TNPSC Exam Indian Polity Important Notes

TNPSC Group 4 Exam-ல் Indian Polity-இல் அரசு நெறிமுறைக்  கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் குறித்து முக்கிய விவரங்களை இக்கட்டுரையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையிலிருந்தே TNPSC தோ்வில் ஒன்று அல்லது இரண்டு வினாகள் வரலாம். விவரங்களை தனியாக குறிப்பு எடுத்து வைத்தக்கொண்டு படிக்கலாம்.

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

அரசுவழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles of State Policy) அரசியலமைப்பில் ஷரத்து 35 முதல் 51 வரை (Art.35-51) அமைந்துள்ளன.

அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள், சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை அடை வதற்காகவே அரசியலமைப்பில் புகுத்தப்பட்டுள்ளன.

அயர்லாந்து நாட்டு அரசியலமைப்பைப் பின்பற்றி. இந்த அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் என்னும் இப்பகுதி  நமது அரசியலமைப்பில் புகுத்தப்பட்டது.

இப்பகுதி, ஜனநாயக மற்றும் காந்தியக் கொள்கை அடிப்படையாக இந்த கலவையாக திகழ்கிறது.

ADVERTISEMENT

நெறிமுறைக் கோட்பாடுகள் என்றும், சட்டமியற்றும் போது இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது அரசின்கடமையாகும் என்றும் அரசியலமைப்பு வரையறுக்கிறது.

எனினும் இக்கோட்பாடுகள் சட்டத்தினால் நிலை நிறுத்தக் கூடியவை அல்ல (Not enforceablc by Court of Law).

இப்பகுதி, அரசுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுவான வழிகாட்டுதல்கள் (Directions or Instructions) எனலாம்.

அடிப்படை உரிமைகள் என்பது அரசியல் மக்களாட்சியை (Political Democracy) வழங்குகிறது என்றால், அரக வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் என்பது சமூக மற்றும் பொருளாதார (Social & Economic Democracy) மக்களாட்சியை ஏற்படுத்த விழைகிறது.

அதாவது நலம் பேணும் அாசு (Welfare State) எனும் கருத்தை அடைய முற்படுகிறது. இப்பகுதியில் விதிக்கப்பட்டவற்றை, எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.

ஆனால் விதிக்கப்பட்டுள்ள கொள்கைகள்  அனைத்தும் நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையானவைகளாகும்.

ADVERTISEMENT

சட்டங்களை இயற்றும் போது, இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் அடிப்படை கடமையாகும்.

வங்கியின் வசதிக் கேற்றவாறு பணம் வழங்கத்தக்க காசோலை போன்றது. வழிநாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் என்று கே.டி.ஷா குறிப்பிடுகிறார்.

சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்

அரசு, குறிப்பாக குடிமக்கள் அனைவரும், ஆண் பெண் என பெதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்.

ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் கிடைப்பதற்கும், தொழிலாளர் நலத்தையும், வேலைத் திறனையும், ஆண், பெண், குழந்தைகள் ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், உரிய வகையில் தமது கொள்கைகளை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். (ஷரத்து 39)

தன்னாட்சி அமைப்புகளாகச் செயல்படத் தேவையான கிராமப் பஞ்சாயத்துக்களை ஏற்படுத்துதல் (ஷரத்து -40)

நியாயமான மனிதாபிமான முள்ள பணிச் சூழல் மற்றும் மகப்பேற்று உதவிக்கான ஏற்பாடு (ஷரத்து 42)

ADVERTISEMENT

குடிமக்களுக்கு ஒரே மாதிரியான குடிமையியல் (சிவில்), சட்டம் (ஷரத்து 44)

குழந்தைகள் அனைவருக்கும் 14 வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். (ஷரத்து 45)

ஊட்டச் சத்து (Nutrition) நிலையையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துதல் மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துதலை அரசு தலையாய கடமைகளுக்கு உட்பட்டதாகக் கருத வேண்டும்.

குறிப்பாக மருத்துவக் காரணங்களின்றி, மதுபானங்களையும் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளையும் உட்கொள்வதற்கு தடை ஏற்படுத்த முயலவேண்டும். (ஷரத்து 47)

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள், பொருட்களைப் பாதுகாத்தல் (ஷரத்து 49)

நிர்வாகத் துறையிலிருந்து நீதித் துறையை தனிமைப்படுத்துதல் (ஷரத்து 50)

ADVERTISEMENT

சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும்வளர்த்தல், நாடுகளுக்கிடையே நியாயமான கௌரவமான உறவுகள், சர்வதேசப் பிரச்னைகளுக்கு பேச்சு வார்த்தை , மூலம் தீர்வு காண்பதை ஊக்குவித்தல் (ஷரத்து 51)

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி நெறிமுறைக் கோட்பாடுகள் என்னும் இப்பகுதி, அரசியல் நிர்ணய சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தற்காலிக மன இசைவை மட்டும் குறிப்பதன்று, மாறாக நாட்டுமக்களின் உன்னத மனோநிலையை, அரசியல் நிர்ணய சபையின் வாயிலாக தெரிவிப்பதே ஆகும்.

அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளும் அடிப்படைஉரிமைகளும்

அடிப்படைஉரிமைகள் நீதிமன்றத்தால் நிலை நிறுத்தப்படக் கூடியவை. ஆனால் நெறிமுறைக் கோட்பாடுகள் நிதிமன்றத்தால் நிலை நிறுத்த இயலாதவை

அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறைக்கோட்பாடுகள் – இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஏதேனும் முரண்பாடு நேரிட்டால், அடிப்படை உரிமைகளே மேலோங்கி நிற்கும்.

அடிப்படைஉரிமைகளுக்கும், நெறிமுறைக் கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு அதன் நீதிமன்ற நிலைப்புத் தன்மையாகும்.

அடிப்படை கடமைகள்

அடிப்படைக் கடமைகள் குறித்த ஷரத்துக்கள் பகுதி நான்கு A-ல் (Part IV-A) ஷரத்து 51 A-ல் அமைந்துள்ளன.

ADVERTISEMENT

அடிப்படைக் கடமைகள் என்னும் இப்பகுதி அரசியலமைப்பின் 42-வது திருத்தர் சட்டத்தின் போது 1976-ல்புதியதாக அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.

ஸ்வரன் சிங் கமிட்டியின் (Swaran Singh Committee) பரிந்துரையின் அடிப்படையில், 10 அடிப்படைச் கடமைகள் நமது அரசியலமைப்பில் ]976-ல்இணைக்கப்பட்டன.

Art.51 A-ல் குறிப்பிடப்பட்டுள்ள 10 கடமைகளும் தார்மீக அடிப்படையிலானவை மட்டுமே, நீதிமன்றத்தால் நிலை நிறுத்தப்படக் கூடியவை அல்ல

10 அடிப்படைக் கடமைகள் பின்வருமாறு

(1) அரசியலமைப்புக்குக் கீழ்ப் படிந்து, அதன் நோக்கங்களையும், ஸ்தாபனங்களையும் மதிப்பதுடன், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடத்தல்,

(2) நமது சுதந்திரப் போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்த உன்னத நோக்கங்களைப் பின்பற்றுதல்.

(3) இந்தியாவின் இறையாண்மையையும், ஒற்றுமையையும்,  ஒருமைப்பாட்டையும் காத்தல்,

ADVERTISEMENT

(4) நாட்டைக் காப்பதுடன், தேவையானபோது நாட்டு நலப்பணி செய்தல்,

(5) சமய, மொழி, வட்டார பிரிவினை வேறுபாடுகளை எல்லாம் கடந்து இந்திய மக்கள் அனைவரிடையேயும் சுகாதார உணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்த்தல். பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கின்ற செயல்களை விட்டொழித்தல்.

(6) நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மதித்துக்காத்தல்,

(7) காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்விட்ட இயற்கைச் சூழலை மேம்படுத்திப் பாதுகாத்தல், உயிரினங்களிடையே பரிவுடன் இருத்தல்.

(8) அறிவியல் மனப்பாங்கு, மனிதாபிமானம், ஆராய்ச்சியுணர்வு, சீர்திருத்த மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்தல்.

(9) பொதுச் சொத்தைப் பாதுகாத்தல், வன்முறையை விட்டொழித்தல்.

ADVERTISEMENT

(10) தொடர்ச்சியாக நம் நாடு முயற்சியில் பல முன்னேற்றங்களைக் காணவும், சாதனைகளைப் படைக்கவும் தனி மனித மற்றும் கூட்டு முயற்சிகள் அனைத்திலும் திறமையை வளர்க்கப் பாடுபடுதல்.

6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தருவது அக்குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளரின் கடமையாகும்.(இதுஅரசியலமைப்பின் 86- வது திருத்தத்தின் போது 2002-ல் ஷரத்து 51  (A) (k) என்ற புதிய 11 வது அடிப்படை கடமையாக புகுத்தப்பட்ட கடமையாகும்.)

தொிந்துக் கொள்வோம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேவா்வாணைத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 மற்றம் குரூப் 2 ஆகிய தோ்வுகளின் நாடுநாடப்பு பகுதியில் இவையும் கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

தேசிய மகளிா் ஆணையம்

தேசிய மகளிா் ஆணையம் இந்திய அரசால் முதன் முதலில் ஜனவாி 1992-ல் தேசிய மகளிா் ஆணையச் சட்டம் 1990-இன்படி உறுவாக்கப்பட்டது.

இவ்வாணையம் மகளிா் சாா்ந்த விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை அளிக்கவும், மகளிா் பாதுகாப்புக்காகவும் இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

தேசிய மகளிா் ஆணையத்தின் முதல் தலைவியாக திருமதி. ஜெயந்தி பட்நாயக் நியமிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

தற்போது இவ்வாணையத்தின்  தலைவராக திருமதி. ரேகா சர்மா உள்ளாா்.

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தின் தலைவியாக தற்போது எஸ். குமாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆணையத்தின் உறுப்பினர்களாக, டாக்டர் மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், ராணி ஆகியோருடன் சட்டபேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, வரலட்சுமி ஆகியோரும் நியமனம் நியமிக்கப்பட்டள்ளனா்.

தகவல் ஆணையம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட  ஆண்டு 2005. ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற நாள் 15.6.20105. இச்சட்டம் அக்டோபர் 12. 2005 முதல் நடைமுறைக்குவந்தது.

மத்திய தகவல் ஆணையம் ஒரு தலைமை தகவல்ஆணையர் மற்றும் 10-க்கு மிகாத எண்ணிக்கையில் பிற தகவல் ஆணையர்களைக் கொண்டதாக இருக்கும்.

தகவல் ஆணையர்களை ஜனாதிபதி நியமிக்கிறார். ஒவ்வொரு மாநிலமும் இவ்வாறு மாநில தகவல் ஆணையத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையராகப் பணியாற்றியவர் வஜாஹத் ஹபிபுல்லா ஆவாா்.

தற்போது தலைமை தகவல் ஆணையாகப் பணியாற்றுபவர் Yashwardhan Kumar Sinha என்பவர் ஆவார்.

முதன் முதலாக தகவல் அறியும் விண்ணப்பத்தை 12.10.2005 அன்று ஷாஹித் ராசா , பர்னி என்பவர் பூனாவில் ஒரு காவல் நிலையத்தில் அளித்தார்.

உலகிலேயே முதன் முதலாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் 1766-ல் ஸ்வீடன் நாட்டில் பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்களுடன் கூடிய மாநிலதகவல் ஆணையம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் முதல் மாநில தலைமை தகவல் ஆணையராகப் பணியாற்றியவர் எஸ்.இராமகிருஷ்ணன்,.ஐ.ஏ.எஸ்.

ADVERTISEMENT

தற்போது தமிழகத்தின் மாநில தலைமை தகவல் ஆணையர் திரு. ஆர்.ராஜகோபால், ஐ.ஏ.எஸ்.,(ஒய்வு) ஆவாா்.

இந்தியாவிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முதல் முதலாக நடைமுறைப்படுத்திய மாநிலம இராஜஸ்தான் ஆகும்.

Also Read >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *