இக்கட்டுரை TNPSC Group 4 Exam-ல் Indian Polity பகுதியில் TNPSC தோ்வாளா்கள் கூடுதல் மதி்ப்பெண் பெற உதவியாக இருக்கும்.
மேலும் இந்திய சிட்டிசன் அனைவரும் இந்திய அரசியலமைப்பை தொிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு உரிய செயல் முறையில் (Due Process of Law)
எந்த ஒரு நபரின் வாழ்க்கையையும், அல்லது தனிநபர் சுதந்திரத்தையும், சட்டத்தால் உண்டாக்கப்பட்ட நடை முறைகளைத் (Procedure Established by Law) தவிர பிறவழிகளில் மீறக் கூடாது என ஷரத்து 21 குறிப்பிடுகிறது.
சட்டத்தினால் உண்டாக்கப்பட்ட நடை முறை என்பது, நீதிமன்றம் சட்டத்தை சட்டமன்றம் (அ) பாராளுமன்றத்தின் இறைமையை அடிப்படையாகக் கொண்டு, சட்டம் இயற்றியதில் உரிய நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்வதாகும்.
அதாவது, சட்டமியற்றப்பட்டதன் நோக்கம் குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்யாது. சட்டமியற்றப்பட்டதில் உரிய நடை முறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்று மட்டுமே ஆய்வு செய்தும், அவ்வாறு பின்பற்றப்படவில்லை என்றால் மட்டுமே அச்சட்டத்தை அரசியலமைப்புத் தன்மை அற்றது என்று தீர்மானிக்கிறது.
இதன் மூலமாக சட்டமியற்றும் அமைப்பின் நல்லெண்ணத்தையும், பொதுமக்களின் கருத்து வலிமையையும் நீதிமன்றம் எண்ணத்தில் கொள்கிறது.
இதற்கு மாறாக சட்டத்தின் உரிய செயல் முறை (Due Process of :aw) என்பது சட்டமியற்றப்பட்டதன் நடைமுறைகளை ஆய்வு செய்வதுடன், சட்டம் இயற்றப்பட்டதன் உள்நோக்கத்தையும் நீதிமன்றம் ஆய்வு செய்வதாகும். இது நிதிமன்றத்திற்கு அதிக அதிகாரக்கைத் தருகிறது.
இந்திய அரியலமைப்பு சட்டத்தினால் உண்டாக்கப்பட்ட நடைமுறை (Procedure Established by Law) என்ற கருத்தையே வழங்குகிறது. ஆனால் உச்சநீதிமன்றம் 1978-ல் மேனகா காந்தி வழக்கில் ஷரத்து 21-ம் அம்சங்களின் உட்கூறாய்வுப் பொருளில் சட்டத்தின் உரிய செயல்முறை (Duc Process of Law) என்ற கருத்தும் உள்ளது என்று கூறியது.
சட்டத்தால் உண்டாக்கப்பட்ட நடைமுறை (Procedure Established by Law) என்பது, அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள சட்டத்தின் உரிய செயல்முறை (Process of Law) என்பதை ஒத்ததாகும்.
ஷரத்து 22
சில சூழ்நிலைகளில் கைது செய்தல் மற்றும் சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு உரிமை பற்றி கூறுகிறது.
ஷரத்து 22 (Protection against arrest and detention) கைது செய்யப்பட்ட எவரும், இயன்ற அளவுவிரைவில் அதற்கான காரணங்களை அறிவிக்கப்படாமல் காவலில் வைக்கப்படமாட்டார்.
தாம் விரும்பும் வழக்குரைஞரைக் கலந்தாலோசிப்பதற்கும் அவரால் பாதுகாக்கப்படுவதற்குமான உரிமைகள் மறுக்கப்பட மாட்டாது.
மேலும் கைது செய்யப்பட்ட எவரும், அருகிலுள்ள குற்றவியல் நீதிபதி முன்பு, 24 மணி நேரத்துக்குள் ஆஜர்படுத்தப்பட வேண்டும். எனினும் தடுப்புக்காவல் சட்டத்தில் (Prevenlive Detenion Act) கைது செய்யப்பட்டவருக்கு இந்த விதி பொருந்தாது.
தடுப்புக் காவல் என்பதில் ஒரு குற்றம் ஒரு நபரால் செய்யப்படாமல் இருக்க அந்நபரை அக்குற்றம் செய்வதற்கு முன்பே காவலில் வைப்பதாகும்.
1950-ல் இயற்றப்பட்ட தடுப்புக் காவல் சட்டம் 1969-ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
எனினும் இதன் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் (Maintenance of Internal Security Board-MISA) 1971-லும், (Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act (COFEPOSA) 1974-லும் இயற்றப்பட்டன.
1980-ல் தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act) இயற்றப்பட்டது. 1984-ல் தடா (Terrorist and Disruptive (Prevention)Act, இயற்றப்பட்டது (Prevention of Terrorism Act) போட்டா சட்டம் 2002-ல் இயற்றப்பட்டது.
சுரண்டலுக்கு, எதிரான உரிமைகள்
சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் (Right against Exploitation) ஷரத்து 23 முதல் 24 வரை அமைந்துள்ளன.
ஷரத்து 23
ஷரத்து23 மனித இழிதொழில் வணிகம், கட்டாயத் தொழிலாளர் முறை தடை செய்கிறது.
ஷரத்து 23(1) : (prohibition of traffic in human beings & Forced labor) மனித வியாபாரம், மற்றும் அதே வடிவங்கொண்ட கட்டாயப்படுத்தி வேலைவாங்குதல் தடை செய்யப்படுகின்றன. இந்த ஏற்பாட்டை மீறுவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஷரத்து 23(2) : பொது நலனுக்காக கட்டாயப் பணியை அரசு சுபத்துவதை, இந்தப் பிரிவில் கூறப்பட்ட எதுவும் தடை செய்யாது.
இவ்வாறு பணியைச் சுமத்தும்போது, அரசு, மதம், இனம், ஜாதி அல்லது வர்க்கம் அல்லது இவற்றில் ஏதாவதொன்றின் அடிப்படையில் எந்த ஓரவஞ்சனையும் புரியாது.
மனித இழிதொழில் வாணிகம் (Traffic in human beings) என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளை இழிதொழிலில் ஈடுபடுத்துவதாகும்.
ஷரத்து 24 – குழந்தைத் தொழிலாளர் முறை தடை
ஷரத்து 24 (Prohibition of employment of children in factories etc.) 14 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும் தொழிற்சாலை அல்லது சுரங்கத்தில் வேலைக்கு அமர்த்தப்படக் கூடாது.
அல்லது வேறு எந்தக் கடும் பணிகளிலும் அமர்த்தப்படக்கூடாது. விதிக்கப்பட்டுள்ள தடைமுழுமையான (Absolute) தன்மையுடையது, அதாவது எந்த விதிவிலக்குக்கும் உட்பட்டதன்று.
சமய உரிமைகள்
சமய உரிமைகள் (Right to freedom of religion) ஷரத்து 25 முதல் 28வரை (Art.25-28) அமைந்துள்ளன.
ஷரத்து 25 இன்படி பொது ஒழுங்கு, அறநெறி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்குட்பட்டு, சுதந்திரமாக சமயத்தைக் கடைப்பிடித்து, பின்பற்றி, பரப்புவதற்கான உரிமை பெற்றவர்கள் ஆவர்.
ஷரத்து 26-இன்படி பொது ஒழுங்கு, அற நெறி, ஆரோக்கியத்துக்குட்பட்டு, ஒவ்வொரு மதமும் அல்லது அதன் பிரிவும் மத மற்றும் அறங்காப்புக் காரணங்களுக்காக (Charitable purposes) அமைப்புகளை நிறுவிப் பராமரிக்கவும்,
மதவிஷயங்களில் தமது விவகாரங்களைத் தாமே நிர்வகிக்கவும், அசையும் அசையாச் சொத்துக்களைவைத் திருக்கவும், ஈட்டவும், அந்தச் சொத்துக்களை சட்டப்படி நிர்வகிக்கவும் உரிமை பெற்றுள்ளன.
ஷரத்து 27ன்படி எந்த ஒரு நபரும், சமயக் காரணங்களுக்காக வரி செலுத்தும் படி நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்.
ஷரத்து 28-ன்படி முழுவதும் அரசு நிதியிலிருந்து பராமரிக்கப்படும் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் மதபோதனை நிகழ்த்தப்படமாட்டாது.
மதபோதனை நடத்தப்பட வேண்டுமெனக் கோரும் ஏதாவதொரு அறக்கட்டளை அல்லது வைப்பு நிதியால் உருவாக்கப்பட்டு அரசினால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்திற்கு இது பொருந்தாது.
பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (Cultural &Educational Rights) ஷரத்து 29 முதல் 30 (Art. 29-30) வரை அமைந்துள்ளன.
ஷரத்து 29 என்பது சிறுபான்மையினர் நலத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதன்படி, தமக்கென தனிப்பட்ட மொழி, வரி வடிவம்அல்லது பண்பாடு கொண்ட, இந்திய நிலப்பரப்பில் வாழும் குடிமக்களின் எந்த பிரிவினருக்கும் அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் உரிமை உண்டு.
அரசால் பராமரிக்கப்படும் அல்லது அரசு நிதியிலிருந்து உதவி பெறும் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும், மதம், இனம், ஜாதி, மொழி அல்லது இவற்றில் ஏதாவதொன்றின் காரணமாக எவருக்கும் அனுமதி மறுக்கப்பட மாட்டாது,
ஷரத்து 30 ன்படி மதம் அல்லது மொழி அடிப்படையிலான அனைத்து சிறுபான்மையினருக்கும், தாம் விரும்பும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிக்கும் உரிமை உண்டு.
44-வது திருத்தச் சட்டம் 1978
ஷரத்து 19 (1) (i) மற்றும் ஷரத்து 31-ன்படி 1978 வரை சொத்துரிமை நமது அடிப்படை உரிமையாக இருந்தது.
அடிப்படைஉரிமைகளில், மிகுந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதும், அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டதுமான உரிமை சொத்துரிமையே ஆகும்.
இந்த சொத்துரிமையின் அடிப்படையில், அதாவது தனி நபரின் சொத்துக்களை அரசு பொது நலனுக்காக ஆக்கிரமிப்பதும், அதற்காக அரசுவழங்கும் இழப்பீடு குறித்தும் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்தன.
1978 ஆண்டு, 44-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் போது, ஜனதா ஆட்சிக் காலத்தில், அடிப்படை உரிமைகளிலிருந்து, சொத்துரிமை நீக்கப்பட்டு, ஷரத்து 300-(a)-ல் சட்ட உரிமையாக சேர்க்கப்பட்டது.
இச்சமயம் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தாா்.
அரசியலமைப்பு தீர்வு உரிமைகள்
அரசியலமைப்பு தீர்வு உரிமை (Right to Constitutional Remedies) என்பது ஷரத்து 32-ன் கீழ் அமைந்துள்ளது.
அடிப்படை உரிமைகள் பகுதியில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைச் செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் முறையிடும் உரிமை ஷரத்து 32-ல் வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பகுதி 3-இல் அடிப்படைஉரிமைகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை முழுமையாக அனுபவிக்கவும், உரிமை மீறலைத் தவிர்க்கவும், உரிமையை நிலை நாட்டவும் ஷரத்து 32 மற்றும் ஷரத்து 226 வழி வகை செய்கிறது.
குடிமகனின் அடிப்படை உரிமை அரசால் மீறப்படின், அவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்பதே ஷரத்து 32-ன்படி, குடிமகனின் அடிப்படை உரிமையாகும். மேலும் அவர் ஷரத்து 226-ன்படி, உயர் நீதிமன்றத்திலும் மனுச் செய்து கொள்ளலாம்.
அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குறிப்பிடப்பட்ட ஷரத்து 32 அரசியலமைப்பின் மிக முக்கிய ஷரத்தாகும்.
பொதுநல மனுக்கள் (Public Interest Litigation-PIL) இந்த ஷரத்தின் படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொதுநல மனுக்கள் சார்ந்த வழக்குகளை நீதியரசர் ஆர்.கிருஷ்ணய்யர் மற்றும் பி.என். பகவதி ஆகியோர் 1983-ல் அறிமுகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுநல வழக்குஎன்ற கருத்துப் படிவம் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து நாம் எடுத்துக்கொண்ட கருத்தாக்கமாகும். பொதுநல வழக்கு என்ற கருத்து, நீதி மறு ஆய்வு என்ற கருத்தாக்கத்தில் இருந்து தோன்றிய புதிய கருத்தாகும்.
இந்தப் பகுதியில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைச் செயல்படுத்துவதற்காக ஆட்கொணர் வித்தல் (Habeas Corpus), செயலுறுத்தல் (Mandamus), தடையுறுத்தல் (Prohibition), தகுதிமுறை வினவுதல் (Quo Warranto) மற்றும் நெறிமுறையுறுத்தல் (Certiorari) உட்பட்ட தகுந்த (Writs) நீதிப் பேராணைகளையும், உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.
ஹேபியஸ் கார்பஸ்
ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர் ஆணை என்பது சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்கக் செய்யப் பிறப்பிக்கப்படும் ஆணை ஆகும்.
மாண்டமஸ்
மாண்டமஸ் (செயலுறுத்தும் நீதிப் பேராணை) என்பது பொதுக் கடமையான ஒரு செயலை ஓர் அதிகாரி அல்லது கூட்டமைப்பு அல்லது கீழ் நீதிமன்றம் செய்யத்தவறினால் அக்கடமையைச் செய்யப் பிறப்பிக்கப்படும் ஆணை ஆகும்.
கோ வாரண்டோ
கோ வாரண்டோ (தகுதி முறை வினவும் நீதிப் பேராணை) என்பது பொது அதிகாரப் பதவியில் உள்ளவரை அவர் எத்தகுதியில் அப்பதவிவகிக்கிறார் என்று வினவி, பிறப்பிக்கப்படும் ஆணை ஆகும்.
தடையுறுத்தும் நீதிப்பேராணை
தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition) கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பை மீறி அல்லது சட்ட முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதை மேற்கொண்டு நடத்தாமல் செய்ய, இவ்வாணை இடப்படுகிறது.
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
நெறிமுறையுணர்த்தும் நீதிப்பேராணை என்பது நீதிமுறை சார்ந்த அலுவல்களைச் செய்யும் தீர்ப்பாயங்கள், அதிகாரிகள், தம்அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டாலோ அறமுறைக்கு மாறாக நடவடிக்கை எடுத்தாலோ, அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கம் செய்வதற்கென, அவை சம்பந்தமான ஆவணங்களைத் தமக்கு அனுப்புமாறு நீதிமன்றம் ஆணையிடுவதே நெறிமுறையுணர்த்தும் நீதிப்பேராணைஇ
அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு மட்டுமல்லாமல் இதர உரிமைகள் மீறப்படும் பொழுதும் இந்நீதிப் பேராணைகள் (உயர்நீதிமன்றத்தில் மட்டும்) பிறப்பிக்கப்படும்.
நீதிப்புணராய்வு
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை, கீழ்நிலை நிதிமன்றங்களில் மேற்கொண்ட முடிவுகளை மறு ஆய்வு செய்து, அரசியலமைப்புக்கு முரணாக இருப்பின், அவற்றை மாற்றி அமைத்தல் அல்லது செல்லத் தகாதது என அறிவித்தலே நீதிப்புணராய்வு (Judicial Review) ஆகும்.
நீதிப்புனராய்வு என்ற இக்கருத்துப்படிவம் அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டதாகும்.
சட்டத்தின் ஆட்சி
நமது அரசியலமைப்பில் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்ற கருத்து ஷரத்து 14-இல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் வெளிப்படையாகக் காணப்படுகிறது.
சட்டத்தின் என்ற கருத்துப் படிவம் இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பில் இருந்து நாம் பெற்ற சிறப்பம்சமாகும்.