந்த நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளதாக வரையறுக்கப்படுகிறது.
ஒன்றிய அரசாங்கம் முழுமையாக அமைச்சரவையைச் (Council of Ministers) சுற்றியே செயல்படுகிறது.
அரசின் தலைவர்
ஜனாதிபதி அரசின் தலைவராகவும், பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் விளங்குகின்றனர். ஜனாதிபதி முதலில் பிரதமரை நியமிக்கிறார், பின்னர் பிரதமரின் ஆலோசனையின்படி பிற அமைச்சர்களை நியமிக்கிறார்.
லோக் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெறக்கூடிய ஒரு நபரையே பிரதமராக பதவியேற்க ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார்.
லோக் சபையில் ஒரு கட்சிக்கு தனிப்பட்ட அளவிலேயே பெரும்பான்மை பலம் கிடைத்திருந்தால், அக்கட்சியின் தலைவரையே, பிரதமராக பதவியேற்க ஜனாதிபதி அழைப்பு விடுக்க வேண்டும்.
தனிப்பட்ட ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல், இரண்டு அல்லது மூன்று கட்சிகளின் கூட்டணிக்கு அத்தகைய பெரும்பான்மை உள்ளதென்றாலும், அக்கூட்டணியின் தலைவரையே, பிரதமராக பதவியேற்க ஜனாதிபதி அழைப்பு விடுக்க வேண்டும்.
அவ்வாறு பிரதமராக நியமித்தபிறகு, பிரதமரிடம், அவரது அமைச்சர்கள் குறித்த பட்டியலைக் கேட்டு வாங்கி, அதன்படியே அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
பிரதமர் பரிந்துரைத்த அமைச்சர்களையே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். பிரதமர் பிற அமைச்சர்களை மட்டுமல்ல, அமைச்சர்களுக்குரிய இலாகாக்களையும் தேர்வு செய்கிறார்.
பிரதமரின் ஆலோசனைகளை ஜனாதிபதி ஏற்று அதன்படியே நடத்தல் வேண்டும். அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை லோக்சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் 15 சதவீதத்திற்கு அதிகமாக இருத்தல் கூடாது.
அமைச்சர்களின் எண்ணிக்கை (அதிகபட்சம் 15 சதவீதம்) பிரதமரின் விருப்பத்தைப் பொறுத்ததே ஆகும். அமைச்சர் என்பவர் ஏதேனும் ஒரு சபையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட்டால், அவர் அவ்வாறு நியமிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் இரு சபைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டும். இல்லையெனில் அவரது அமைச்சர் பதவி இரத்து செய்யப்படும்.
பதவிப் பிரமாணம்
அமைச்சர்களுக்கு ஜனாதிபதியே பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அமைச்சரவை என்பது ஒர் ஒற்றை அமைப்பல்ல, ஆனால் வெவ்வேறு தரமுடைய அமைச்சர்களால் நிரம்பப்பெற்ற குழு ஆகும்.
ஆனால் அரசியலமைப்பு அமைச்சரவையில் எந்த வித தரப்பாகுபாட்டையும் குறிப்பிடவில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
கேபினட் என்ற சொல் இந்திய அரசியலமைப்பில் இல்லையென்றாலும், இங்கிலாந்து அரசியலமைப்பின் மரபைப் பின்பற்றி இந்தியாவிலும் அமைச்சரவையில் கேபினட் பயன்பாடு உள்ளது.
நாம் பிரிட்டீஷ் அரசைப் பின்பற்றியே, அத்தகைய தரப் பாகுபாட்டை பின்பற்றி வருகிறோம் அவையாவன 1) கேபினெட் அமைச்சர்கள் (Cabinet ministers) 2) இணை அமைச்சர்கள் (இராஜாங்க அமைச்சர்கள்) (Ministers of State) 3) துணை அமைச்சர்கள் (Deputy Ministers).
கேபினட் அமைச்சர்கள் & மற்றும் பிற அமைச்சர்கள்
கேபினட் தகுதியுடைய அமைச்சர்கள் என்பவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளின் தலைவர்கள் ஆவர். கேபினட் அமைச்சர்களே நாட்டின் கொள்கைகளை உருவாக்குகின்றனர்.
அமைச்சர்கள் அடங்கிய ஒரு சிறு குழுவே கேபினட் ஆகும். அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவும், அரசின் கொள்கைகளை வகுக்கவும், பிரதமர் அழைக்கும்போதெல்லாம் இந்த கேபினட் கூடும்.
கேபினட் அமைச்சர் இலாகா
காபினட் அமைச்சர் இலாகா இல்லாமல் நியமிக்கப்பட்டாலொழிய, எப்போதும் இலாகாவின் தலைவராகவும், தனிப்பட்ட அதிகாரம் (Independent Charge) வாய்ந்தவராகவும் இருப்பார்.
கேபினட் கூட்டம் நடைபெறும் பொழுதெல்லாம் அதில் கலந்து கொள்ளும் உரிமை கேபினட் அமைச்சருக்கு உண்டு. கேபினட் அமைச்சருக்கு உதவவே இணை அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஆகியோர் உள்ளனர்.
இணை அமைச்சர்கள்
இணை அமைச்சர்கள் என்போர் இரு வகைப்படுவர். இவர்களில் சிலருக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும். மற்றும் சிலர் கேபினட் அமைச்சரின் கீழ் அவரது கட்டுப்பாட்டில் இயங்குவர்.
சில நேரங்களில் இணை அமைச்சர்கள் என்போர் கேபினட் கூட்டங்களில் அவர்களது துறை சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடவும், கலந்து கொள்ளவும் அழைக்கப்படலாம். அவ்வாறு அழைக்கப்பட்டால் கேபினட் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலும்.
எனினும் இணை அமைச்சர் தன் விருப்பத்தின் அடிப்படையில் கேபினட் கூட்டங்களில் கலந்து கொள்ள பெரும்பாலும் தனிப்பட்ட அதிகாரம் (Independent Charge) ஏதேனும் வழங்கப்பட்டால் கேபினெட் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுவர்.
இணை அமைச்சர் என்பவர் கேபினட் அமைச்சருக்குக் கீழும், துணை அமைச்சருக்க மேலானதுமான தரத்தைப் பெறுகிறார். அமைச்சர் தனது தனிப்பட்ட காபினெட் பயன்படுத்த இயலாது.
துணை அமைச்சர்கள் என்பவர்கள் பொதுவாக அரசாங்க செயல் அலுவலர்கள் அல்லது பாராளுமன்ற செயலாளர்களே ஆவர். இவர்களது முக்கியப் பணி கேபினட் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களுக்கு உதவுவதே ஆகும்.
அமைச்சரவையின் இயல்புகள்
அமைச்சரவை அரசாங்கத்தின் (Cabinet System of Government) அடிப்படை அம்சம் அதன் கூட்டுப் பொறுப்பே (Collective Responsibility) ஆகும். இத்தன்மை இங்கிலாந்து அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும்.
Art.75 (3)-ன்படி அமைச்சரவைக் குழு (Council of Ministers) என்பது லோக் சபைக்கு கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாகும்.
அதாவது அனைத்து அமைச்சர்களும், அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் கொள்கைகள், தீர்மானங்கள் ஆகியவற்றிற்காக, அவை ஒரே ஒரு துறையினைப் பற்றியதாக இருந்தாலும் கூட, அதற்காக லோக் சபைக்கு கூட்டாக பதிலளிக்க கடமைப்பட்டவர்கள்.
தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அமைச்சரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அமைச்சரவையில் ஏதேனும் ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டால், அம்முடிவு அனைத்து அமைச்சர்களும் கூட்டாக எடுத்த முடிவே ஆகும்.
பாராளுமன்றத்திற்கு உள்ளாகவும், வெளியிலும். அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரும் அதைச் சார்ந்து செயல்படுவது அவர்களது கடமையாகும்.
அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் ஒரு முடிவுக்கு, ஒரு அமைச்சர் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால், அவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒரு அமைச்சர் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமலும், அதே சமயம் அமைச்சரவையில் உறுப்பினராகவும் இருக்க இயலாது. அனைத்து அமைச்சர்களும் ஒருங்கே செயல்பட்டாக வேண்டும்.
எனவே, ஏதேனும் ஒரு இலாக்காவின் கொள்கை விவகாரத்தை, லோக்சபை தோல்வியடையச் செய்தாலும் கூட, அத்துறையின் அமைச்சர் மட்டுமின்றி, அனைத்து அமைச்சர்களும், அதாவது அமைச்சரவையே இராஜினாமா செய்ய வேண்டும்.
எனவே அமைச்சரவை வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் ஒருமித்தே செயல்படும். ஆனால் ஒரு அமைச்சர் அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல், தன்னிச்சையாக ஏதேனும் ஒரு தீர்மானத்தை செயல்படுத்தினால், அதன் விளைவாக லோக்சபையில் அந்த விவகாரம் தோல்வியடைந்தால், அதற்காக அமைச்சரவை முழுமையாக இராஜினாமா செய்யத் தேவையில்லை. பதிலாக அந்த ஒரு அமைச்சர் மட்டும் இராஜினாமா செய்தால் போதும்.
கூட்டுப் பொறுப்பு
மேலும், அமைச்சரவை லோக்சபைக்கு கூட்டுப் பொறுப்புடையதாக உள்ளதைப் போலவே, ஜனாதிபதிக்கு தனிப்பொறுப்பு (Individual Responsibility) வாய்ந்த தாகும்.
எனவே அமைச்சரவையிலிருந்து, ஒரு அமைச்சர் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம், ஜனாதிபதியால் நீக்கப் பெற்ற எனினும் பிரதமரின் ஆலோசனையைப் பிறகே ஜனாதிபதி அவ்வாறு செய்ய இயலும்.
அமைச்சரவை உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் எந்த ஒரு சபையிலும் கலந்து கொள்வதற்கும் உரையாற்றவும், சபை நடவடிக்கைகளில் கலந்த கொள்வதற்கும் உரிமை உண்டு.
ஆனால் தாம் உறுப்பினராக இல்லாத சபையில் வாக்களிக்க அவருக்கு உரிமை இல்லை.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கும், கேபினட் கூட்டத்திற்கும் பிரதமரே தலைமை வகிக்கிறார். அதாவது அமைச்சரவையின் தலைவர் பிரதமரே, காபினட்டின் தலைவரும் பிரதமரே.
பிரதமரும் அமைச்சரவையும்
ஷரத்து 75 (1)-ன்படி ஜனாதிபதியே பிரதமரை நியமிக்கிறார். பிரதமரின் விருப்பத்தின்படி பிற அமைச்சர்களையும், ஜனாதிபதியே நியமிக்கிறார். பிரதமரின் விருப்பத்திற்கு மாறாக, ஜனாதிபதி அமைச்சர்களை நியமிக்க இயலாது. அமைச்சரவைக் குழுவில், பிரதமர் ஒர் தனிப்பட்ட இடத்தை வகிக்கிறார்.
பிரதமர்
பிரதமரே பிற அமைச்சர்களைத் தேர்வு செய்கிறார். பிரதமர் எந்த ஒரு அமைச்சரை வேண்டுமானாலும், பதவியை இராஜினாமா செய்யச் சொல்லிக் கேட்கலாம்.
அவ்வாறு கூறிய பிறகும், அந்த அமைச்சர் இராஜினாமா செய்ய மறுத்தால், பிரதமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி அந்த அமைச்சரை பதவியிலிருந்து நீக்குவார்.
அமைச்சரவைக் குழுவின் கூட்டத்திற்கு பிரதமரே தலைமை வகிப்பார். அமைச்சரவைக் குழுவின் தீர்மானங்களையும், முடிவினையும், பிரதமரே ஜனாதிபதிக்கு தெரிவிக்கிறார்.
அமைச்சரவைக் குழுவைத் தொடர்பு கொள்ள விரும்பினால், பிரதமரின் மூலம் ஜனாதிபதி தொடர்பு கொள்கிறார். பிரதமர் தாம் விரும்பும்போதெல்லாம், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
பிரதமரின் வரம்பற்ற அதிகாரமே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு உறுதியளிப்பதாக விளங்குகிறது. பிற அமைச்சர்கள் அனைவரும் பிரதமருக்கு நேரடியாக பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர்.
ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்குமிடையில் முக்கிய தொடர்பாளராக விளங்குபவர் பிரதமரே ஆவார். லோக் சபையின் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியின் தலைவராக விளங்குபவர் பிரதமரே ஆவார்.
கொள்கைகளின் பிறப்பிடம்
அரசாங்கத்தின் முக்கியக் கொள்கைகளைப் பாராளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்கிறார். எனவே பிரதமரே கொள்கைகளின் பிறப்பிடமாகத் திகழ்கிறார். மைய அரசு சம்பந்தப்பட்ட எல்லா அரசியல் தன்மை வாய்ந்த நியமனங்களும் ஜனாதிபதியால் செய்யப்பட்டாலும், அவற்றைப் பின்னால் இருந்து முடிவு செய்வது பிரதமரே ஆவார்.
பொதுவாக பிரதமரே லோக்சபையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுகிறார். அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, வேறு எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லையெனில், பதவியில் இருந்து விலகும் பிரதமர் குடியரசுத் தலைவருக்கு லோக்சபையைக் கலைத்து விடும்படி பரிந்துரை செய்ய அதிகாரம் பெற்றுள்ளார்.
இந்திய துணைப் பிரதமர்
குறித்து இந்திய துணைப் பிரதமர் பதவி குறித்து 6 அரசியலமைப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனினும் சில இந்தியப் பிரதமர்கள் , பிரதமர்களுடன் செயலாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணைப் பிரதமர் பதவி பொதுவாக அரசியல் காரணங்களை முன்னிட்டு நியமிக்கப்படுகிறது.