இந்தப் பகுதியில் TNPSC தோ்வில் Political Science பாடத்திட்டத்திருந்து உறுதியாக இரண்டு வினாகள் இடம் பெற வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் Political Science பாடத்திருந்து இது வரை TNPSC Exam -ல் கேட்கப்பட்ட வினாகளை ஆய்வு செய்தும், சுருக்கமாகவும் one by one point-யாக தரப்பட்டுள்ளது.
அரசியல் அறிவியல் – பொதுவான தகவல்கள்
ஜீன்போடின் என்ற பிரெஞ்சு அரசியல் தத்துவஞானியே அரசியல் அறிவியல் என்ற சொல்லை உருவாக்கினார். இது சமூக அறிவியலின் ஒரு பிரிவாகும்.
அரசியல் அறிவியலின் மையக் கருத்து அரசே ஆகும். அரசு என்பது எப்போதும் மாறாமல் நிலையாக இருக்கக் கூடிய ஒன்று அன்று. அது எப்போதும் மாறுதலுக்கு உட்பட்டுள்ள ஓர் அமைப்பு ஆகும்.
அரசு மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய ஒரு படிப்போ அரசியல் அறிவியல் (Political Science) ஆகும்.
அரசியல்-அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில் ஆவார். இவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதியே. அரசைப் பற்றி தாம் எழுதிய கட்டுரைக்கு அரசியல் (Political) என்ற பெயரிட்டு, அச்சொல்லைப் பயன்படுத்திய முதல் சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் ஆவார்.
அரசியல் அறிவியல் அனைத்து அறிவியல்களிலும் தலைசிறந்தது என்கிறார் அரிஸ்டாட்டில்.
“அரசியல்” என்ற சொல் நகர அரசு என்ற பொருள்படும் Polis என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே ஆங்கிலம் சொல்லான பாலிடிக்ஸ் (Politics) என்னும் சொல் எடுத்தாளப்பட்டது.
R.G.Kettle அரசியல் அறிவியலை, அரசு பற்றிய அறிவியல் என்கிறார்.
Stephen Lealock என்பவர் அரசாங்கத்தைப் பற்றியதே| அரசியல், அறிவியல் என்கிறார்.
மனித, சமுதாயக் கட்டுப்பாடு பற்றிய படிப்பே அரசியல் அறிவியல் என்கிறார் காட்லின் (Catlin) என்பவர்.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால் அரசியல் அறிவியல் (Political Science) என்பது அரசின் அனைத்து அம்சங்களைப் பற்றிய படிப்பு ஆகும்.
அரசியல் அறிவியலின் இயல்பு
கிரேக்க அரசியல் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி முதலில் சமூக விலங்காக (Social animal) வாழ்ந்த மனிதன் பிறகு ஓர் அரசியல் விலங்காக மாறினான் என்பதாகும்.
மனிதன் தோன்றும்போதே சமுதாயம் தோன்றியது. தொடர்ந்து அரசும் தோன்றியது. அரசின் செயல்களை நிறைவேற்ற அரசாங்கம் என்ற அமைப்பும் உருவாகியது. இவ்வாறாக அரசையும், அரசாங்கத்தையும் மையமாகக் கொண்டு பேசப்படும் எல்லா அம்சங்களையும் தன்னகத்தே ஏற்கும் இயலே அரசியல் அறிவியல் (Political Science) ஆகும்.
லாஸ்கி, பர்க், சால்ட்டோ , மெயின்லாண்ட் போன்ற புகழ் பெற்ற அரசியல் சிந்தனையாளர்களும், எழுத்தாளர்கள்
சிலரும் அரசியல் அறிவியல் என்ற தலைப்பிற்கு மாறாக அரசியல் என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்.
காலின், வீக்கோ , ஹியூம், போடின், ஹாப்ஸ், மாண்டெஸ்கியு போன்றோர் அரசியல் அறிவியல் என்ற சொல்லையே பயன்படுத்தினர்.
அரிஸ்டாட்டில் அரசியல் நூலை சிறந்த அறிவியல் நூலாகக் கருதினார். எனினும் அரசியலை ஓர் அறிவியலாகக் கருதுதல் இயலாது என பொதுவாகக் கருதப்படுகிறது. அரசியல் நூலை ஒரு சமுதாய அறிவியல் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின்னர் நடத்தை சார் இயக்கம் தோன்றியது. நடத்தை சார் இயக்கம் என்பது அரசியல் அறிவியலில் தோன்றிய எதிர்ப்பு இயக்கம் ஆகும்.
சமூகவியலின் தந்தை அகஸ்தே காம்தே ஆவார்.
அரசும் அதன் கூறுகளும்
அரசு என்பது சமூக நிறுவனங்களிலேய அதிக வலிமை மிக்க அமைப்பாகும். மனிதன் ஒரு சமூகப் பிராணி ஆவான்.
ஆங்கிலத்தில் State (அரசு) எனப்படும் சொல் Status எனப்படும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
நக்கோலோ மாக்கியவல்லி எனும் அரசியல் சந்தனையாளர் தனது இளவரசன் அல்லது ப்ரின்ஸ் (Prince) என்ற நூலில் முதல் முதலாக அரசு என்ற சொல்லை பயன்படுத்தினாா்.
இறைமை தன்மை
இறைமை தன்மை என்பது உள் இறைமை மற்றும் வெளி இறைமை என இரு வகைப்படும்.
உள் இறைமை என்பதற்கு அரசு தனது எல்லைக்குள் உள்ள குடிமக்கள் மற்றும் சங்கங்கள் மேல் தலைமையான அதிகாரத்தைச் செலுத்தவல்ல அதிகாரமுடையதென பொருள்.
வெளி இறைமை என்பது தன் அதிகார எல்லைக்கு வெளியேயுள்ள யாரும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத சுதந்திர முடையது என பொருள்.
ஜீன் போர்டின் என்பவர் தான் தனது குடியரசைப் பற்றிய 6 நூல்கள் என்ற நூலில் இறைமை கருத்தை முதன் முதலாக முறைப்படியாக பயன்படுத்தினார்.
மக்கள், நிலப்பகுதி, அரசாங்கம், இறைமை ஆகியன அரசின் முக்கியக் கூறுகள் ஆகும்.
மக்கள் அரசின் தவிர்க்க முடியாத ஒரு அடிப்படைத் தேவையாகும். மக்கள் இல்லாமல் அரசு அமைய முடியாது.
அரசின் உறுப்பினர்கள் அதில் வாழும் மக்களே ஆவர். அரிஸ்டாட்டில் ஓர் அரசு தன்னிறைவு பெறுவதற்கு ஏற்ற வகையில் அதிக அளவு மக்களையும் அதே நேரத்தில் திறம்படி ஆட்சி செய்வதற்கு ஏற்ற வகையில் குறைந்த அளவு மக்களையும் கொண்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.
தத்துவஞானி பிளாட்டோ , ஓர் இலட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது என்று கருதினார். இந்த எண்ணிக்கைக்குள் அடிமைகள், குடிமக்கள் அல்லாதோரும் அடங்கமாட்டார். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.
ரூசோ கருத்துப்படி சீர்மை அரசுக்கு இன்றியமையாத மக்கள் தொகை எண்ணிக்கை 10,000 ஆகும்.
பொதுவாக ஓர் அரசின் மக்கள்தொகை அளவுக்கு மீறிப் பெரியதாக இருத்தல் கூடாது என்பது முக்கியம்.
நிலப்பகுதி
நிலப்பகுதி இறைமை என்பது அந்தந்த அரசின் எல்லைப்பகுதியினுள் சுதந்திரமாகவும் வெளியிலிருந்து கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதையும் தற்கால அரசு முறை வாழ்க்கை குறிக்கும் என பேராசிரியர் எலியட் குறிப்பிடுகிறார்.
அரசாங்கம்
அரசாங்கம் அரசின் மூன்றாவது கூறாகும். அரசு என்னும் கப்பலை ஓட்டிச் செல்லும் மாலுமியாக அரசாங்கம் திகழ்கிறது.
சட்டத்தை இயற்றி அமுலாக்க அரசுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று ஸ்ட்ராங் என்பவர் குறிப்பிடுகிறார்.
இறைமை
இறைமை என்பது அரசின் நான்காவது கூறாகும். இறைமை என்பது உயர்ந்த மற்றும் தலையாய அதிகாரம் ஆகும்.
நவீன அரசுகள் தோன்றும்போது அதனுடன் இறைமைக் கருத்தும் உருவாக்கப்பட்டது. இறைமை என்னும் சொல் (Sovereignty) லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதற்கு உயர்ந்த அதிகாரம் என்று பொருள்.
பெயரளவிலான இறைமை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதாகும். இது செயல்படுத்தப்படாத அதிகாரத்தைக் குறிப்பதாகும். உதாரணமாக இங்கிலாந்து அரசர் பெயரளவிலான அதிகாரம் பெற்றிருக்கிறார்.
உண்மை நிலை இறைமை (De Facto) என்பது ஒருவர் சட்டப்படியாகவும் அல்லாமல் மற்றும் அரசியலமைப்பு படியும் ஆதிரவு இல்லாமல் ஆட்சி செலுத்துவதைக் குறிப்பிடுகிறது.
சட்டரீதியான இறைமை (De Jure) என்பது சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் மற்றும் அரசியலமைப்புப் படி பெற்றுள்ள அதிகாரமாகும்.
ஒரு அரசில் இறைமை அதிகாரம் மக்களிடத்தில் இருப்பதை மக்கள்-இறைமை எனலாம். இந்தக் கொள்கை ரூசோவால் சொல்லப்பட்டு பின்னர் பிரெஞ்சு புரட்சியின் முக்கியக் கோரிக்கையாக அமைந்தது.
இறைமை தன்மை என்பது உள் இறைமை மற்றும் வெளி இறைமை என இரு வகைப்படும்.
உள் இறைமை என்பதற்கு அரசு தனது எல்லைக்குள் உள்ள குடிமக்கள் மற்றும் சங்கங்கள் மேல் தலைமையான அதிகாரத்தைச் செலுத்தவல்ல அதிகாரமுடையதென பொருள்.
வெளி இறைமை என்பது தன் அதிகார எல்லைக்கு வெளியேயுள்ள யாரும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத சுதந்திர முடையது என பொருள்.
ஜீன் போர்டின் என்பவர் தான் தனது குடியரசைப் பற்றிய 6 நூல்கள் என்ற நூலில் இறைமை கருத்தை முதன் முதலாக முறைப்படியாக பயன்படுத்தினார்.
பெயரளவிலான இறைமை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதாகும். இது செயல்படுத்தப்படாத அதிகாரத்தைக் குறிப்பதாகும். உதாரணமாக இங்கிலாந்து அரசர் பெயரளவிலான அதிகாரம் பெற்றிருக்கிறார்.
உண்மை நிலை இறைமை (De Facto) என்பது ஒருவர் சட்டப்படியாகவும் அல்லாமல் மற்றும் அரசியலமைப்பு படியும் ஆதிரவு இல்லாமல் ஆட்சி செலுத்துவதைக் குறிப்பிடுகிறது.
சட்டரீதியான இறைமை (De Jure) என்பது சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் மற்றும் அரசியலமைப்புப் படி பெற்றுள்ள அதிகாரமாகும்.
ஒரு அரசில் இறைமை அதிகாரம் மக்களிடத்தில் இருப்பதை மக்கள் இறைமை எனலாம். இந்தக் கொள்கை ரூசோவால் சொல்லப்பட்டு பின்னர் பிரெஞ்சு புரட்சியின் முக்கியக் கோரிக்கையாக அமைந்தது.
இங்கிலாந்தைச் சார்ந்த ஆஸ்டின் அவர்கள் இறைமை பற்றிய சட்டக் கோட்பாட்டை குறிப்பிட்டுள்ளார். அவரது கோட்பாடு இறைமை பற்றிய ஒருமைவாதக் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.
அரசு மற்றும் சமுதாயம்
அரசியல் சிந்தனையாளர்கள் அரசு மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டும் ஒன்றே என்றனர். அரசு என்பது சமுதாயத்தின் பகுதியாகும்.
சமுதாயம் தோன்றிய பின்னரே அரசு என்ற அமைப்பு உருதுவானது. அரசின் எல்லை வரையறைக்குட்பட்டது.
சமுதாயத்தின் வரையறை பெரியது. அரசின் நிலப்பரப்பு இறுதியானது. சமுதாயத்திற்கு எல்லைப்பரப்பு இல்லை.
அரசிற்கு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளது. சமுதாயத்திற்கு அத்தகைய அதிகாரங்கள் ஏதும் இல்லை .
அரசு மற்றும் தேசம் மொழி
ஆங்கிலத்தில் Nation என்ற சொல் நேஷியோ (Natin) என்ற லத்தீன் மொழிச் சொல்லியிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் பிறப்பு அல்லது இனம் ஆகும்.
தேசம் என்பதும் அரசு என்பதும் வெவ்வேறானவை. பண்டைய காலத்திலேயே இருந்தது.
ஆனால் தேசம் என்பது தற்காலத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாகும். அரசில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். தேசம் என்பது ஒரே வகையான மக்களைக் கொண்டதாகும்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஒரு தேசம், ஒரு அரசு என்ற கோட்பாடு செயல்பட்டு வருகிறது.
அரசும் அரசாங்கமும்
அரசும் என்பதும், அரசாங்கம் என்பதும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டும் வெவ்வேறானவை.
அரசு என்பது மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம் மற்றும் இறைமை ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டது. அரசாங்கம் என்பது அந்த நான்கு கூறுகளில் ஒன்றாகும். அரசு மூல அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
அரசாங்கத்தின் அதிகாரங்கள் அரசிடமிருந்து பெற்றவையே ஆகும். அரசு என்பது நிரந்தரமான என்றும் தொடரும் ஓர் அமைப்பு. அரசாங்கம் தற்காலிகத் தன்மை உடையது.
அரசு என்பது கருத்தை ஒட்டியது. காண முடியாதது. ஆனால் அரசாங்கம் என்பது காணக்கூடிய ஒரு திட அமைப்பாகும்.
அரசின் வகைகள்
காவல் அரசு (Police State) என்பது அரசிற்குள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதும் அந்நிய அரசுகளிடமிருந்து மக்களைக் காப்பதும் காவற் பணிகளாக கருதப்பட்டன.
மக்கள்-நல அரசு (Welfare State) என்பது அரசு காவற் பணிகளை மட்டும் செய்யக் கூடாது. அது மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என எதிர்பார்க்கப் பட்டது.
சமய சார்பற்ற அரசு (Secular State) என்பது சமயம் எதனையும் சாராமல் அனைத்துச் சமயங்களையும் சமமாக நடத்தும் அரசாகும்.
சர்வாதிகார அரசு என்பது மக்களுக்காக அரசல்ல அரசுக்காகவே மக்கள் என்ற கொள்கையைக் கொண்டது. இத்தகைய கொள்கை சில அரசுகளில் பின்பற்றப்பட்டன.
இத்தகை அரசில் மக்களின் உரிமைகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. உதாரணம் ஜெர்மனி (நாசிசம்), இத்தாலி (பாசிசம்) ஆகியன.
மார்க்சியம், அரசை முதலாளிகளின் சுரண்டல் கருவி என்றே கூறுகிறது. வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டுமெனில் அரசு ஒழிய வேண்டும் என்கிறது.
ஒரு அரசு விரும்பினால் சர்வதேச சட்டத்திற்குப் பணிகிறது. பணிந்தாக வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை .
அரசையும் சமுதாயத்தையும் சமம் என்று கருதும் நபர்களில் முக்கியமான நபர் எட்மண்ட் பர்க் ஆவார்.
தற்காலத்தில் தோன்றிய அரசுகளை தேசிய அரசுகள் (Nation States) எனலாம்.
முதன் முதலில் ஐரோப்பாவில் தோன்றிய தேசிய அரசு இங்கிலாந்து ஆகும். பிறகு ஆசியாவிலும், அதன் பின் ஆப்பிரிக்காவிலும் தேசிய அரசுகள் உருவாகின.
1947-க்குப் பிறகு இந்தியாவும் தேசிய அரசாக உருவானது. சோவியத் குடியரசு சிதைவடைந்த பல தேசிய அரசுகள் தோன்றின.