TNPSC EXAM | Legislative Assembly | Short Notes

இப்பகுதில் TNPSC தோ்வில் மாநில சட்டமன்றம் தொடா்பான கேள்விகள் உறுதியாக கேட்க கூடும் என்பதால் சுருக்கமாகவும் முக்கிய அம்சங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில சட்டமன்றம்

மத்திய அரசின் சட்டத்துறையாக எவ்வாறு பாராளுமன்றம் இயங்குகிறதோ, அவ்வாறே ஒவ்வொரு மாநிலத்தின் சட்டத்துறையாக அதன் சட்டமன்றம் விளங்குகிறது.

ஷரத்து 168 (1)-ன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநரை உள்ளடக்கிய சட்டமன்றம் ஒன்று இருத்தல் வேண்டும்.

மாநில சட்டமன்றம் என்பது ஒரு ஆளுநர் மற்றும் 1 அல்லது 2 சபைகளைச் பெற்றுள்ளது. ஒரு மாநில சட்டமன்றம் ஓரவை உடையதாகவோ, அல்லது ஈரவையை உடையதாகவோ இருக்கலாம். அதாவது

ஆளுநரும் சட்டப்போவையும் (Legislative Assembly) சேர்ந்து தான் மாநில சட்டமன்றமாகும். சில மாநிலங்களில் பேரவை(Legislative Assembly), பேரவை (Legislative Council) என இரண்டு அவைகள் இருக்கும்போது மேலவையும் சட்டமன்றத்தின் அங்கமாகும்.

தற்போது பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே மேலவைகள் உள்ளன.

ADVERTISEMENT

மேலவை இருக்கின்ற இடங்களில் அதனை நீக்கிவிடலாம் என்றோ, மேலவை இல்லாத இடங்களில் அதனை உருவாக்க வேண்டுமென்றோ சட்டப்பேரவை தீர்மானம் இயற்ற பாராளுமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம்.

மாநில சட்டப்பேரவை

மாநில சட்டமன்றத்தில் கீழவையை, பேரவை என்று கூறுவது வழக்கம். இது பாராளுமன்றத்தில் உள்ள லோக்சபையின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு செயல்படுகிறது.

ஒரு மாநில சட்டப்பேரவையில் 500-க்கு மிகாமலும், 60-க்குக் குறையாமலும் மாநிலத்தின் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என ஷரத்து 170 – குறிப்பிடுகிறது.

எனினும் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் ஒரு மாநில சட்டசபையின் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.

பதவிக்காலம்

சட்டப்பேரவையின் பதிவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராவதற்கு 25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

ஆங்கிலோ-இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் சட்டப்பேரவையில் இல்லாதிருக்கும்போது, ஆளுநர் ஒரு ஆங்கிலோ-இந்திய உறுப்பினரை நியமன உறுப்பினராக நியமிக்கலாம்.

ADVERTISEMENT

மாநில சட்டப்பேரவைக்கு சபாநாயகர் (Speaker) ஒருவரும், துணை சபாநாயகர் (Deputy Speaker) ஒருவரும் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுவர். மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் போலவே இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.

சட்டப்பேரவையின் பதவிக்காலம் இயல்பாக 5 ஆண்டுகள். எனினும் ஆளுநரால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கலைக்கப்படலாம்.

1976-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 42-வது சட்டத்திருத்தம் சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தியது.

இது எனினும் 44-வது திருத்த சட்டம் மீண்டும் 5 ஆண்டுகளாக மாற்றம் செய்தது. மேலும் தேசிய நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் போது, மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலத்தை, பாராளுமன்றம் நீட்டிக்க இயலும். எனினும் நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையின் பதவிக்கால நீட்டிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

MLA -ஆவதற்கான தகுதிகள்

மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராவதற்கு கீழ்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவையாவன – 1) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 2) மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவராக இருப்பின் (Legislative Assembly) 25 வயதும், மாநில சட்ட மேலவைக்குத் (Legislative Council) தேர்ந்தெடுக்கப்படுபவராக இருப்பின், 30 வயதும் நிரம்பியிருக்க வேண்டும்.

பாராளுமன்றம் அவ்வப்போது சட்டத்தின் மூலம் விதிக்கக்கூடிய பிற தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும். மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் மீது சட்டமியற்றும் முழு அதிகாரத்தையும் மாநில சட்டமன்றம் பெற்றுள்ளது. பொதுப்பட்டியலிலும் மாநிலங்கள் சட்டமியற்றலாம்.

ADVERTISEMENT

சட்டமன்ற உறுப்பினர் தகுதியின்மைகள்

ஒருவர் சட்டபைகளின் இருசபைகளிலும் உறுப்பினராக இருக்க இயலாது. அவ்வாறே மாநில சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் ஒரே நேரத்தில் உறுப்பினராக இருக்க இயலாது.

ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களில் உறுப்பினராக இருக்க இயலாது.

இந்திய அரசிடமோ, மாநில அரசிடமோ ஊதியம் பெறும் எந்தப் பதவியிலும் இருத்தல் கூடாது.

நீதிமன்றத்தில் கடன் தீர்க்க இயலாதவர் என்றும், மனநிலை தவறியவர் என்றும் அறிவிக்கப்பட்டவர்கள். பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதி பெறாதவர்கள் ஆகியோர் தகுதியின்மை உடையவர்கள்.

மாநில சட்ட மேலவை

மாநில சட்ட மேலவை அலங்கார சபையாக மட்டுமே உள்ளது.

சட்ட மேலவை நிலைத்திருப்பது என்பது கீழவையின் விருப்பத்தைச் சார்ந்ததாக உள்ளது.

ADVERTISEMENT

மாநில சட்டப்பேரவை மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்தால், பாராளுமன்றம் ஒரு சாதாரண சட்டத்தின் மூலம் எளிய பெரும்பான்மை மூலம் சட்ட மேலவையை ஏற்படுத்தவோ, ஏற்கனவே இருக்கின்ற மேலவையை நீக்கிவிடவோ இயலும்.

பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமலும், குறைந்தபட்சம் 40 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், அம்மாநிலத்தின் மேலவை அமைய வேண்டும்.

மேலவை என்பது கலைக்க முடியாத, தொடர்ந்து நீடிக்கும் அவையாக விளங்கும். எனினும் மேலவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் பதவி விலகுவார்கள்.

மேலவை உறுப்பினர்களில்  1/3 உறுப்பினர்கள் சட்டப் பேரவையின் மூலமாகவும்,  1/3 உறுப்பினர்கள் நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புக்கள் போன்றவற்றின் மூலமாகவும், 1/12 உறுப்பினர்கள் பட்டதாரிகள் தொகுதிகள் மூலமாகவும்,  1/12 உறுப்பினர்கள் ஆசிரியர்கள் தொகுதிகள் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்,

மேலும் 1/6 உறுப்பினர்கள் இலக்கியம், கலை, அறிவியல் சமூக சேவை மற்றும் கூட்டுறவு இயக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைக் கொண்டு மாநில ஆளுநரால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

மேலவைத் தேர்தல்

விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி, ஒற்றை மாற்று வாக்கெடுப்பு மூலம் நடைபெற வேண்டும்.

ADVERTISEMENT

மேலவையில் உறுப்பினராக வேண்டுமானால் 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

மாநில மேலவையின் நிலை, நாடாளுமன்ற மாநிலங்களவையின் நிலையைப் போன்றதே ஆகும். அவையின் சிறப்புரிமைகள், உறுப்பினர்களின் தகுதியிழப்பு, இரண்டு அவைகளுக்கும் இடையேயான உறவு, அவை நடவடிக்கைகள், பண மசோதா அறிமுகம் போன்ற விஷயங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

மேலவைத் தலைவரும், மேலவை துணைத்தலைவரும் மேலவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இராஜினாமா

சட்டமேலவையின் தலைவர் தமது பதவி விலகல் கடிதத்தை துணைத் தலைவருக்கும், துணைத் தலைவர் தமது பதவி விலகல் கடிதத்தை மேலவைத் தலைவருக்கும் அளிப்பதன் மூலம் இராஜினாமா செய்ய இயலும்.

பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி மேலவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யலாம்.

தமிழக சட்டமன்றம் (கீழவை | பேரவை)

1919-ம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் சென்னை மாகாண சட்டமன்றம் 1921-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. ஆளுநரால் நியமிக்கப்பட்ட 34 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 132 உறுப்பினர்கள் கொண்டதாக இந்த சட்டமன்றம் அமைந்தது.

ADVERTISEMENT

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 9-ஆம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளுக்கிணங்க கன்னாட் கோமகன் சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12, 1921-ல் தொடங்க வைத்தார்.

1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மேலவை. கீழவை என இரு அவைகள் உருவாக்கப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் சட்டமன்றம் மார்ச் 1, 1952-ல் அமைக்கப்பட்டது. இதில் சட்டப் பேரவை உறுப்பினர்களின் இடங்கள் 375 ஆக இருந்தது.

1956-ல் மொழி அடிப்படையில் தமிழ்நாடு உருவான பிறகு இந்த எண்ணிக்கை 206 ஆகக் குறைந்தது. பின்னர் மீண்டும் 1965-ல் தொகுதி சீரமைப்பு நடவடிக்கையின்படி 235 ஆக உயர்த்தப்பட்டது.

1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் தமிழக சட்டப்பேரவை (கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு) கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். தமிழகத்தில் 31.01.1976 முதல் 30.06.1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் இருந்தது.

ADVERTISEMENT

இரண்டாவது முறையாக 17.02.1980 முதல் 30.06.1980 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் (எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சி) நடைமுறைப் படுத்தப்பட்டது.

டிசம்பர் 24, 1987-ல் எம்.ஜி.இராமச்சந்திரன் இறந்ததால் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் காரணமாக, மூன்றாவது முறையாக 30.01.1988 முதல் 27.01.1989 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் (ஜானகி இராமச்சந்திரன் ஆட்சி) நடைமுறைப்படுத்தப்பட்டது.

நான்காவது முறையாக 30.01.1991 முதல் 24.06.1991 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் (கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி) நடைமுறைப் படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மொத்த இடங்களின் எண்ணிக்கை 235. இதில் 234 நபர்கள் தேர்தல் மூலமாகவும், 1 நபர் மாநில ஆளுநரால் நியமன உறுப்பினராகவும் தெரிவு செய்யப்படுவர்.

தற்போது உள்ள தமிழக சட்டப்பேரவை 15-வது சட்டப்பேரவையாகும். இது மே 2016-ல் தோற்றுவிக்கப்பட்டது. ஓ 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்றம் (மேலவை)

தமிழகத்தில் சட்ட மேலவை 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி தோற்றுவிக்கப்பட்டது. விதான் பரிஷத் எனப்படும் சட்டமேலவை ஓர் நிரந்தர சபையாகும். இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

ADVERTISEMENT

ஒவ்வொரு 2 ஆண்டுகள் முடிவிலும் இச்சபையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பதவி விலகுவர். இதன் உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

1937 முதல் 1950 வரை சட்ட மேலவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 54 ஆகவும், அதிகபட்சம் 56 ஆகவும் இருந்தது.

ஜூலை 14, 1937-ல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சட்ட மேலவை கூடியது. இந்த மேலவையில் மொத்தம் 55 உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்தியா குடியரசான பின்னர் தமிழகத்தில் 1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலின் போது சட்டமேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 அத உயர்த்தப்பட்டது.

தமிழக மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 1953-ம் ஆண்டுக்குப் பிறகு 51 எனவும், 1956-ம் ஆண்டு 50 எனவும் எண்ணிக்கையில் மாற்றம் பெற்றன. பின்னர் இறுதியாக 63 என நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலவை ஏப்ரல் 21, 1952 முதல் செயல்படத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதன் தலைவர் பி.வி.செரியன் (1952 முதல் 1964 வரை) ஆவார். இவருக்குப் பின் எம்.ஏ.மாணிக்கவேலுவும் (1964 முதல் 1970 வரை), அவரைத் தொடர்ந்து சி.பி.சிற்றரசுவும் (1970 முதல் 1976 வரை) மேலவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏப்ரல் 26, 1978-ல் ம.பொ.சிவஞானம் (1976 முதல் 1986 – வரை) மேலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் அக்டோபர் 31, 1986-ல் மேலவை கலைக்கப்படும் வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் மேலவைத் தலைவராக இவரே பணியாற்றினார்.

தமிழகத்தின் எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக சட்ட மேலவையைக் கலைப்பதற்கான தீர்மானம், 1986-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், தமிழ்நாடு சட்ட மேலவை நவம்பர் 1, 1986-ல்கலைக்கப்பட்டது. 

மேலவை கலைக்கப்பட்டபோது தமிழக முதல்வராக இருந்தவர் எம்.ஜி.இராமச்சந்திரன்.

தமிழக ஆளுநராக இருந்தவர் சுந்தர்லால் குரானா. இந்திய ஜனாதிபதியாக இருந்தவர் ஜெயில் சிங். இந்தியப் பிரதமராக இருந்தவர் இராஜீவ் காந்தி.

ADVERTISEMENT

சட்டப்பேரவையும், மேலவையும் தேனீர்க் கோப்பையின் அடித்தட்டும் கோப்பையும் (Cup & Saucer) போன்ற உறவு கொண்டவை என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட மேல்சபை கொண்டு வந்த முன் வரைவு மசோதா சென்னை விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடத் தடை செய்யும் சட்டத்துக்கான மசோதா (1947) ஆகும்.

2010-ல் தி.மு.க. அரசு தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைப்பதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. மே.16, 2010-ல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தமிழக மேலவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். எனினும் 2011-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மேலவை உருவாக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் முயற்சி தோல்வியடைந்தது.

தமிழக முதலமைச்சர்கள் (1920-2015)

சட்டமேலவையின் தலைவர் தமது பதவி விலகல் கடிதத்தை துணைத் தலைவருக்கும், துணைத் தலைவர் தமது பதவி விலகல் கடிதத்தை மலவைத் தலைவருக்கும் அளிப்பதன் மூலம் இராஜினாமா செய்ய இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *