TNPSC Exam இயற்பியல் பகுதியில் இருந்து நான்கு முதல் ஆறு கேள்விகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஒன்றரை மார்க் ஒரு லட்சம் நபர்களை முந்தி செல்லும் ஆகையால் இப்பகுதியை நன்றாக திரும்பத் திரும்ப படித்து மனதில் நிறுத்திக் கொண்டால் TNPSC Exam இல் வெற்றி பெறுவது நிச்சயம்.
- இயற்பியல் (Physics) என்னும் சொல் ‘Physis’என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து பிறந்தது.’Physis’ என்னும் சொல்லுக்கு ‘இயல்பு’ அல்லது’இயற்கை’ என்று பொருள்.
- இயற்பியலின் தந்தை என ஐசக் நியூட்டன் குறிப்பிடப்படுகிறார். நவீன இயற்பியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.
- இயற்பியல் (Physics) என்பது வெப்பம், ஒளி, ஒலிபோன்ற வெவ்வேறு இயற்பியல் சூழல்களில் பருப்பொருள்களின் பண்புகளை அறிவதாகும்.
Contents
- அளவுகள்
- 1. பேரண்டத்தின் அமைப்பு (Nature of Universe)
- 2. வானியல் தொலைவு (Astronomical Unit)
- 3. வின்மீன் குழுக்கள் (Constellation):
- 4. அண்டங்கள் (Galaxies):
- 5. சூரியக் குடும்பம் (Solar System)
- எரிமீன்களும் (Meteors) விண்வீழ் கற்களும் (Meteorites):
- செயற்கைத் துணைக்கோள்கள் (Artificial Satellites):
- விண்வெளி ஆய்வுப் பயணம்:
அளவுகள்
- இயற்பியல் அளவுகள் பருப்பொருள்களின் பண்புகளை நிர்ணயிக்கின்றன. அவற்றை நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அளக்க முடியும்.
- அளவியல் என்பது வெவ்வேறு இயற்பியல் அளவுகளை அளக்கும் முறைகளையும் அவற்றின் அலகுகளையும் விளக்குகிறது.
- தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது அளவீடு (Measurement) தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட(Unit) எனப்படும்.
- எந்த ஓர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தர வேண்டும் இதனையே திட்ட அளவீடு(Standard unit), என்கின்றோம். முழம் சாண் போன்ற திட்ட அலகுகள் ஆகாது. அலகுகள் ஆகாது. மீட்டர், கிலோகிராம் போன்றவை நீளம், ஆகியன ஒன்றையொன்று சாராத அளவுகள். இவற்றை நாம் அடிப்படை அளவுகள் (Fundamental Units) என்கிறோம்.இவற்றைச் சார்ந்த பருமன் (Volume), அடர்த்தி(Density), வேகம் (Speed) போன்றவற்றை வழியளவுகள் (Derived Units) என்கிறோம்.
- பழங்காலத்தில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள் வெவ்வேறு அலகு முறையை நீளம், நிறை,காலம் ஆகியவற்றை அளக்கப் பயன்படுத்திவந்தனர். அவற்றில் சில.S FPS முறை- அடி, பவுண்ட், விநாடி. (Foot, Pound,Second)
- CGS(Centimetre, Gram, Second) முறைசென்டிமீட்டர், கிராம், விநாடி.
- MKS (Metre, Kilogram, Second) முறை மீட்டர்,கிலோகிராம், விநாடி பல அலகு முறைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தீர்க்க 1971-ம் ஆண்டு பன்னாட்டுஅலகு முறை ஏற்படுத்தப்பட்டது.
- இதனை S.I.(Systeme de International) அலகு முறை என்பர்.
- S.I. அலகு முறையின் 3 அடிப்படை அலகுகள்MKS அலகுமுறையில் உள்ளனவேயாகும் என்றாலும், S.I. அலகு முறையில் 7 அடிப்படை அலகுகளும், இரு துணை அலகுகளும் உள்ளன. மேலும் TNPSC Exam பற்றி தொிந்து கொள்ள >>> Click here <<<
அடிப்படை அலகுகள் :
- 1) நிளத்தின் அலகு மீட்டர். 2).நிறையின் அலகு கிலோ கிராம். 3) காலத்தின் அலகு விநாடி. 4).மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் 5) வெப்பநிலையின் அலகு கெல்வின். 6) ஒளிச்செறிவின் அலகு, கேண்டிலா. 7) பொருளின் அளவுக்கான மோல் ஆகியன.
- துணை அகுகள் 8) தளக்கோணத்தின் அலகு ரேடியன் திண்மக்கோணத்தின் அலகு ஸ்ட்ரேடியன், கிலோமீட்டர் என்பது நீளத்தின் பன்மடங்கு என்றும், சென்டிமீட்டர், மில்லிமீட்டர் என்பவை துணைப் பன்மடங்குகள் என்றும் குறிப்பிடப்படும்.
- அவ்வாறே குவிண்டால், மெட்ரிக் டன் என்பவை நிறையின் பன்மடங்குகள் என்றும், மில்லிகிராம் என்பன போன்றவை நிறையின் துணைப்பன்மடங்குகள் என்றும் அழைக்கப்படும்.
- நிமிடம், மணி, நாள், வாரம், மாதம் போன்றவை’காலத்தின் பன்மடங்குகள் என்றும், மில்லி விநாடி,மைக்ரோ விநாடி போன்றவை காலத்தின் துணைப்பன்மடங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- 1 விநாடி =1000 மில்லி விநாடி. அதாவது ஆயிரம்மில்லி விநாடி என்பது 1 விநாடிக்குச் சமம்.
- 1 விநாடி= 1000000 மைக்ரோ விநாடி. அதாவது 10 இலட்சம் மைக்ரோ ‘விநாடி என்பது 1 விநாடிக்குசமம்.
- SI அலகு முறையில் 7 அடிப்படை அளவுகளும், 22வழி, அளவுகளும் உள்ளன.
- அடிப்படை அளவுகளான நீளம், நிறை, காலம் இவைகளின் பெருக்கல் அல்லது வகுத்தல் மூலம் பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.
- உதாரணமாக பரப்பளவு என்பது அடிப்படை அளவான நிளத்தை இரு முறை பெருக்கி கணக்கிடுவதால் அது வழி அளவகும். கன அளவு, அடர்த்தி போன்றவையும் வழி அளவுகளே.
மேலும் TNPSC Exam பற்றி தொிந்து கொள்ள >>> Click here <<<
1. பேரண்டத்தின் அமைப்பு (Nature of Universe)
- தெளிவான இரவில் ஏறக்குறைய 6000 விண்மீன்களை( (Stars)நாம் வெற்றுக் கண்களால் காண முடியும்.
- விண்மீன்,சந்திரன், கோள்கள் மற்றும் எரிமீன்கள் (Shooting Stars) ஆகிய வான்பொருள்கள் -அண்டத்தொகுதியின் பகுதிகளாகும்.
- விண்மீன்கள் (Stars).ஒரு விண்மீன் என்பது ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கொண்ட ஒரு மிகப்பெரிய பந்து போன்றதாகும்.
- விண்மீன் என்பது ஒளி மற்றும் வெப்பத்தைத் தொடர்ந்து வெளியிடுகிறது. புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீசூரியன். அதனால் தான் சூரியன் பிற நட்சத்திரங்களை(Stars) (விண்மீன்) காட்டிலும் பெரிதாகத் தோன்றுகிறது.
- ஒவ்வொரு நாளும் சூரியனும் பிற விண்மீன்களும் வானத்தின் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றன.
- புவி மையத்தின் வழியே செல்லும் கற்பனை அச்சைப்பற்றி பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்வதால் சூரியன் தோன்றுவதும் மறைவதும் நிகழ்கிறது.
- இருப்பினும் வானத்தில் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நிலையாக இருப்பது போன்று தோன்றுகிறது. இந்த விண்மீன் துருவ விண்மீன் அல்லது போலாரிஸ் எனப்படுகிறது.
- பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் உருவானது தான் விண்மீன். இதன் அதிக நிறையினால் அணுக்கரு வினைக்குப் போதுமான வெப்பநிலை அதன் மையத்தில் உருவாக்கப்பட்டு ஆற்றல் வெளிப்படுகிறது.
2. வானியல் தொலைவு (Astronomical Unit)
- ஒரு தொலைவில் உள்ள விண்மீன்களில் இருந்து ஒளி பூமியை வந்தடைய பல மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இதனால், விண்மீன்களின் தொலைவு ஒளி ஆண்டைக்கொண்டு அளவிடப்படுகிறது.
- ஒளிக்கதிர் 3 x 10 அடுக்கு 8 மீட்டர்/ வினாடி ஆண்டில் செல்லக்கூடிய தொலைவை ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்கிறோம்.
- ஒரு ஒளி ஆண்டு என்பது 3 x 10 அடுக்கு 8 x 365 x 24 x 60 x60 அதாவது 9.46 x 10 அடுக்கு 15 மீட்டர் அல்லது 9.46 x10 அடுக்கு 12 கிலோ மீட்டர் (9,46,000 கோடி கிலோமீட்டர்).
- ஒளி ஒரு வினாடியில் மூன்று இலட்சம் கிமீ தூரம்செல்லும்.
- வானியல் தொலைவு மில்லியன் கிலோமீட்டரிலும் கணக்கிடப்படுகிறது. மில்லியன் கிலோமீட்டர் = 10 அடுக்கு 6 கிலோமீட்டர்.
- புவியில் இருந்து சூரியனின் தொலைவு = 1.496 x10 அடுக்கு 8 கிலோமீட்டர். இத்தொலைவே வானியல் அலகாகும் (Astronomical Unit – AU).அதாவது ஒரு AU என்பது 1.496 x 10 அடுக்கு 8 கி.மீ.சூரியனிடமிருந்து புவி ஏறக்குறைய 150 மில்லியன் கிலோமீட்டர் (150000000 கிமீ) (15 கோடி கிமீ)தொலைவில் உள்ளது. எனவே சூரியனிடமிருந்து புவியை அடைய ஒளி எடுத்துக் கொள்ளும் நேரம் 8நிமிடம் 20 வினாடிகள் (500 வினாடிகள்) (8.33நிமிடங்கள்). அதாவது 8.3 ஒளி நிமிடங்கள்.
- மணிக்கு 1000 கிமீ வேகத்தில் செல்லும் இராக்கெட் ஒன்று 17 ஆண்டுகளில் புவியில் இருந்து சூரியனை அடையும்.
- சூரியனுக்கு அடுத்தாற்போல் புவிக்கு அருகில் உள்ள விண்மீன் ஆல்பாசென்டாரி ஆகும்.
- ஏறக்குறைய 4.3 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.
3. வின்மீன் குழுக்கள் (Constellation):
- வின்மீன்குழுக்களை புவியில் இருந்து பார்க்கும் போது அவை சில வடிவ அமைப்புக்களில் இருப்பது, போல் தோன்றுகிறது. இத்தகையகுழுவிற்கு விண்மீன் குழு, (Constellation) என்றுபெயர்.
- நவீன வானியலார் வான்பொருட்களை 88 விண்மீன்குழுக்களாகப் (Constellations) பிரித்துள்ளனர்.அவற்றில்அசுவினி, பரணி, சித்திரைமிருகசீரிடம், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம்கன்னி, துலாம், மீனம் ஆகியன.
- உர்சா மேஜர் (Ursa Major) (சப்தரிசி), உர்சா மைனர்(Ursa Minor) (லாகு சப்தரிசி) மற்றும் ஓரியன் (Orion)(மிரிகா) போன்ற விண்மீன் குழுக்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய வெற்றுக் கண்களால் காணக்கூடிய விண்மீன் குழுக்கள்.
- உர்சா மேஜர் மற்றும் உர்சா மைனர் விண்மீன்குழுக்களை கோடை காலத்தில் பார்க்க இயலும்.
- வேட்டைக்காரன் போன்ற தோற்றம் கொண்ட ஓரியான் விண்மீன் குழு குளிர்காலத்தில் வடக்கு திசையிலும், கோடை காலத்தில் தென்திசையிலும் பார்க்கக்கூடிய ஒளிரும் தன்மை கொண்டதாகும்.
4. அண்டங்கள் (Galaxies):
- ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்ட விண்மீன்கள், தூசு மற்றும் போன்றவற்றைக் கொண்ட தொகுப்பே அண்டத்தொகுதி அல்லது பேரண்டம்(Universe) இத்தகையNICE IASபால்வழி (Milky Way) ஒரு அண்டமாகும்.
- இதில் ஏறக்குறைய 10″ விண்மீன்கள் அமைந்துள்ளன.பால்வழி மையம் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் உள்ளது.
- பால்வழி மையப் புள்ளியில் இருந்து சுமார் 27,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் அமைந்துள்ளது.
- பால்வழிக்கு வெளியில் அமைந்துள்ள அண்டங்களை மட்டுமே புவியில் இருந்து தொலை நோக்கி இல்லாமல் காண முடிகிறது.
- ஆண்ட்ரோமீடா (Andromeda) என்னும் அண்டம் மிக அருகில் ஒரு பெரிய அண்டமாகும். நமது அண்டத்தில் இருந்து சுமார் 2X10 அடுக்கு 6 ஆண்டுகள் தொலைவில் ஆண்ட்ரோமீடா அமைந்துள்ளது.
- புவியின் வட அரைகோளப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆண்ட்ரோமீடா அண்டத்தைப் பார்க்கமுடியும்.
- புவியின் தென் அரைகோளப் பகுதியில் வாழும் மக்கள் 160000 மற்றும் 180000 ஒளி ஆண்டுகள் தொலைவுகளில் அமைந்துள்ள சிறிய மற்றும் பெரிய மேக்னல்லானிக் முகில்களைப் (Magnellanic clouds) பார்க்க முடியும்.
5. சூரியக் குடும்பம் (Solar System)
- பால்வழி அண்டத்தின் ஒரு பகுதியில் கோள்கள், துணைக் கோள்கள் மற்றும் பிற வான்பொருள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இத்தொகுப்பிற்கு சூரிய குடும்பம் என்று பெயர்.
- சூரிய குடும்பத்தில் புதன் வெள்ளி புவி செவ்வாய் வியாழன் சனி மற்றும் நெப்டியூன் ஆகிய எட்டு கோள்கள் உள்ளன ப்ளூட்டோ என்பது சமீபத்தில் கோள்கள் பட்டியில் இருந்து நீக்கப்பட்டு விட்டது
- செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இருகோள்களுக்கு இடையில் குறுங்கோள்கள்(ஆஸ்டராய்டுகள்) (Asteroids) அமைந்துள்ளன. கோள்கள் அனைத்தும் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. குறுங்கோள்கள்என்பவை கோள்களில் இருந்து உடைந்த பகுதிகளே.
- சூரியனின் ஈர்ப்பு விசையால் கோள்கள் சூரியனைச்சுற்றி வருகின்றன.
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன்.மிகத்தொலைவில் உள்ள கோள் நெப்டியூன். கோள்களில் மிகப்பெரிய கோள் வியாழன். சனி இரண்டாவது மிகப் பெரிய கோள் ஆகும். கோள்களில் மிகச் சிறியது புதன்.
- புதன், புவியின் வெள்ளி கோள்களின் சுற்றுப்பாதைகள் சுற்றுப் பாதையைவிட சிறியதாக இருப்பதால் இவை கீழ்மட்டக்கோள்கள் (InferiorPlanets) எனப்படுகின்றன. கோள்களின் சுற்றுப்பாதைகள் புவியின் சுற்றுப்பாதையை விடபெரியதாக உள்ளதால் இவை உயர்மட்டக் கோள்கள்(Superior Planets) எனப்படுகின்றன.
- கோள்களைச் சுற்றி வரும் வான்பொருள், துணைக்கோள் அல்லது நிலவு (சாட்டிலைட்)(Satellite) எனப்படுகிறது.
- சூரியன் மட்டுமே ஒளியை உமிழ்கிறது. நிலவுஉள்ளிட்ட மற்றஒளியைஎதிரொளிக்கின்றன.
- புதன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களைத் தவிரமற்ற அனைத்துக் கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன. புவிக்கு ஒரு துணைக்கோள் (சந்திரன்)உள்ளது.
- வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் வால்மீன் (Comet) எனப்படும். வால்போன்ற அமைப்பு கொண்ட வால்மீனும் சூரியனைச் சுற்றி வருகிறது.
- சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியன் ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போல பில்லியன் (100கோடி) விண்மீன்கள் உள்ளன.
சூரியன் (Sun)
- கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் விதிகளும், நியூட்டன் புவிஈர்ப்பு விதியும், கதிர்வீச்சு விதிகளும் கதிர்வீச்சு விதிகளும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் தொலைவு பருமன் சுற்று நேரம் நிறை பரப்பு வெப்பநிலை மற்றும் கோள்களின் வளிமண்டலம் போன்ற இயற்பியல் பண்புகளை அறிய உதவுகின்றன.
- சூரிய குடும்பத்தின் ஆர (Radius) அளவு சுமார் 5.6x 10’9 கிலோமீட்டர்.
- சூரியனின் மொத்த ஆயுள் சுமார் 10 பில்லியன் ஆண்டுகள். இதில் 5 பில்லியன் ஆண்டுகள் முடிந்துவிட்டன.
- சூரியனின் உட்பகுதிக்கு ஒளிக்கோளம் (Photosphere)என்று பெயர்.சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை ஏறக்குறைய 14 மில்லியன் கெல்வின்அளவில் உள்ளது. சூரியனின் வெளிப்புறப்பகுதி நிறக்கோளம் (Chromosphere) எனப்படும். இதன் வெப்பநிலை சுமார் 6000 கெல்வின்.
புதன் (Mercury)
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன். இக்கோளில் வளிமண்டலம் கிடையாது.பகல் மற்றும் இரவுக்கிடையில் வெப்பநிலை மாறுபாடு மிக அதிகம் சூரியன் தோன்றும் முன்னரோ, மறைந்த உடனேயோ புதன் கோளை எப்போதாவது பார்க்க முடிகிறது. பிற நேரங்களில் சூரிய வெளிச்சத்தினால் இக்கோள் மறைந்துபடுகிறது.
- இக்கோளிற்கு துணைக்கோள் ஏதும் இல்லை.
வெள்ளி(Venus)
- வெள்ளி கோளின் ஆரம், நிறை மற்றும் அடர்த்தி போன்றவை புவியைப் போன்றே உள்ளதால் இதுபுவியின் இரட்டைப்பிறவி (Earth’s Twin) எனப்படுகிறது.
- வெள்ளி கோளின் மீது படும் சூரிய ஒளியில் 85 சதவீதம் எதிரொளிக்கப்படுவதால் இது மிகப்பிரகாசத்துடன் காணப்படுகிறது.
- வெள்ளி கோளின் பரப்பு வெப்பநிலை 700 கெல்வின். இக்கோள் சூரிய மறைவின் போது விண்மீனாகவும், சூரிய உதயத்தின் போது காலை விண்மீனாகவும் தோன்றுகிறது.மாலைவெள்ளி கோளுக்கு துணைக்கோள் ஏதும் இல்லை. மேலும் TNPSC Exam பற்றி தொிந்து கொள்ள >>> Click here <<<
புவி (Earth):
- புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன.சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள புவியின் ஆரம் 6400 கிமீ.வட தென் துருவங்கள் வழியாக செல்லும் தன் அச்சில் ஒருமுறை சுழல்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இச்சுழற்சியின் காரணமாக இரவு பகல் நிகழ்கிறது.
- புவி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365.25 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியின் சுழற்சி அச்சு தனது சுற்றுப்பாதை தளத்துடன் 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்து உள்ளது. இச்சாய்வினால் புவியில் பருவகால மாற்றங்கள் (Seasons) நிகழ்கின்றன.
- புவி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை அறிவோம்.
- சுழலும் புவியின் அச்சு, சூரிய ஒளியின் திசைக்கு செங்குத்தாக இருக்கும்போது, இரவு நேரமும் பகல்நேரமும் சமமாக இருக்கும். சூரியன் கிழக்கில் உதயமாகும், மேற்கில் மறையும்.
- கோடை காலத்தில், இரவு நேரத்தை விட பகல்நேரம் அதிகமாக இருக்கும். சூரியன் வடகிழக்கில் உதித்து, வடமேற்கில் மறையும்.
- குளிர் காலத்தில் பகல் நேரத்தை விட இரவு நேரம் அதிகமாக இருக்கும். சூரியன் தென்கிழக்கில் உதித்து தென்மேற்கில் மழையும் புவியின் சுழலும் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு 90 டிகிரி கோணத்தில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.
- புவியின் துணைக்கோளான சந்திரனும் தன்னைப் பற்றி தானே சொல்வதுடன் புரியும் சுற்றிவருகிறது இவ்விரு வகையான இயக்கங்களும் ஆகும் கால அளவு ஒன்றுதான் பொதுவாக நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடியும் மறுபக்கத்தைப் பார்க்க முடியாது
- புவியின் துணைக்கோளான சந்திரனும் தன் அச்சைப்பற்றி தானே சுழல்வதுடன், புவியையும் சுற்றிவருகிறது. இவ்விரு வகையான இயக்கங்களுக்கும் ஆகும் அளவு ஒன்று தான். பொதுவாக நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்கமுடியும். மறுபக்கத்தை பார்க்கவே முடியாது.
- நிலவு, புவியைச் சுற்றிவரும்போது, வானத்தின் ஒரேபுறத்தில் சூரியனும் நிலவும் இருக்கும் போது,நம்மால் நிலவைப் பார்க்கமுடிவதில்லை. ஏனெனில், நிலவினால் எதிரொளிக்கப்பட்ட ஒளி நமக்கு வருவதில்லை. இதுவே அமாவாசை (NewMoon) எனப்படுகிறது.
- நிலவு, புவியைச் சுரும்போது, சூரியனும் நிலவும் எதிர் எதிர் புறத்தில் இருக்கும்போது, நிலவைப் பார்க்கமுடிகிறது.ஏனெனில், நிலவினால் எதிரொளிக்கப்பட்ட ஒளி நமக்கு வருகிறது. இதுமுழு அதாவது பௌர்ணமி (Full Moon)எனப்படுகிறது.
- நிலவின் மேல் விழும் சூரியனின் ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுவதால் அது ஒளிர்கிறது. எனவே சூரியனால் வெளிச்சமாக்கப்படும் சந்திரனின் முன்புறப் பகுதியை மட்டும் நாம் காண முடிகிறது.பின்புறப் பகுதியை பார்க்க முடிவதில்லை.
- சந்திரனில் காற்றுமண்டலம் இல்லை. சந்திரன்புவியை ஒருமுறை சுற்றிவர 27.32 நாள்கள் ஆகும். இது சந்திரன் தன் அச்சில் ஒருமுறை சுழல்வதற்கு ஆகும் காலமாகிய 27.32 நாள்களுக்குச் சமமானதாகும். எனவே தான் சந்திரனின் ஒரு பகுதியே எப்போதும் புவியை நோக்கிக்காணப்படுகிறது.
- புவியிலிருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரன் உள்ளது.
- புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகும்.
- புவியின் வயது சுமார் 4 ஆயிரத்து 550 மில்லியன் ஆண்டுகள் புவியின் நிறை சுமார் 6000 மில்லியன் டன்கள்.
செவ்வாய் (Mars):
- வெற்றுக் கண்களால் செவ்வாய் கோளை காணும்போது அது சிகப்பாக தோன்றுவதால் செவ்வாய் சிவப்பு கோள் என பெயர் பெற்றது.
- செவ்வாய்க் கோள் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் நம்மால் காணமுடிகிறது எனினும் வானில் சூரியனுக்கு எதிர்திசையில் இருக்கையில் இது தெளிவாகத் தெரிகிறது.
- செவ்வாய்க் கோளுக்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ளன இக்கோள் களுக்கு வளிமண்டலம் இல்லை.
வியாழன் (Jupiter):
- சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள் வியாழன். மேகங்களால் வியாழன் கோள் சூழப்பட்டுள்ளது. இத்தகைய மேகங்களில் மிகப்பெரிய சிவப்புப்புள்ளி ஒன்றைக் காண முடிகிறது.
- வியாழன் கோளுக்கு 67 துணைக்கோள்கள் உள்ளன.
- முதன் முதலில் 1610-ம் ஆண்டில் கலிலியோ தொலைநோக்கியைக் கொண்டு சனி கோளை உற்றுநோக்கி முதன்முதலாகக் கண்டறிந்தார்.
- சனி கோளை வெற்றுக் கண்களால் காணும்போது அது மஞ்சள் நிறமாகத் தெரிகிறது.
- சனிகோளைச் சுற்றி அழகிய வளையங்கள் காணப்படுகின்றன.
- சனி கோளுக்கு 62 துணைக்கோள்கள் உள்ளன சனிக்கோளின் முக்கிய மற்றும் வெளிப்புறிவளையத்திற்கு இடைப்பட்ட பகுதிக்கு காசினிபகுதி (Cassini’ Division) என பெயரிடப்பட்டுள்ளது.
யுரேனஸ் (Uranus)
- தொலைநோக்கி கொண்டு காணும்போது யுரேனஸ் கோள் பச்சை நிறத்துடன் தெரிகிறது.
- இதற்கு 27 துணைக்கோள்கள் உள்ளன.
நெப்டியூன் (Neptune):
- நெப்டியூன் கோளை தொலைநோக்கியால் மட்டுமே. இக்கோளைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. நெப்டியூன் கோளுக்கு 14 துணைக்கோள்கள் உள்ளன.
வால்மீன்கள் (Comets):
- வால்மீன்கள் மிகச்சிறிய பருமன் கொண்ட வான்பொருட்கள் ஆகும். சூரியனை அதிநீள்வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன.
- வால்மீனின் வால் பகுதி சூரியனின் எதிர்த்திசையில் காணப்படும். பெரும்பாலும் வால்மீன்கள் சூரியனை நெருங்கும்போது சிறு சிறு துண்டுகளாகி விடுகின்றன.
- வால்மீன்கள் சூரியனை நெருங்கும் பொழுது அவற்றை புவியில் இருந்து பார்க்க முடிகிறது.
- பல வால்மீன்கள் குறிப்பிட்ட கால அளவிற்கு பிறகு திரும்பத் திரும்பத் தோன்றுகின்றன.
- மிகக்குறைந்த சுற்றுக்காலம் கொண்ட எங்கு (Enck’s comet) என்ற வால்மீனின் சுற்றுக்காலம் 3.3Comet) ஆண்டுகள்.
- ஹேல்-பாப் (Hale-Bopp) என்ற வால்மீன் 4000 ஆண்டுகளும், கோவ்டெக் (Khoutek’s Comet) என்ற வால்மீன்7,85,000 ஆண்டுகளும் சுற்றுக்காலம் உடையவை.
- ஹேலி (Halley’s Comet) வால் நட்சத்திரம் மற்றும் வால்மீன் 1884-1(Pons-Brooks) (பான்ஸ்-புரூக்ஸ்) மிகப்பிரகாசமானவை.
- ஹேலி வால் நட்சத்திரம் ஏறக்குறைய 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றகிறது. இறுதியாக 1986-ல் காணப்பட்டது. மீண்டும் இது 2062-ம் ஆண்டு தோன்றலாம்.
- 1992 நாளில் வியாழன் கோளில் இருந்து 43000 கிமீ தொலைவில் சூமேக்கர்-லெவி(Shoemaker-Levy) வால்மீனை வானியலாளர் கண்டறிந்தனர்.
- வியாழன் கோளின் ஈர்ப்புவிசையால் அந்த வால்மீன் 21 துண்டுகளாகசிதறுண்டு வியாழன்கோளின் மீது மோதிமறைந்தது.
- கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றி TNPSC Exam இல் வினா இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.
எரிமீன்களும் (Meteors) விண்வீழ் கற்களும் (Meteorites):
- எரிமீன்கள் என்பது எரிநட்சத்திரங்களே. எரிமீன்களை தெளிவான இரவில் காண முடிகிறது. எரிமீன்கள் விண்மீன்கள் அல்ல.
- எரிமீன்கள் பாறை அல்லது உலோகங்களின் சிறுதுண்டுகளாகும்.
- வால்மீன்கள் சூரியனுக்கு அருகில் செல்லும்போது அவை உடைந்து துண்டுகளாகி உருவாகின்றன.
- எரிமீன்கள் புவியின் வளிமண்டலத்தை குறுக்கிடும்பொழுது அவை உராய்வுகாரணமாக வெப்பமடைந்து, எரிந்துவிடுகின்றன. எனவே எரிமீன்கள் செல்லும் பாதை ஒளிக்கீற்றுகளாதக உள்ளன.
- பெரிய எரிமீன்கள் சிலசமயம் முழுதும் எரியாமல் அதன் சில பகுதிகள் புவியை அடைகின்றன.இவ்வகை எரிமீன்கள் விண்வீழ்தற்கள் (Meteorites)எனப்படுகின்றன.
செயற்கைத் துணைக்கோள்கள் (Artificial Satellites):
- கோளைச்சுற்றி வருகின்ற வான்பொருட்கள் துணைக்கோள்கள் என்று அறிவோம். சந்திரன்புவியின் இயற்க துணைக்கோள்.
- மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருளே செயற்கைத் துணைக்கோள். ஒரு பொருளை புவியைச் சுற்றி வரச்செய்யும்போது அது புவியின் செயற்கைத் துணைக்கோளாகிறது.
- இருப்பினும், செயற்கைத் துணைக்கோள்கள் சந்திரனைக் காட்டிலும் புவிக்கு மிக அருகில் உள்ளவையாகும்.
- செயற்கைத் துணைக்கோள்களும் புவியும் ஒரே சுழற்சி நேரத்தைக் கொண்டு சுற்றி வருகின்றன.செயற்கைத் துணைக்கோள்கள் அல்லது புவியோடு ஒத்திசைவு கொண்டு இயங்கும் துணைக்கோள்கள் (Geostationary or Geosynchronous Satellites) துணைக்கோள்கள் அழைக்கப்படுகின்றன.
- செயற்கைத் துணைக்கோள்கள் அறிவியல் தொடர்பான தகவல்களை சைகைகள் மூலம் புவிக்கு அனுப்புகின்றன.
- செயற்கைத் துணைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச்சென்று அவற்றை புவியின் செயற்கைத்துணைக் கோள்களாக அமைப்பதற்கு திறன்மிக்க விண்வெளி ஏவுவாகனங்களை அறிவியலறிஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
- உந்த அழிவின்மை விதி (Law of Conservation of Moementum) மற்றும் நியூட்டனின் மூன்றாவது இயக்கவிதியை (Newton’s Third Law of Motion)அடிப்படையாகக் கொண்டு ஏவுகணை இயக்கம் அமைந்துள்ளது.
- தற்போது உலக நாடுகளில் 6 நாடுகள் மட்டும் செயற்கைத்த துணைக்கோள்களை உருவாக்கவும், அவைகளை ஏவுவதற்கும் தேவையான தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.
- தொலைபேசி இணையம் வழியாக தொலைதூரதகவல் தொடர்பு, வானொலி நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு, கனிமவளங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் கண்டறிதல், வானிலை. விண்வெளி பற்றிய தகவல்களை சேகரித்தல் போன்றவற்றிற்கு செயற்கைத்துணைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- தொலைவில் இருந்து தகவல்களை சேகரிப்பதற்கு தொலை உணர்வு (Remote Sensing) என்று பெயர். இத்தொழில் நுட்பத்தைக்கொண்டு வானிலை, விவசாயம், நிலம் மற்றும் கடலின் தன்மை, கடலில் மீன் வளம் உள்ள இடம் போன்ற தகவல்களை அறியலாம்.
- இப்பகுதிலிருந்து TNPSC Exam-ல் கேள்வி இடம்பெறம்.
விண்வெளி ஆய்வுப் பயணம்:
- 1957-ம் ஆண்டில் ரஷ்யா முதல் விண்வெளி ஆய்வுப்பயணத்தை ஒரு ஏவி தொடங்கி வைத்தது எனலாம். தொடர்ந்து அதே ஆண்டில் அமெரிக்காவும் சிலவெற்றிகரமாக ஒரு செயற்கைக்கோளை ஏவியது
- .அமெரிக்கா விண்வெளி ஆய்வுக்கென தேசியவானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்) (National Aeonautic and Spcace Administration) NASA என்ற தனி நிறுவனத்தை தோற்றுவித்தது.
இந்திய விண்வெளித் திட்டம் (TNPSC Exam-ல் ஒரு வினா இடம்பெற வாய்ப்பு உள்ளது):
- விண்வெளி ஆராய்ச்சிக்கான இதேசியக் குழு(Indian National Committee Space Research -INCOSPAR) ஏற்படுத்தப்பட்டு 1962-ம் ஆண்டு இந்திய விண்வெளித் திட்டம் தொடங்கியது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ(ISRO Indian space Research Organisation) 1968-பெங்களூரில் ஏற்படுத்தப்பட்டது.
- 1970-ஆம் ஆண்டுகளில் ஆரியபட்டா, பாஸ்கரா ரோகினி மற்றும் ஆப்பிள் போன்ற செயற்கை துணைக்கோள்கள் பரிசோதனைக்காக திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றபட்டன.
- இவற்றைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டுகளில் இந்திய தேசிய செயற்கைத் துணைக்கோள் (INSAT-Indi.National Satellite) மற்றும் இந்திய தொலை உணர்வு , செயற்கைத் துணைக்கோள் (ஐ.ஆர்.எஸ்) (IRS Indian Remote Sensing Satellite) வெற்றிகரமாக ஏவப்பட்டடன.
- செப். 12, 2002-ல் சதீஷ்தவான் விண்வெளி மையம்,(SHAR) ஸ்ரீஹரி கோட்டா (ஆந்திரப்பிரதேசம் )வில் இருந்து 1060 கிலோ கிராம் நிறை கொண்ட வானிலை ஆய்வு செயற்கைக்கோள் (METSAT -Meteorological Satellite) துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனம் (PSLV-Polar Satellite Launch Vehicle) புவியோடு ஒத்திசைவு கொண்டு இயங்கும் மாற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது. பிறகு மெட்சாட் செயற்கைக்கோளுக்கு கல்பனா-1(KALPANA-1) என்று பெயர் மாற்றப்பட்டது.
- வானிலை முன்னறிவிப்பிற்கு மெட்சாட் செயற்கைத்துணைக்கோள் பயன்படுகிறது. ரோகினி வரிசை செயற்கைத் துணைக்கோள்கள் வானியல் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுகின்றன.
- ஏற்கனவே ஒத்திசைவு செயற்கைத்துணைக்கோள் ஏவு வாகனம் (GSLV – Geosynchronous Satellite Vehicle) வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
What’s up mates, how is the whole thing, and what you would like to say on the topic of this piece of writing, in my view its in fact remarkable designed for me.
Your method of telling everything in this article is genuinely good, every
one be able to effortlessly be aware of it, Thanks a lot.