இந்த கட்டுரை TNPSC Group 4 Exam இல் இந்திய Polity பகுதியில் இதுவரை தோ்வுகளில் கேட்கப்பட்ட வினாகளை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.
இக் கட்டுரையினை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம். ஒவ்வொரு மதி்பபெண்ணும் நம்மை வெற்றி பெற செய்யும் என்பது நிச்சயம்.
- ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள்
- மாநிலங்களின் மறுசீரமைப்பு
- சமீபகால புதிய மாநில கோரிக்கைகள்
- குடியுரிமை
- ஒற்றை குடியுரிமை
- காமன்வெல்த் குடியுரிமை
- இந்திய குடியுரிமை சட்டம் 1955
- பிறப்பின் மூலமாக
- மரபுரிமை வாயிலாக
- பதிவு முறை வாயிலாக
- இயல்பாகத்தின் வாயிலாக
- பகுதி இணைப்பின் வாயிலாக
- பறித்தல் வாயிலாக
- இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2003
ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள்
அரசியல் அமைப்பின் முதலாவது பகுதியான (Part 1) இப்பகுதியில் ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் ( Union and Territories) குறித்து ஷரத்து 1 முதல் 4 வரை (Art.1 to 4)) குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியா. அதாவது பாரதம் மாநிலங்களின் ஒரே ஒன்றியம் என்று ஷரத்து 1 குறிப்பிடுகிறது. இந்திய ஒன்றியம், அமெரிக்காவைப் போன்று மாநிலங்களில் ஒப்பந்தத்தினால் ஏற்பட்டதன்று. எனவே இந்தியா ஒன்றியத்தில் இருந்து மாநிலங்கள் பிரிந்து செல்ல இயலாது.
எனவே தான் மாநிலங்களின் ஒன்றியம் யூனியன் ஆஃப் ஸ்டேட் என்ற சொல் குறிப்பிடப்பட்டது. அதாவது இந்தியா மாற்றக்கூடிய மாநிலங்களால் ஆன, ஆனால் மாற்ற முடியாத ஒன்றியம் ஆகும். இந்திய ஒன்றியம் என்ற சொல் கூட்டாட்சி அரசியல் உறுப்பினர்களாக விளங்குவதுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களை குறிக்கிறது அதாவது மாநிலங்களை மட்டுமே குறிக்கும் சொல்லாகும்.
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் அரசியல் அமைப்பின் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாநிலங்களை பகுதிகளாக பிரிக்க புதிய மாநிலங்களை உருவாக்கவோ எல்லைகளை மாற்றி அமைக்கவோ மாநிலங்களின் பெயரை திருத்தவோ மாற்றம் செய்யவோ பாராளுமன்றம் அதிகாரம் பெற்று உள்ளது என ஷரத்து 3 குறிப்பிடுகிறது.
மாநிலங்களின் மறுசீரமைப்பு
சுதந்திரம் பெற்ற பிறகு பண்பாடு மற்றும் கலாச்சார அடிப்படையில் மாகாணங்கள் மறு சீரமைக்கப்படும் என்ற உறுதிமொழியை இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திர போராட்டத்தின் போது வழங்கியிருந்தது
அதனடிப்படையில் எஸ்.கே.தாா் என்பவர் தலைமையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க 1947 இல் ஒரு குழு அமைக்கப்பட்டது.
1948 இல் கமிஷன் அளித்த அறிக்கையில் மாநிலங்களை ஆட்சி முறை வசதியை அடிப்படையாகக் கொண்டே மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என பரிந்துரைத்தது எனினும் இக்குழுவின் அறிக்கையினை காங்கிரஸ் நிராகரித்து விட்டது.
1948 இல் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் அடங்கிய ஜே.வி.பி குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவும், மொழி கலாச்சார பண்பாட்டின் அடிப்படையில் மாநிலங்களைப் பகுப்பதை எதிா்பதுடன் ஆட்சிமுறை வசதியை அடிப்படையாகக் கொண்டுடே பிரிக்க வலியுறுத்தியது.
காலப்போக்கில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் நிரம்பி ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வலியுறுத்தி வன்முறைகள் நடந்தேறின.
1953 இல் தெலுங்கர்கள் அடங்கிய பகுதிகளை புதிய ஆந்திர மாநிலமாக அறிவிக்க கோரி பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
எனவே ஜே.வி.பி குழு ஆந்திராவிற்கு மட்டும் விதி விலக்கு அளித்து மொழி அடிப்படையில் அம்மாநிலத்தை பிரிப்பதை தவிர வேறு வழியில்லை என கருதி கருத்து தெரிவித்தது.
இதனடிப்படையில் அக்டோபர் 1, 1953-ல் மொழி அடிப்படையில் ஆந்திரா புதிய மாநிலமாக முதல் மாநிலமாக உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து பல மாநிலங்களிலும் வன்முறை தோன்றி மொழி அடிப்படையிலான தனி மாநிலக் கோரிக்கை வலுப்பெற்றது.
எனவே வேறு வழியின்றி 1955இல் பாசல் அலி என்பவர் தலைமையில் மாநிலங்களின் மறுசீரமைப்புக் குழு ஒன்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது இக்குழுவில் கே.எம் பணிக்கர் குன்ஸ்ரு ஆகிய பிற உறுப்பினராக இடம் பெற்றனா்.
ஃபாசல் அலி குழு தனது அறிக்கையில் A, B. C. D என்று இருந்த மாநிலங்களை மொழி அடிப்படையில் 16 மாநிலங்களாகவும், 3 மத்திய ஆட்சிப் பகுதிகளாகவும் மறுசீரமைப்பு செய்ய பாிந்துரை செய்தது.
ஆனால், இந்த அறிக்கையைத் தொடா்ந்து இந்திய அரசு, 14 மாநிலங்களாகவும், 5 மத்திய ஆட்சிப்பகுதிகளாகவும் மாற்றம் செய்தது.
தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன சமூகத்தில் தெலுங்கானா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஜூன் 2, 2014 இல் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தோற்றுவிக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் நவம்பர் 1, 2000-ல் மத்திய பிரதேசத்தில் இருந்தும் உத்தரப் பிரதேசத்திலிருந்து நவம்பர் 9, 2010-ல் மாநிலமும் நவம்பர் 15, 2000-ல் பிகார் மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தோன்றின.
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து விதர்பா, அசாம் மாநிலத்தில் இருந்து ஃபோட்டோலேண்ட், மேற்கு வங்காளத்தில் இருந்து கொா்க்காலேண்்ட், கர்நாடக மாநிலத்தில் இருந்து குடகு, இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஹாித் பிரதேஷ், டெல்லி, புதுச்சேரி போன்றவை தனி மாநில கோரிக்கை வைத்துள்ளன என்பது நினைவுகூறத்தக்கது.
சமீபகால புதிய மாநில கோரிக்கைகள்
1. மிதிலாஞ்சல் அல்லது மிதிலா தனி மாநில கோரிக்கை (பீகார்)
2. சௌராஷ்ட்ரா தனி மாநில கோரிக்கை (குஜராத்)
3. கூர்க் தனி மாநில கோரிக்கை (கர்நாடகா)
4. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை ஆந்திர பிரதேசம் சமயத்தில் தெலுங்கானா மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு விட்டது.
5. டார்ஜிலிங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கொண்ட கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை (மேற்குவங்காளம்)
6. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பண்டில்கண்ட் தனி மாநில கோரிக்கை.
7. கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளை உள்ளடக்கிய போஜ்பூர் தனி மாநில கோரிக்கை.
8. மேற்கு உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஹரித் பிரதேச அல்லது கிஷான் பிரதேஷ் தனி மாநில கோரிக்கை.
9. விதர்பா தனி மாநில கோரிக்கை (மகாராஷ்டிரா0
10. போட்டோலேண்ட் தனி மாநில கோரிக்கை (அசாம்)
குடியுரிமை
நமது அரசியலமைப்பின் பகுதி 2-ல் குடியுரிமை குறித்து 5 முதல் 11 வரை குறிப்பிடப்பட்டுள்ளன அரசியல் நிர்ணய சபையில் அரசியல் அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட நாளான நவம்பர் 26, 1949 க்கு முன்னர் இந்திய குடியுரிமை என்று எதுவும் இல்லை.
அரசியலமைப்பு ஏற்கப்பட்ட நாள் முதலாகவே அதாவது நவம்பர் 26, 1949 முதல் இந்திய அரசியலமைப்பின் குடியுரிமை குறித்த பகுதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது
அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது யார் யாரெல்லாம் இந்திய குடிமகனாக இருப்பார் என்று மட்டுமே அரசிலமைப்பு விளக்குகிறது.
இந்திய குடியுரிமை பெறுவது பற்றியோ குடியுரிமை இழப்பது குறித்தோ நமது அரசியலமைப்பில் ஏதும் சொல்லப்படவில்லை.
எனினும் குடியுரிமை குறித்த புதிய சட்டங்களை இயற்ற குடியுரிமை பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என ஷரத்து 11 கூறுகிறது.
ஒற்றை குடியுரிமை
இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள், சுவிட்சர்லாந்து போன்ற சில கூட்டாட்சி நாடுகளில் நடைமுறையில் உள்ள இரட்டை குடியுரிமை முறை இந்தியாவில் இல்லை.
காமன்வெல்த் குடியுரிமை
இந்திய குடியுரிமை சட்டத்தில் காமன்வெல்த் குடியுரிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடு பிரஜைகளான காமன்வெல்த் அமைப்பில் இந்தியா பங்கு வகித்து வருவதால் காமன்வெல்த் குடியுரிமை அந்தஸ்து இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை சட்டம் 1955
1955ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம் 1955 குடியுரிமையை பெறுவதற்கும் விட்டுவிடுவதற்கு கூறிய வழிமுறைகள் பற்றி கூறுகிறது.
1955-ம் ஆண்டு குடியுாிமை உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் குடியுரிமை பற்றி அனைத்து விஜயங்களும் இந்த சட்டத்தின்படியே பாிசீலிக்கப்பட்டது. பங்காளதேஷ், இலங்கை மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக பெருமளவில் பலரும் இந்தியாவில் குடி வந்ததை அடுத்து 1986-ல் இச்சட்டம் திருத்தப்பட்டது இந்திய குடியுரிமை பெறுவதை மேலும் கடுமையாகியது.
பிறப்பின் மூலமாக
ஜனவரி 26, 1950 முதல் ஜூலை 1, 1987-க்கு முன்னர் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் இந்திய குடிமக்கள் ஆவார்.
ஜீலை 1, 1987 அன்று முதல் இந்தியக் குடியுாிமை திருத்தச் சட்டம், 2003 நடைமுறைப்படுத்தப்பட்ட நாளான டிசம்பா் 3, 200-க்கு முன்னா் பிறந்திருப்பின், பிறப்பின் போது அவா்களின் பெற்றோாில் ஒருவராவது இந்தியராக இருப்பின் அவா்களும் பிறப்பால் இந்தியராவா்.
டிசம்பா் 3, 2004 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருப்பின், பிறப்பின்போது அவரது பெற்றோா் இருவரும் இந்தியராக இருப்பின், அத்தகையோரும் பிறப்பால் இந்தியக் குடிமக்கள் ஆவா்கள்.
மரபுரிமை வாயிலாக
ஜனவரி 26, 1950 அன்று முதல் டிசம்பர் 10, 1992 முன்னதாக ஒருவர் இந்தியாவிற்கு வெளியே பிறந்திருப்பேன் பிறப்பின்போது அவரது தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் அப்படி பிறந்தவரும் மரபு உரிமையின் கீழ் இந்திய குடிமக்களே.
டிசம்பர் 10, 1992 அன்றோ அதற்குப் பிறகு இந்தியாவிற்கு வெளியே பிறக்கும் ஒரு நபரின் பெற்றோர் இருவரும் குழந்தை பிறப்பின்போது இந்தியராக இருப்பின் அக்குழந்தையின் மரபு உரிமையின் கீழ் இந்திய குடிமக்களே.
பதிவு முறை வாயிலாக
குறிப்பிட்ட முறையில் பதிவு செய்து கொள்வதன் மூலம் சில நிபந்தனைக்கு உட்பட்டு சில பிரிவு மக்களுக்கும் இந்திய குடியுரிமை பெறலாம் எனினும் அவ்வாறு பதிவு செய்து கொள்வோா் விண்ணப்பிக்கும்போது குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் வைத்திருக்க வேண்டும்
இயல்பாகத்தின் வாயிலாக
சில நிபந்தனைக்கு உட்பட்டு இயல்பாகத் இருக்கு முறைப்படி விண்ணப்பித்து அதன்மூலம் வெளிநாட்டினரும் இந்திய குடியுரிமை பெறலாம் எனினும் அவ்வாறு இயல்பாகத்திற்கு விண்ணப்பிக்குபோது குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
பகுதி இணைப்பின் வாயிலாக
ஏதாவது ஓர் ஆட்சிப்பகுதி இந்தியாவின் அங்கமாக சேர்க்கப்பட்டார் அதன் விளைவாக யார் யாரெல்லாம் இந்திய குடிமக்களாக ஆவார் என்பதை இந்திய அரசு ஓர் ஆணையின் மூலம் அறிவிக்கலாம்.
1955ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் குடியுரிமை என மூன்று வழி முறைகளை வகுத்துள்ளது அவையாவன.
துறத்தல் மூலமாக இந்திய குடியுரிமை உள்ள ஒரு நபர் ஒரு நாட்டின் குடியுரிமையை பெற்றவுடன் தாமே முன்வந்து தமது இந்திய குடியுரிமை தந்துவிடலாம்.
விலக்கி வைத்தல் மூலமாக அயல் நாட்டு குடியுரிமை பெற்ற இந்திய தாமே முன்வந்து தமது இந்திய குடியுரிமை ஏற்காவிடில் அவரது இந்திய குடியுரிமை இந்திய அரசால் விலக்கி வைக்கப்படும்.
பறித்தல் வாயிலாக
பதிவு முறை மற்றும் இயல்பாகத்தின் மூலம் இந்திய குடியுரிமை தவறான முறையில் பெறப்பட்டு இருந்தாலோ அல்லது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்யும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றம் பெற்று உள்ளது. 1955ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டமானது குடியுரிமை திருத்த சட்டம் 1986, குடியுரிமை திருத்த சட்டம் 1992 குடியுரிமை திருத்த சட்டம் 2003, குடியுரிமை திருத்த சட்டம் 2005, குடியுரிமை திருத்த சட்டம் 2013 ஆகியவற்றின் மூலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் ஜனவரி 7. 2009 இல் பெற்று டிசம்பர் 3, 2001 முதல் நடைமுறைக்கு வந்தது.
2005ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் சனாதிபதியின் அவசர சட்டம் மூலமாக ஏற்றப்பட்டு ஜூன் 28 2005 முதல் நடைமுறைக்கு வந்தது
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2003
இச்சட்டம் 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தின் திருத்திய சட்டமாகும்.
இச்சட்டம் இந்திய குடிமக்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் வழித் தோன்றிய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்கியது.
முதல் இந்திய பிரவேசி பாரதிய திவாஸ் தினமாகிய ஜனவரி 9, 2003 அன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்திய வம்சாவழி வந்த நபர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த இரட்டை குடியுரிமையை தற்போது ஓவர்சீஸ் சிட்டிசன் சிப் என்று குறிப்பிடப்படுகிறது.
எல் எம் சிங்வி குழு பரிந்துரையின் அடிப்படையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படுகிறது.
இத் திருத்தச் சட்டம் 16 நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு இரட்டை குடியுரிமை முறையை அனுமதித்தது. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், கிரீஸ், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், சைப்ரஸ், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 16 நாடுகளை குறிப்பிடப்பட்ட நாடுகளாகும்.
மேலும் இத் திருத்தச் சட்டம் குடியுரிமை சட்டம் 2003 பதிவு முறை மற்றும் இயல்பாக முறையின் மூலம் இந்திய குடியுரிமை பெறும் வழிமுறைகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
வாக்களிக்கும் உரிமை, சமத்துவ உரிமை, வேலைவாய்ப்பில் சம உரிமை, பாராளுமன்ற உறுப்பினராக தகுதி மற்றும் அரசியலமைப்பின் குறிப்பிட்ட பதவிகள் ஆகியவை இரட்டை குடியுரிமை பெற்ற இந்தியர் களுக்கு வழங்கப்படமாட்டாது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் பிரவேசி பாரதிய திவாஸ் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. காரணம் ஜனவரி 9, 2015 தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பினார்.