இப்பகுதில் TNPSC Examதோ்வில் மாநில சட்டமன்றத்தில் சட்டமியற்றும் முறை தொடா்பான கேள்விகள் உறுதியாக கேட்க கூடும் என்பதால் சுருக்கமாகவும் முக்கிய அம்சங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டமன்றத்தில் சட்டமியற்றும் முறை
ஒரு சபை முறை கொண்ட (Unicameral Legislature) மாநிலங்களில் சட்டமியற்றும் முறையில் ஏதும் சிக்கல் இல்லை. ஏனெனில் அனைத்து மசோதாக்களும், சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத் திற்குப் பின், நிறைவேற்றப்பட்டால், ஆளுநருக்கு அனுப்பப்படும். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அது சட்டமாகும்.
ஆனால் இரு சபை முறை (Bicameral Legislature) உள்ள மாநிலங்களாக இருப்பின் அங்கு சட்டமியற்றும் முறை, சற்றே மாறுபடுகிறது. பாராளுமன்றத்தில் சட்டமியற்றும் முறைக்கும், மாநில சட்டமன்றத்தில் சட்டமியற்றும் முறைக்கு சிறிதே வேறுபாடு காணப்படுகிறது.
மாநில சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதா, மாநில சட்டப்பேரவையால் நிராகரிக்கப்பட்டால், அந்த மசோதா முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
பண மசோதாவைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பின்பற்றும் வழிமுறைகளைப் போலவே, மாநில சட்டமன்றத்திலும் பின்பற்றப்படும்.
நிதி மற்றும் சாதாரண மசோதா
நிதி மற்றும் சாதாரண மசோதாக்களைப் பொறுத்தவரை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்ட மேலவைக்கு அனுப்பப்பட்டால், சட்ட மேலவை 1) அந்த மசோதாவை முற்றிலும் நிராகரிக்கலாம் 2) மசோதாவில் திருத்தங்கள் புகுத்தலாம் மூன்று மாதங்கள் வரை எந்தவித பதிலும் தராமல் வைத்திருக்கலாம்.
இவற்றில் எந்த வழியைப் பின்பற்றினாலும், சட்டப்பேரவை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி, இரண்டாவது முறையாக, சட்ட மேலவைக்கு அனுப்பினால், மீண்டும் 1 மாத காலம் வரை மேலவை தாமதப் படுத்த இயலும். அதற்கு மேலும் முடிவெடுக்காமல் வைத்திருந்தால், அந்த மசோதா நிறைவேறியதாகக் கருதப்படும். பின்னர் ஆளுநருக்கு அனுப்பப்படும்.
சட்டமேலவையைப் பொறுத்தவரை அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. பண மசோதா தவிர பிற மசோதாக்களை அதிகபட்சம் 4 மாதங்கள் வரை காலதாமதம் செய்வது மட்டுமே சட்டமேலவையால் செய்ய முடிந்த ஒன்றாகும்.
இரு சபைகள் உள்ள மாநிலத்தில் ஒரு மசோதா சட்ட மேலவைக்கு அனுப்பப்படும்போது, சட்ட மேலவை அம்மசோதாவை நிராகரிக்கலாம், அல்லது 3 மாதங்கள் முடியும் வரை அம்மசோதாவை நிறைவேற்றாமல் வைத்திருக்கலாம், அல்லது சட்டப்பேரவை ஏற்றுக்கொள்ளாத திருத்தங்களுடன் சட்டமேலவை அம்மசோதாவை நிறைவேற்றலாம்.
மேற்கண்ட மூன்று செயல்களில் சட்டமேலவை எதைச் செய்தாலும், சட்டப்பேரவை மீண்டும் மசோதாவை சட்ட மேலவையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டோ, ஏற்றுக்கொள்ளாமலோ, நிறைவேற்றி மீண்டும் சட்டமேலவைக்கு அனுப்பி வைக்கும்.
இரண்டாவது முறை சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை மேலவை நிராகரிக்கலாம், அல்லது 1 மாதம் முடியும் வரை மசோதாவை நிறைவேற்றாமல் வைத்திருக்கலாம், அல்லது சட்டப்பேரவை ஒத்துக்கொள்ளாத திருத்தங்களுடன் மசோதாவை நிறைவேற்றலாம்.
மேற்கண்ட முறையில் எதைச் செய்தாலும் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதா அதே வடிவில் அல்லது சட்ட மேலவை பரிந்துரை செய்து சட்டப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன், மாநில சட்டமன்றத்தால் (இரு சபைகளாலும்) நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும்.
இறுதியாக இம்மசோதா மாநில ஆளுநரின் இசைவைப் பெற்று சட்டமாகிறது. மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம், அல்லது சம்மதம் தர மறுக்கலாம்.
ஆளுநர் சம்மதம் தர மறுத்த மசோதாவை சட்டபையின் மறுபரிசீலனைக்குத் திருத்தங்களுக்கான பரிந்துரையுடன் ஆளுநர் அனுப்பி வைப்பார். அம்மசோதாவை சட்டசபை மீண்டும் ஆளுநரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டோ, நிராகரித்தோ மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பும்.
இவ்வாறு இரண்டு முறை சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் சம்மதம் தர மறுக்க முடியாது.
மாநில ஆளுநர் மாநில சட்டசபை நிறைவேற்றிய ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்போது, குடியரசுத் தலைவர் அம்மசோதாவிற்கு சம்மதம் தரலாம், அல்லது திருத்தப் பரிந்துரைகளுடன் சட்டமன்றத்திற்கு அனுப்பும்படி ஆளுநரைப் பணிக்கலாம்.
மாநில சட்டமன்றம் அம்மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டோ, நிராகரித்தோ மசோதாவை நிறைவேற்றி மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும். அம்மசோதா இரண்டு முறை சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட போதிலும் குடியரசுத் தலைவர் அதற்குச் சம்மதம் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .
பண மசோதா
பண மசோதாவைப் பொறுத்தவரை பாராளுமன்ற சபைகள் போலவே நடைமுறைகள் பின்பற்றப்படும். சட்ட மேலவைக்கு பண மசோதாவைப் பொறுத்தவரை 14 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
இறுதியாக இம்மசோதா மாநில ஆளுநரின் இசைவைப் பெற்று சட்டமாகிறது. மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம், அல்லது சம்மதம் தர மறுக்கலாம்.
ஆளுநர் சம்மதம் தர மறுத்த மசோதாவை சட்டபையின் மறுபரிசீலனைக்குத் திருத்தங்களுக்கான பரிந்துரையுடன் ஆளுநர் அனுப்பி வைப்பார்.
அம்மசோதாவை சட்டசபை மீண்டும் ஆளுநரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டோ, நிராகரித்தோ மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பும்.
இவ்வாறு இரண்டு முறை சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் சம்மதம் தர மறுக்க முடியாது.
மாநில ஆளுநர் மாநில சட்டசபை நிறைவேற்றிய ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்போது, குடியரசுத் தலைவர் அம்மசோதாவிற்கு சம்மதம் தரலாம், அல்லது திருத்தப் பரிந்துரைகளுடன் சட்டமன்றத்திற்கு அனுப்பும்படி ஆளுநரைப் பணிக்கலாம்.
மாநில சட்டமன்றம் அம்மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டோ, நிராகரித்தோ மசோதாவை நிறைவேற்றி மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும். அம்மசோதா இரண்டு முறை சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட போதிலும் குடியரசுத் தலைவர் அதற்குச் சம்மதம் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .
பண மசோதாவைப் பொறுத்தவரை பாராளுமன்ற சபைகள் போலவே நடைமுறைகள் பின்பற்றப்படும். சட்ட மேலவைக்கு பண மசோதாவைப் பொறுத்தவரை 14 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.
கூட்டுத் கூட்டம் (Joint Sitting)
மாநிலங்களில் மசோதா மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டுத் கூட்டம் (Joint Sitting) கூட்டும் முறை ஏதும் நடைமுறையில் இல்லை.
மாநிலங்களில் இரு அவைகளும் ஆளுநர் உரையாற்றும்போதும், ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் பேருரையின்போதும் மட்டுமே கூட்டுக் கூட்டமாக கூடுவர். இது தவிர பிற காரணங்களுக்காக கூட்டுக் கூட்டம் கூட்டப் படுவதில்லை .
சட்டமன்ற கூட்டத் தொடர்கள்
Article 174-ன்படி மாநிலத்தின் சட்டப் பேரவை அல்லது சட்ட மேலவை, அவ்வப்போது தேவைப்படும் இடத்திலும், உரிய காலத்திலும் கூட்டப்பட வேண்டும்
ஒரு கூட்டத்துக்கும் மற்றொரு கூட்டத்துக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது.
ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஒரு சபையின் கூட்டத் தொடரை முடித்துவிடலாம், அல்லது சட்டப் பேரவையாக இருப்பின் கலைக்கலாம்.
மாநில அமைச்சரவை
முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட ஒரு அமைச்சரவை இருக்க வேண்டும். அது ஆளுநருக்கு ஆலோசனை வழங்கி மாநில நிர்வாகம் திறம்பட நடைபெற உதவ வேண்டும் என்று ஷரத்து 163 கூறுகிறது.
மாநிலத்தின் பெயரளவு தலைவராக ஆளுநர் விளங்குகிறார், அதாவது மாநில அரசாங்கத்தின் உண்மையான அதிகாரம் மாநில அமைச்சரவையிடமே உள்ளது.
ஆளுநர் தன் விருப்ப அதிகாரங்களைப் பெற்றுள்ள போதிலும், அவர் அதைச் செயல்படுத்தும் நேரம் தவிர பிற நேரங்களில், அமைச்சரவையின் அறிவுறுத்தலின்படியே செயல்படுகிறார்.
அமைச்சர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் இல்லை. ஆளுநரின் விருப்பம் உள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிப்பர். எனினும் அமைச்சர்களின் இயல்பான பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
மாநில ஆட்சிக்குழு
மாநில ஆட்சிக்குழு ஆளுநரின் தலைமையில் விடப்பட்டிருந்தாலும், அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தான் இயங்க வேண்டும்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளுநர் சட்டமன்றத்தின் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை அழைத்து முதலமைச்சராக இருக்கக் கேட்டுக்கொள்வார்.
முதலமைச்சர் பற்ற அமைச்சர்களின் பட்டியலை தயாரித்து ஆஞரிடம் சமர்ப்பிப்பார் அதனை அப்படியே ஆளுநர் ஏற்றுக் கொண்டு, நியமிப்பார்
சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாதவரையும் அமைச்சராக நியமிக்கலாம். ஆனால் ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதேனும் ஒரு சபையில் உறுப்பினராக வேண்டும்..
எத்தனை அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு தற்போது சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் வரை இருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் எண்ணிக்கையை தேவைப்படும்போது கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.
அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் ஆளுநரிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவி ஏற்பர்.
மத்திய அரசாங்கத்தில் உள்ளதைப் போல மாநிலங்களில் பாராளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுவதால், அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் மாநில சட்டப் பேரவைக்கு பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை அமைச்சரவை பதவியில் நீடிக்கிறது.
சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் இராஜினாமா செய்ய கடமைப்பட்டுள்ளது.
மாநில அமைச்சரவையின் பணிகள்
மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்தல். கொள்கைகளை உருவாக்கி, மாநிலத்தின் அமல்படுத்துதல்.
சட்டமியற்றும் திட்டங்களை தீர்மானித்து அதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்தல்.
மாநிலத்தின் நிதிக்கொள்கையை முடிவு செய்தல். சமூக பொருளாதார மாற்றங்களுக்கான திட்டங்கள் தீட்டி மாநிலத்தை மேம்படுத்துதல்.
துணை நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து ஆளுநருக்கு ஆலோசனை வழங்குதல்.
அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரும் தொடர்புடைய துறையை கட்டுப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடுதல்.
ஆண்டு நிதிநிலை அறிக்கை அமைச்சரவையால் இறுதி செய்யப்பட்டு நிலைப்படுத்துதல்.
மாநிலத்தின் பொதுக் கொள்கையை உருவாக்கி, அமல்படுத்தும் நபர்களாக அமைச்சர்கள் உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்
அரசியலமைப்பின் பகுதி-21-ல் உள்ள ஷரத்து 370 (1)ன்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கென தனி அந்தஸ்து பற்றிக் குறிப்பிடுகிறது. இதன்படி அம்மாநிலத்திற்கென தனி அரசியலமைப்புச் சட்டம் உள்ளது.
1947-ம் ஆண்டு இந்திய சுதந்திரச் சட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகள் பிறக்க வழி வகுத்தது. அப்பொழுது இந்திய மாநிலங்கள் மேற்கண்ட இரு நாடுகளில் ஏதேனுமொன்றில் சேரவோ அல்லது சுதந்திரமாக இருக்கவோ விருப்புரிமை அளிக்கப்பட்டன.
அப்போது ஜம்மு-காஷ்மீரில் மன்னட்சி இருந்தது. ஜம்மு-காஷ்மீர், இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையாமல் தனித்த நாடாகவே நீடிக்க விரும்பியது. அவ்வாறு நீடிக்க முயற்சித்தது.
எனினும் பாகிஸ்தானின் தாக்குதலுக்குட்பட்டதன் காரணமாக, அக்டோபர் 26, 1947-ல் இந்தியாவுடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் ஜம்மு-காஷ்மீரின் சார்பாக அதன் மன்னர் ஹரி சிங் (Hari Singh) கையெழுத்திட்டார்.
அதாவது 26.10.1947-ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்து கொண்டது. எனினும் மக்களின் விருப்பம் இதில் வெளிப்படாதிருந்ததைக் கருத்தில் கொண்டு, காஷ்மீர் ஒரு முழு மாநிலத் தன்மையுடன் இந்தியாவுடன் இணைக்கப்படாமல், படிப்படியாக இணையும் மாநிலமாகவே கருதப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly) 17.11.1957-ல் இணைப்பை உறுதி செய்தது. இப்படி இணைந்ததால் தான் காஷ்மீருக்கு ஒரு தனி அந்தஸ்து (Special Status) தரவேண்டியதாயிற்று.
அரசியலமைப்பின் Art.370 ஜம்மு-காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை வரையறுத்துள்ளது. இந்த தனி அந்தஸ்து, அம்மாநிலத்துடன், இந்தியா கொண்டிருந்த ஒப்பந்தத்தின் விளைவாக வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சில சிறப்பம்சங்கள்
பஜம்மு-காஷ்மீருக்கென்று தனி அரசியலமைப்பு உள்ளது. அதன்படியே அம்மாநிலம் இயங்குகிறது. இந்த அரசியலமைப்பு ஜனவரி 26, 1957 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் தலைப்பின் மீதும், பாராளுமன்றம் சட்டமியற்ற இயலாது.
மேலும் மூன்று பட்டியல்களிலும் (Three Lists) குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்திடமே உள்ளது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை இந்த அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளது.
ஆனால் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், மாநில சட்டமன்றத் தேர்தலில் பங்கு கொள்ள விரும்புவோர், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் அது போலவே அங்கு சொத்துக்களை வாங்கவும், விற்கவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலப் பிரஜைகளுக்கே உரிமையுண்டு.
சொத்துரிமை (Right to Property) தற்போது ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் அடிப்படை உரிமையாக நடைமுறையில் உள்ளது.
தேசிய நெருக்கடி நிலையைப் பொறுத்தவரை, போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு காரணமாக மட்டுமே ஜம்மு-காஷ்மீருக்கு பிரகடனப்படுத்தப்பட இயலும். அதாவது ஆயுதமேந்திய (Armed revolt) உள்நாட்டுக் கலவசம் காரணமாக கொண்டுவரப்படும் நெருக்கடி நிலையை ஜம்மு-காஷ்மீரில் பிரகடனப்படுத்த இயலாது.
அரசியலமைப்பு இயந்திரம் சரிவர இயங்காத சூழ்நிலையில் ஜனாதிபதி ஆட்சியையும், தேவைப்பட்டால் 6 மாதங்கள் வரை ஆளு ஆட்சியையும் பிரகடனப்படுத்த இயலும்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலின்றி, அதன் எல்லைகளில் எந்தவித மாற்றத்தையும், பாராளுமன்றம் மேற்கொள்ள இயலாது.
ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரை நியமிக்கும்போது அம்மாநிலத்தை கலந்தாலோசித்த பின்னரே பாராளுமன்றம் நியமிக்க இயலும்.
பாராளுமன்றம் இயற்றும் முன் தடுப்புப் பாதுகாவல் சட்டங்கள் (Preventive Detention Acts) ஜம்மு-காஷ்மீருக்கு தானாகவே பொருந்தாது.
அத்தகைய சட்டங்கள் அம்மாநில சட்டமன்றத்தினால் அங்கீகரிக்கப் பட்ட பின்னரே செல்லத்தக்கவை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நிதி நெருக்கடி நிலையை (Financial Emergency) பாராளுமன்றம் அறிவிக்க இயலாது.
இந்திய அரசியலமைப்பின் Part-IV-ல் சொல்லப் பட்டுள்ள வழிமுறைக்கோட்பாடுகள் எதுவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கட்டுப்படுத்தாது.
இந்திய உயர்நீதிமன்றங்கள் கொண்டுள்ள அனைத்து அதிகாரங்களும், ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றமும் கொண்டிருக்கும்.
மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீதும் பரவக்கூடியதாகும்.
ஷரத்து 368-ன் கீழான அரசியலமைப்பைத் திருத்தும் வகைமுறைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது. அவ்வாறு பொருந்தவேண்டுமெனில், ஷரத்து 370 (1)-ன்படியிலான உத்தரவு ஒன்றை குடியரசுத் தலைவர் பிறப்பிக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவத்தை, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 05.08.2019 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
சட்ட முன்வடிவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகளை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35-A நீக்கம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு- காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்க வகை செய்கிறது.
இச்சட்ட முன் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பதற்கு முன்னர், இந்தியக் குடியரசுத் தலைவர், அரசியல் அமைப்புச் சட்டம் 370 (3)-இன் கீழ், 5 .08. 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35 A ஆகியவைகளை நீக்கி ஆணையிட்டுள்ளார்.