உயர்நீதிமன்றம்
அரசியலமைப்பின் பகுதி-6-ல் ஷரத்து 214 முதல் 237 வரை மாநில நீதித்துறை (உயர்நீதி மன்றமும் அதன் கீழுள்ள கீழ்நிலை நீதிமன்றங்களும்) பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
மாநில நீதித்துறையானது ஒரு உயர்நீதி மன்றத்தையும், அதன் கீழுள்ள பல கீழ்நிலை நீதிமன்றங்களையும் (Subordinate Courts) கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் கீழ் உயர்நீதிமன்றங்கள் வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் இருத்தல் வேண்டும் (Art.214).
எனினும் சட்டமியற்றுவதன் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானதாகவும் ஒரு உயர்நீதிமன்றத்தை உருவாக்க பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
மாநில நீதித்துறையின் தலைமை அமைப்பாக உயர்நீதிமன்றம் திகழ்கிறது.
இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கென்று, 24 உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
கொல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் 1862-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன.
நியமனங்கள்
ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதியையும், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிற எண்ணிக்கையில் பிற நீதிபதிகளையும் கொண்டு செயல்படும்.
உச்சநீதிமன்றத்தைப் போலன்றி, உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அரசியலமைப்பு வரையறுக்கவில்லை. மாறாக அந்த அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மட்டுமின்றி, ஜனாதிபதிக்கு கீழ்வரும் பிற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கென்று, கூடுதல் நீதிபதிகளை 2 ஆண்டுகளுக்கு மிகாமல், ஜனாதிபதி நியமிக்கலாம் உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாதபோதோ அல்லது பணியாற்ற இயலாத சூழ்நிலையிலோ (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர) அக்குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்.
அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதி, நிரந்தரமாக நியமிக்கப்பட்ட நீதிபதி பணியேற்கும் வரை பதவியிலிருப்பார்.
எனினும் கூடுதல் நீதிபதியாக இருப்பினும், தற்காலிக நீதிபதியாக இருப்பினும் 62 வயது வரை மட்டுமே பணியாற்ற இயலும்.
உயர்நீதிமன்ற பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, இந்திய தலைமை நீதிபதி, அந்த மாநில ஆளும் மற்றும் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிப்பதி ஆகியோரை ஆலோசித்த பின்னரே ஜனாதிபதி செயல்படுவார்.
நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தமது 62 வயது வரை பதவி வகிக்கலாம். உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது குறித்து எழும் தகராறுகளில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து ஜனாதிபதி முடிவெடுப்பார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தகுதிகள்
உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு கீழ்வரும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
(1) இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
(2) இந்திய நீதித் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருத்தல் வேண்டும்
(3) ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ தொடர்ந்து 10 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
அரசியலமைப்பில் குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் குறிப்பிடப்படவில்லை .
மேலும் உச்சநீதிமன்றத்தைப் போல சிறப்புமிக்க சட்டவியல் நிபுணரை நீதிபதியாக நியமிக்க இங்கு வழியில்லை .
உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யும் முறையைப் பின்பற்றி, குற்றவிசாரணை முறை மூலம் பாராளுமன்றத்தினால் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய இயலும்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கும் தன்மை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக (Independency) செயல்படுவதற்கென கீழ்வாரும் செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது.
ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஓய்வுக் காலத்திற்குப் பிறகு அதே உயர்நீதிமன்றம் தவிர பிற உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் மட்டுமே அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலும். எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடைசெய்யாது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் அந்தந்த மாநில தொகுப்பு நிதியத்தின் (Consolidated Fund of the State) செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், அம்மாநில சட்டமன்றத்தின் வாக்கெடுப்பு தேவையில்லை.
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரூ.90,000 மாத சம்பளமாகவும், பிற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரூ.80,000 மாத சம்பளமாகவும் பெறுகின்றனர். மேலும் அரசின் வாடகையற்ற வீட்டு வசதியும் இவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி (Financial Emergency) தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட இயலாது.
உயர்நீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின், குற்ற விசாரணை தீர்மானம் கொண்டுவரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.
உயர்நீதிமன்றத்தின் அதிகாரங்கள்
ஷரத்து 215-ன்படி ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஆவண நீதிமன்றமாக (Court of Record), அதாவது ஆவண நீதிமன்றமாகும்.
தன்னை அவமதித்தவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் அது பெற்றுள்ளது.
தனது அதிகார வரம்பிற்குள் வருகின்ற அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை (Tribunals) மேற்பார்வையிடும் அதிகாரத்தை ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் பெற்றுள்ளது.
ஷரத்து 226-ன்படி உயர்நீதிமன்றம், அடிப்படை உரிமைகளை வலியுறுத்திச் செயல்படுத்துவதற் காகவும் மற்ற சில நோக்கங்களுக்காகவும் 5 வகையான நீதிப்பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றுள்ளது.
9 சிவில் மற்றும் குற்ற வழக்குகள் இரண்டிலும் மேல்முறையீட்டு அதிகார வரம்பை உயர்நீதி மன்றம் பெற்றுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அதிகாரிகளையும், ஊழியர்களையும் நியமிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் உள்ளது.
தனக்குக் கீழுள்ள கீழ்நிலை நீதிமன் வழக்குகளை, அரசியலமைப்பின் பொருள் கருதி, கீழ்நிலை
நீதிமன்றத்திலி விசாரணைக்கான தானே எடுத்துக்கொ உயர்நீதி மன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
நீதிமன்றத்தின் பொருள் விளக்கம் நன்றத்திலிருந்து
சென்னை உயர்நீதிமன்றம்
மெட்ராஸ் இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி, சென்னை உயர்நீதி மன்றம் 1862 ஜுன் 26-ம் நாள் நிறுவப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிவரம்பு எல்லைகளாகும்.
சென்னை உயர்நீதிமன்ற கட்டிடம் 1892-ல் இந்தோசரசானிக் முறையில் ஹென்றி இர்வின் என்பவரது வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது.
முதல் உலகப்போரின் துவக்கத்தில், 1914, செப்டம்பர் 22-ம் நாளன்று எஸ்.எம்.எஸ்.எம்டன் என்ற ஜெர்மானிய போர்க்கப்பலின் தாக்குதலால் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுமானம் சேதமடைந்தது.
சட்ட நிகழ்வுகள் மற்றும் தகவல்களை வெளியிடும் மெட்ராஸ் சட்ட இதழ் (Madras Law Journal) 1891 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தால் வெளியிடப்பட்டது. இதுவே இந்தியாவில் தோன்றிய முதல் உயர்நீதிமன்ற சட்ட இதழாகும்.
சென்னை உயர்நீதிமன்றம் 150 வது விழாவை 2011-ல் கொண்டாடியது.
சென்னை உயர்நீதிமன்றம் தற்போது 60 நீதிபதிகள் கொண்டதாக உள்ளது. இவர்களில் 45 நிரந்த நீதிபதிகள், 15 கூடுதல் நீதிபதிகள் இருக வேண்டும்.
நமது உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி .முத்துசாமி அய்யர் என்பவர் ஆவார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி (சுதந்திரத்திற்குப் பி.வி.இராஜமன்னார் (1948-1961).
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஜூலை 24, 2004-ல் மதுரையில் உள்ள உலகநேரி உன்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
மதுரை கிளையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ரமேஷ் சந்திரா லகோத்தி துவக்கி வைத்தார்.
கீழ்நிலை நீதிமன்றங்கள்
உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ், கீழ்நிலை நீதிமன்றங்கள் (Subordinate Courts) இயங்குகின்றன.
மாவட்ட அளவில் இயங்கும் இவ்வகை நீதிமன்றங்கள் உரிமையியல் (சிவில்) சட்டத்துடன் தொடர்புள்ள உரிமையியல் நீதிமன்றங்கள், மற்றும் குற்ற நடைமுறைச் சட்டத்துடன் தொடர்புள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
இத்துடன், சிறு காரண நீதிமன்றங்களும் , பிராந்திய சிறு காரணங்கள் சட்டத்து இவ்வகையான நீதிமன்றங்கள் மாவட்ட அள அல்லது மாநில சிறு காரணங்கள் நீதி சட்டத்தின்படி மாநகரங்களிலோ படுகின்றன. சட்டத்தின்படி அளவிலே கள் நீதிமன்றஅமைக்கப்
விரைவு நீதிமன்றங்கள்
இந்தியாவில் 11-வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, விரைவு (Fast Track Courts) நீதிமன்றங்கள் 01.04.2001 முதல் இந்தியா முழுவதும் தோற்றுவிக்கப்பட்டன.