TNPSC Exam | Indian Constitution | Important Amendments

இந்திய அரசியலமைப்பின் பகுதி-20-ல் (Part XX) ஷரத்து 368 அரசியலமைப்பின் திருத்த நடைமுறைகள் (Amendments) பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

அரசியலமைப்பு திருத்தம்

ஷரத்து 368-ல் அரசியலமைப்பைத் திருத்துவது (Amendment) குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி பாராளுமன்றமே அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பாகத் திகழ்கிறது.

அரசியலமைப்பைத் திருத்துவதற்கான, அரசியலமைப்பின் பல்வேறு ஷரத்துக்கள் மூன்று வகைகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன.

அவை (1) எளிய பெரும்பான்மை (Simple Majority) ஆதரவுடன் திருத்தம் செய்தல் (2) தனிப்பெரும்பான்மை (அ) சிறப்புப் பெரும்பான்மை (Special Majority) ஆதரவுடன் திருத்தம் செய்தல் (3) சிறப்புப் பெரும்பான்மை ஆதரவு மற்றும் மாநிலங்களின் ஒப்புதலாலும் திருத்தம் செய்தல் (Special Majority with ratification of States) ஆகியன.

எளிய பெரும்பான்மை திருத்தம்

ஒரு சாதாரண சட்டத்தைப் பாராளுமன்றம் நிறைவேற்றுவது போல, எளிய பெரும்பான்மை (Simple Majority) – ஆதரவுடன் (50 சதவீதத்திற்கு மேலான உறுப்பினர்களின் ஆதரவுடன்) அரசியலமைப்பின் சில சட்ட ஷரத்துக்களை பாராளுமன்றம் திருத்த முடியும்.

ஷரத்துக்கள் 4, 5, 6, 239-A, 312 ஆகியவை எளிய (Simple Majority) பலத்தால் திருத்தம் செய்யப்படக்கூடியவை.

ADVERTISEMENT

புதிய மாநிலங்களை உருவாக்குதல், மாநில எல்லைகளை மாற்றியமைத்தல், மாநிலங்களின் பெயர் மாற்றம், மாநில சட்ட மேலவையைத் தோற்றுவித்தல் அல்லது நீக்குதல், நம்பிக்கைத் தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானம், கண்டனத் தீர்மானம், பண மசோதா, நிதி மசோதா, இதர சாதாரண மசோதாக்கள், ஆண்டு நிதி நிலை அறிக்கை, மாநில சட்டப்பேரவைகள் இயற்றிய தீர்மானத்தை அங்கீகரித்தல் போன்ற செயல்பாடுகள் எளிய பெரும்பான்மை (Simple Majority) திருத்தம் மூலம் நடைபெறும்.

அரசியலமைப்பின் எந்த ஒரு பிரிவையும் எப்படி வேண்டுமானாலும் திருத்தவோ, மாற்றியமைக்கவோ, அடியோடு நீக்கிவிடவோ, பாராளுமன்றத்தால் இயலும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் அல்ல து கூறுகளை (Basic Structures of the Constitution) திருத்துவதாகவோ, மீறுவதாகவோ இல்லாத பட்சத்தில் அவற்றை எதிர்த்து எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது. அரசியலமைப்பு திருத்த மசோதாவின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், கூட்டுக் கூட்டம் (Joint Sitting) கூட்டப்பட இயலாது.

மேலும் இரு அவைகளும் தனித்தனியே திருத்த மசோதாவை அங்கீகரித்தால் மட்டுமே, ஜனாதிபதியின் ஒப்புதலைப்பெற்று அரசியலமைப்பைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புப் பெரும்பான்மை & மாநிலங்களின் ஒப்புதல் திருத்தம்

ஷரத்து 368 (2)-ன் கீழான நிபந்தனையின் கீழ் உள்ள அம்சங்கள் மற்றும் அரசியலமைப்பில் உள்ள அட்டவணைகளையும் திருத்துவதற்கு இந்த வகையான திருத்த முறை (Special Majority with ratification of the States) பின்பற்றப்படுகிறது.

இந்த வகையான திருத்த முறையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சோதா நிறைவேற்றப்பட்ட பின், அம்மசோதா இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கு மேலான மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலைப் பெற அனுப்பப்படும். பாதிக்கு மேலான மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்ற பின் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் முறை, மத்திய மற்றும் மாநிலங்களின் அதிகார நீட்டிப்பு, உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பற்றிய ஷரத்துக்கள், மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே சட்டமியற்றும் அதிகாரங்கள் மீதான பங்கீடு குறித்த அம்சங்கள், ஏழாவது அட்டவணையில் உள்ள அட்டவணைகள், நான்காவது அட்டவணை (இராஜ்யசபையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்), ஷரத்து 368-ல் (அரசியலமைப்பைத் திருத்தும் முறை) உள்ள அம்சங்கள் ஆகியவற்றை பாதிக்கு மேலான மாநிலங்களின் ஆதரவு பெற்று மட்டுமே திருத்த இயலும்.

ADVERTISEMENT

திருத்தம் மீதான கட்டுப்பாடுகள்

 அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு அல்லது அடிப்படை அம்சங்களைத் தவிர பாராளுமன்றம் அரசியலமைப்பின் எல்லா பகுதிகளையும் திருத்தலாம்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் (Basic Structure of the Constitution) பாராளுமன்றம் திருத்த இயலாது.

பாராளுமன்றம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு சிதையாமல் திருத்தங்கள் மேற்கொள்வதையும், அரசியலமைப்பின் பாதுகாப்பினையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்கிறது.

எனவே தான் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலன் (Guardian of the Constitution) எனப்படுகிறது.

கேசவானந்த பாரதி வழக்கில் தான் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு தோன்றியது. இதன்படி உச்சநீதிமன்றம் அவ்வப்போது குறிப்பிடும் அம்சங்கள் அடிப்படைக்கூறுகளாகக் அரசியலமைப்பின் கருதப்பட்டன.

அரசியலமைப்பின் இறைமை, குடியரசு மற்றும் மக்களாட்சி அரசாங்கம், சமய சார்பற்ற தன்மை, அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மை, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, முகவுரையின் நோக்கங்கள், சட்டத்தின் ஆட்சி, பாராளுமன்ற ஆட்சி முறை ஆகியவை அரசியலமைப்பின் சில அடிப்படைக் கூறுகள்.

ADVERTISEMENT

அரசியலமைப்பின் முதல் திருத்தம்

முதல் திருத்தம் ஜுன் 1951-ல் மேற்கொள்ளப்பட்டது. ஜமீன்தாரி ஒழிப்பு சட்டங்களை அங்கீகரித்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் இத்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்டன.

ஏப்ரல் 2016 வரையில் இந்திய அரசியலமைப்பில் 100 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கியத் திருத்தச் சட்டங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் முக்கிய திருத்தங்கள்

1-வது திருத்தம் (Amendments year 1951) – வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்துப் பரிமாற்றம் மற்றும் எந்தப் பணியும் மேற்கொள்வது போன்றவற்றிற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசுக்கு அனுமதி அளித்தது.

7-வது திருத்தம் (1956) – மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட இத்திருத்தம் வகை செய்தது. மேலும் ஏ,பி,சி,டி என்று இருந்த மாநிலப் பிரிவுகள் ஒழிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

10-வது திருத்தம் (1960-61) தாத்ரா, நாகர் ஹவேலி போன்ற போர்ச்சுகீசிய காலனிகள் இந்திய ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. தத்ரா நாகர்ஹவேலி என்ற புதிய யூனியன் பிரதேசம் தோற்றுவிக்கப்பட்டது.

11-வது திருத்தம் (1961) – துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை பாராளுமன்றத்தின் இருசபைக்கும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்போரில் காலியிடங்கள் உள்ளன என்று கூறி தேர்தலை எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

12-வது திருத்தம் (1962) – கோவா, டாமன்-டையூ போன்ற இடங்கள் யூனியன் பிரதேசப் பகுதிகளாக்கப்பட்டன.

13-வது திருத்தம் (1962-63) – நாகாலாந்தை இந்தியாவின் 16-வது மாநிலமாக்கியது.

14-வது திருத்தம் (1962) – பாராளுமன்றத்திற்கு மத்திய ஆட்சிப்பகுதியில் சட்டசபைகளை உருவாக்க சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

15-வது திருத்தம் (1962-63) – உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது.

ADVERTISEMENT

18-வது திருத்தம் (1966) – பஞ்சாபி மொழி பேசும் பகுதி பஞ்சாப் என்றும், இந்தி மொழி பேசும் ஹரியானா என்றும் பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

21-வது திருத்தம் (1967) – சிந்தி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

24-வது திருத்தம் (1971) – அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது இத்திருத்தத்தின் சிறப்பம்சம் ஜனாதிபதியின் மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் நீக்கப்பட்டதே.

மன்னர் மானியம்

26-வது திருத்தம் (Amendment year 1971) – மன்னர் மானியம் (Privy Purse) ஒழிக்கப்பட்டது.

31-வது திருத்தம் (1973) – பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545 ஆக உயர்த்தப்பட்டது.

மத்திய ஆட்சிப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 லிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது.

ADVERTISEMENT

35-வது திருத்தம் (1974) – சிக்கிம் இணை மாநிலஅந்தஸ்து (Associate State) பெற்றது.

36-வது திருத்தம் (1975) – சிக்கிம் இந்தியாவில் 22-வது மாநிலமாக உருவானது.

41-வது திருத்தம் (Amendments year 1976) – மாநில தேர்வாணையக் குழு உறுப்பினர்களின் உச்ச வயது வரம்பு 60 லிருந்து 62-ஆக உயர்த்தப்பட்டது.

மிக முக்கிய திருத்தம்

42-வது திருத்தம் (Amendments year 1976) – இதன் முக்கிய நோக்கம் சரண்சிங் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் செய்வதாகும்.

நீதித்துறையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. பாராளுமன்றம் மிகுந்த அதிகாரம் மிகுந்ததாக மாறியது.

அடிப்படை கடமைகள் பட்டியல் என்னும் புதிய பகுதி (Part IVA) இணைக்கப்பட்டது.

ADVERTISEMENT

42-வது அரசியல் திருத்தம் (Amendment) ஒரு சிறிய அரசியலமைப்பு (Mini Constitution) என்று குறிப்பிடும் அளவிற்கு இந்திய அரசியலமைப்பை புணரமைப்பு செய்தது எனலாம்.

இந்திரா அரசியலப்பு (Indra’s Constitution) என்றும் இது குறிப்பிடப்படும்.

42-வது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

42-வது திருத்ததின் மூலம் அரசியலமைப்பின் முகவுரையில், சமய சார்பற்ற, சமதர்ம, ஒருமைப்பாடு ஆகிய 3 சொற்கள் சேர்க்கப்பட்டன.

அடிப்படை கடமைகள் என்னும் புதிய பகுதி இணைக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள், அடிப்படை உரிமைகளை விட சக்தி வாய்ந்ததாக மாற்றப்பட்டது.

குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும் என திருத்தப்பட்டது.

ADVERTISEMENT

42-வது திருத்தச் சட்டத்தின்போது கல்வி என்னும் தலைப்பு பொதுப்பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

44-வது திருத்தம் (Amendments year 1978) சுருங்கக் கூறின் 42-வது திருத்தம் முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டது. சொத்துரிமை அடிப்படை உரிமை அன்று என்று குறிப்பிடப்பட்டது. உள்நாட்டுக் குழப்பங்களுக்காக அவசர நிலைப்பிரகடனம் செய்ய இயலாது.

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஒருவரை இரண்டு மாதத்திற்கு மேல் காவலில் வைக்க பரிசீலனைக் குழுவின் முன் அனுமதி பெற வேண்டும்.

55-வது திருத்தம் (1986) – அருணாச்சலப் பிரதேசம் முழு மாநில அந்தஸ்து பெற வகை செய்தது.

56-வது திருத்தம் (1987) – கோவாவுக்கு முழு மாநில அந்தஸ்து தரப்பட்டது. டாமன்-டையூ பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிப் பகுதியாக்கப் பட்டன .

58-வது திருத்தம் (1987) – அரசியலமைப்பின் அதிகாரப் பூர்வ ஹிந்தி மொழி பெயர்ப்பை வெளியிட வகை செய்தது.

ADVERTISEMENT

61-வது திருத்தம் (1989) – வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.

65-வது திருத்தம் (1990) – ஷரத்து 338 திருத்தப்பட்டு தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.

69-வது திருத்தம் – (1991) – டெல்லியை தேசிய தலைநகர ஆட்சிப் பகுதியாக (National Capital Territory) அறிவித்தது. மேலும் டெல்லிக்கு சட்டமன்றம் மற்றும் அமைச்சரவை ஏற்படுத்துவதற்கான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

70-வது திருத்தம் (1992) – டெல்லி மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உரிமையை வழங்கியது,

71-வது திருத்தம் (1992) – கொங்கணி, மணிப்பரி மற்றும் நேபாளி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

73-வது திருத்தம் (Amendments year 1993) – பஞ்சாயத்து இராஜ்யம் குறித்த விவரங்களைப் புகுத்தியது.

ADVERTISEMENT

74-வது திருத்தம் (Amendments year 1993) – நகராட்சி குறித்த விவரங்களைப் புகுத்தியது. இந்திய அரசியலமைப்பில் நகராட்சிகள் என்னும் பகுதி (Part IX-A) புதிதாக இணைக்கப்பட்டது.

69 சதவீத இட ஒதுக்கீடு

76-வது திருத்தம் (1994) – அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணை திருத்தப்பட்டு, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

86-வது திருத்தம் (2002) – 21 A என்ற புதிய ஷரத்தைப் புகுத்தியது.

மேலும் ஷரத்து 45, ஆறு வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கல்வி அளிக்கவும், மற்றும் சிறார் பருவத்திற்கான வாய்ப்புக்களை அளிப்பதிலும், போதிய கவனத்தை அரசு செலுத்த வேண்டுமென்றும் மாற்றியமைக்கப்பட்டது. அது போலவே 51-A-ல், (k) என்ற மற்றொரு அடிப்படைக் கடமை இணைக்கப்பட்டது.

இப்புதிய கடமையின்படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான கல்வி வசதியை அளிப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை என்று குறிப்பிடப்பட்டது.

88-வது திருத்தம் (2004) : சேவை வரி (Service Tax) விதிப்பதற்கான சட்டப்பூர்வ விதிகள் சேர்க்கப்பட்டன.

ADVERTISEMENT

89-வது திருத்தம் (2003) – தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Caste & Schedule Tribe) என்பது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) என்றும், பழங்குடியின பிரிவினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Tribes) என்றும் தனித்தனியே பிரித்து உருவாக்கப்பட வழி செய்தது.

கட்சித் தாவல்

91-வது திருத்தம் (2003) – கட்சித் தாவல் குறித்த விதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது.

கீழவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 40 உள்ள இடங்களுக்கு மட்டுமே, அதிகட்பசம் 12 அமைச்சர்கள் என்று வரையறுக்கப்பட்டது.

92-வது திருத்தம் (2004) – மைதிலி, போடோ , டோக்ரி மற்றும் சாந்தலி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

93-வது திருத்தம் (Amendments year 2006) – இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கென்று 27 சதவீத இட ஒதுக்கீடு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவதற்கான சட்டவரையறைகள் உருவாக்கப்பட்டன.

96-வது திருத்தம் (Amendments year 2011) : ஒரியா என்னும் பெயர் ஒடியா (Odia) என்று எட்டாவது அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

97-வது திருத்தம் (2012) : ஷரத்து 19-ன் கீழ் கூட்டுறவு சங்கங்கள் (Co-operative Societies) என்ற சொல் இணைக்கப்பட்டது.

மேலும் கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் ஒரு புதிய பகுதி (Part IX-B) அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.

98-வது திருத்தம் (2013) : ஹைதராபாத்-கர்நாடகா பகுதியை மேம்படுத்துவதற்கான அதிகாரங்களை கர்நாடக ஆளுநருக்கு இத்திருத்தம் வழங்க வழி செய்கிறது.

99-வது திருத்தம் (2014) : தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையம் (National Judicial Appointments Commission) தோற்றுவிக்கப்படுவதற்கு இத்திருத்தம் வழி செய்துள்ளது. எனினும் இத்திருத்தம் அக்டோபர் 2015-ல் உச்சநீதிமன்றத்தால் நீக்கி உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

100-வது திருத்தம் (2015) : இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கிடையில் நில ஒப்படைப்பு உடன்படிக்கையின்படி இருநாடுகளுகிடையே நிலப்பகுதிகள் பரஸ்பரம் ஒப்படைப்பு மேற்கொள்ளப்பட்டதை அங்கீகரித்து திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

101-வது திருத்தம் (Amendments date 1.7.2017) : ஜி.எஸ்.டி. சட்டம் குறித்த திருத்தமாகும். இத்திருத்தத்தின் மூலம் ஷரத்து 246 ஏ, 269 ஏ, 279 ஏ ஆகியவை இணைக்கப்பட்டன. மேலும் ஷரத்து 268 ஏ நீக்கப்பட்டது.

ADVERTISEMENT



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *