சிறு மற்றும் பெருநகர வளர்ச்சித்திட்டம், நில உபயோக ஒழுங்குமுறை மற்றும் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், குடும்ப மற்றும் தொழில் பயன்பாட்டுக்கான நீர் விநியோகம், நகரக் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குடிசைப் பகுதி முன்னேற்றம், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், பிறப்புஇறப்பு பதிவு, தெரு விளக்கு-பொதுக் கழிப்பிட வசதிகள், கல்வி-கலாச்சார நாகரிகப் பகுதிகளை வளர்த்தல் போன்றவை 12-வது அட்டவணையில் உள்ள சில முக்கியத் தலைப்புக்கள்.
நகராட்சி அமைப்பு
ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று வகையான நகராட்சி அமைப்புகளை ஏற்படுத்த இச்சட்டம் வகை செய்கிறது. அவை
(1) நகரப் பஞ்சாயத்து (Nagar/Town Panchayat) – கிராம நிலையில் இருந்து நகர்ப்புறமாக மாறும் பகுதி. (2) நகராட்சி (Municipality) – சிறிய நகர்ப்புற பகுதி. (3) மாநகராட்சி (Municipal Corporation) பெரு நகரப் பகுதி.
மேற்கண்ட வகைப்பாடுகள் அப்பகுதி மக்கள் தொகை, மக்கள் நெருக்கம், ஆண்டு வருமானம், வேளாண்மையில் ஈடுபடாத மக்களின் விகிதாச்சாரம் போன்ற சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
இதர அமைப்புக்கள்
நகரீயங்கள் (Township) என்பவை பொதுத் துறை நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கென அமைக்கும் பகுதிகள்.
இராணுவக்கூட வாரியங்கள் (Contonement Boards) என்பவை மைய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட குதிகள். இவை பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடிக் கட்டுப்பாடின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
1924-ம் ஆண்டின் இராணுவக் கூடங்கள் பற்றிய சட்டத்தின் கீழ் இராணுவக் கூட வாரியங்கள் அமைக்கப்படுகின்றன. இராணுவப் படைகள் நிறுத்தப்படுவதற்கென அல்லது தங்குவதற்கென ஒரு நகரத்தில் உள்ள இடமே இராணுவக் கூடமாகும்.
மாநகராட்சி ஓ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி (Municipal Corporation) மிக உயர்ந்த நிலையில் உள்ள அடுக்காகும். எனவே மாநகராட்சி அதிகப்படியான அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
மாநில சட்டமன்றத்தால் இயற்றப்படும் சிறப்பு நகராட்சிச் சட்டங்களின் கீழ் மாநகராட்சிகள் பெரிய நகரங்களில் நிறுவப்படுகின்றன.
சாதாரணமாக – 10 – இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிகளாக அமைக்கப்படுகின்றன.
மாநகராட்சிகளின் ஆண்டு வருமானம் பொதுவாக ஒரு கோடியாகும்.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி, ஹைதராபாத் பெங்களூர் மாநகராட்சிகள் இந்தியாவின் மிகப்பெரிய மாநகராட்சிகளாக உள்ளன.
எனினும் சில இடங்களில் 2 இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்டுள்ள நகரங்களிலும் மாநகராட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவைகளின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மேற்படுவதில்லை .
மாநகராட்சியின் முக்கிய அங்கமாக மாநகராட்சி மன்றம் உள்ளது.
நிலப்பரப்பு, மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாநகராட்சி பல வட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வட்டத்திலிருந்தும், வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்பிரதிநிதிகள் அல்லது உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களை உட்கொண்டது தான் மாநகராட்சி மன்றம். மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. சென்னை மாநகராட்சி 100 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர் மேயர் (Mayor) ஆவார். அவரே நகரத்தின் முதல் குடிமகன் மற்றும் மாநகரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
மேயரை, மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். கவுன்சிலர்கள் தங்களுக்குள்ளிருந்து ஒருவரை துணை மேயராகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
மாநகராட்சி உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கினரின் பெரும்பான்மையால் மேயரும், துணை மேயரும் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
மேயர் ஒரு விழாத் (அலங்கார) தலைவராகத் திகழ்கிறார். விழாக்களில் அவர் மாநகரின் சார்பில் பங்கேற்கிறார். மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார்.
மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆணையர் (Commissioner) ஆவார். மாநகராட்சி மன்றத்தால் இயற்றப்படும் கொள்கைகளைச் செயல்படுத்துவது அவரது தலையாய பொறுப்பாகும்.
ஆணையர் பெரும்பாலும் இந்திய ஆட்சித் துறைப் பணியாளர். மாநகராட்சிப் பணியாட்கள் மீதான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை ஆணையரின் பொறுப்பாகும். மேலும் அவர் மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையைத் தயாரிக்கிறார். மாநகராட்சியின் நிர்வாகத்தில் அச்சாணியாக ஆணையர் திகழ்கிறார்.
நகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் நடு அடுக்காக நகராட்சி (Municipality) உள்ள து. நகராட்சி என்னும் சொல், சுயாட்சியுள்ள நகரத்தைக் குறிப்பிடுகிறது.
மாநிலத்திற்கு மாநிலம் நகராட்சிகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது. நம் நாட்டில் 1500க்கு மேற்பட்ட நகராட்சிகள் உள்ளன. ப
மாநில அரசுகள் இயற்றும் நகராட்சிச் சட்டங்களால் நகராட்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன. எந்த ஒரு சிறிய ஊரக அல்லது நகர்ப்புறப் பகுதியினையும் நகராட்சியென அறிவிக்கும் உரிமையை மாநில அரசு பெற்றுள்ளது.
ஒரு நகராட்சியை அமைப்பதற்கு குறைந்தபட்சமாக மக்கள் தொகை 5000 முதல் 50000 வரை இருக்க வேண்டும். மக்கள் தொகை, ஆண்டு வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நகராட்சிகள் 3 அல்லது 4 வகைகளாக பாகுபாடு செய்யப்பட்டுள்ளன.
தூய்மையான குடிநீர் விநியோகம், பொதுச் சாலைகள் அமைத்துப் பராமரித்தல், தெருவிளக்கு வசதி செய்தல், தெரு சுத்தம் மற்றும் கழிவுப் பொருள்களை அகற்றுதல், பிறப்பு-இறப்பு பதிவு செய்தல், மருத்துவமனைகள் மற்றும்
பள்ளிக்கூடங்களைப் பராமரித்தல் போன்றவை நகராட்சிகளின் கட்டாயப் பணிகளாக உள்ளன.
சொத்து வரி, தொழில் வரி, கால்நடை மற்றும் வாகன வரி, கேளிக்கை வரி, குடிநீர் மற்றும் விளக்கு வரி, அரசு வழங்கும் கடன்கள் மற்றும் மானியங்கள் போன்றவையே நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதாரங்கள்.
ஒவ்வொரு நகராட்சியும் ஒரு நிர்வாக அமைப்பைப் பெற்றுள்ளது. பல்வேறு வட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களை நகராட்சி கொண்டுள்ளது.
ஒவ்வொரு நகராட்சி மன்றமும் ஒரு தலைவரையும் (Municipal Chairman), துணைத் தலைவரையும் பெற்றுள்ளது. நகராட்சி மன்றத் தலைவர் மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். துணைத் தலைவர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நகராட்சி மன்றம், தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியவற்றின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். |
ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் நகராட்சி ஆணையர் (Municipal Commissioner) என அழைக்கப்படுகிறார். அவர் மாநில அரசுப் பணியாளராக உள்ளார்.
நகராட்சி மன்றத்தின் தீர்மானங்களையும், முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கிறார்.
நகரப் பஞ்சாயத்து (74-வது திருத்தம் புதியதோர் உள்ளாட்சி முறை)
அமைப்பு முறையாக நகரப் பஞ்சாயத்து (Town Panchayat) என்னும் அமைப்பை அறிமுகம் செய்தது. இந்த உள்ளாட்சி அமைப்பானது ஒரு கிராமப்புற எல்லையிலிருந்து ஊரக எல்லைக்கு இடப்பெயர்வில் உள்ள ஒரு பகுதிக்கென அமையப் பெறுகிறது.
இக்குறிக்கோளுக்கென 1 அல்லது 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ள ஒரு உள்ளூர்ப் பகுதி பஞ்சாயத்து நகரமாக (Town Panchayat) (அல்லது) நகரப் பஞ்சாயத்தாக அமைக்கப்படுகிறது.
ஒரு பஞ்சாயத்து நகரம் குறைந்தது 5000 மக்கள் தொகை கொண்டிருக்க வேண்டும். அதன் பெருவாரியான மக்கள் வேளாண்மை சாராத தொழில்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஒரு பஞ்சாயத்து நகரத்தின் ஆண்டு வருமானம் 1 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருத்தல் கூடாது.
மாநிலங்களின் தோற்றம்
சிக்கிம் இந்தியாவின் 22-வது மாநிலமாக 36-வது திருத்தச் சட்டத்தின் மூலம் 1975-ல் உருவாக்கப்பட்டது.
மிசோராம் இந்தியாவின் 23-வது மாநிலமாக 1987-ல் தோற்றுவிக்கப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 24-வது மாநிலமாக 1987-ல் தோற்றுவிக்கப்பட்டது.
கோவா இந்தியாவின் 25வது மாநிலமாக 1987-ல் தோற்றுவிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் இந்தியாவின் 26-வது மாநிலமாக 1.11.2000 ல் தோற்றுவிக்கப்பட்டது.
உத்தரகண்ட் இந்தியாவின் 27-வது மாநிலமாக 9.11.2000ல் தோற்றுவிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் இந்தியாவின் 28-வது மாநிலமாக 15.11.2000ல் தோற்றுவிக்கப்பட்டது.
தெலங்கானா இந்தியாவின் 29-வது மாநிலமாக 2.6.2014ல் தோற்றுவிக்கப்பட்டது.