இந்த கட்டுரை TNPSC Group 4 Exam இல் இந்திய Polity பகுதியில் இதுவரை தோ்வுகளில் கேட்கப்பட்ட வினாகளை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரை TNPSC GROUP 4 EXAM-க்கு தயாா் செய்பவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்
உலகின் முக்கிய நாடுகளில் நடைமுறையில் இருந்த பல்வேறு அரசியல் அமைப்புகளில் காணப்பட்ட முக்கிய அம்சங்களை இந்திய அரசியலமைப்பில் அரசியல் நிர்ணய சபை புகுத்தியது.
எழுதப்பட்ட அரசியலமைப்பு, பாராளுமன்ற ஆட்சிமுறை, நெகிழும் மற்றும் நெகிழாத்தன்மை, வயது வந்தோர் வாக்குரிமை, முகவுரை, அடிப்படை உரிமைகள், அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள், மதச்சார்பற்ற அரசு மற்றும் நெருக்கடி நிலை அம்சங்கள் போன்றவை நம் அரசியலமைப்பின் சில சிறப்பு அம்சங்களாகும்.
உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு நெகிழ்ச்சியற்ற (Rigid) கூறுகளும், நெகிழ்ச்சியுடைய (Flexible) கூறுகளும் சேர்ந்த கலவையாகும்.
1.எழுதப்பட்ட அரசியலமைப்பு
கூட்டாட்சியைப் பின்பற்றும் நாடு எதுவாயினும் அரசிலமைப்வை எழுதி வைத்தல் அவசியம் ஏனெனில் கூட்டாக இணைந்து ஆட்சி புரிய கூட்டாட்சி உறுப்புகளில் இடையே எவ்வித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக.
எழுதப்பட்ட அரசியலமைப்பை இந்தியா கொண்டுள்ளதால் இது கூட்டாட்சியின் அம்சத்தைக் கொண்டுள்ளது எனலாம்
உலகின் உள்ள அரசு அமைப்புகளில் இந்திய அரசியலமைப்பு மிகப் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்
நவீன காலத்தில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தையும் முதல் முதலாகப் பெற்ற நாடு அமெரிக்கா (1757)
இந்திய அரசியலமைப்பில் துவக்கத்தில் 395 சத்துக்களும், 22 பகுதிகளும், 8 அட்டவணைகளும் இருந்தன தற்போது சுமார் 100 திருத்தங்களுக்கு பிறகு 450 சரத்துக்கள், 25 பகுதிகள், 12 அட்டவணைகள் உடன் நமது அரசியலமைப்பு செயல்படுகிறது.
2. பாராளுமன்ற ஆட்சி முறை
பிரிட்டிஷ் அரசை பின்பற்றி இந்தியாவில் பாராளுமன்ற ஆட்சிமுறை நிலவ இந்திய அரசியல் அமைப்பு வழி செய்துள்ளது. நமது அரசியலமைப்பின்படி ஜனாதிபதியை நாட்டின் தலைவர் ஆவார்.
எனினும் உண்மையான அதிகாரங்கள் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை வசமே உள்ளது. அமைச்சரவை ஒட்டுமொத்தமாக லோக் சபைக்கு பொறுப்பானதாக உள்ளது.
3. நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
நமது அரசின் அமைப்பின் சில பகுதிகள் மிகச்சுலபமாக பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் திருத்த கூடியதாக அமைந்துள்ளன. பிற பகுதிகள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடனோ அல்லது மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவுடன் கூடியதாகவோ அமைந்துள்ளன.
எழுதப்பட்ட அரசியலமைப்பு பொதுவாக நெகிழா தன்மை உடையதாகவே காணப்படும். ஆனால் இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட அரசியல் அமைப்பாக இருப்பினும் போதுமான அளவு நெகிழக் கூடியதாகவே உள்ளது.
கூட்டாட்சியின் மற்றொரு முக்கிய அம்சம் அரசியலமைப்பு நெகிழ் தன்மை உடையதாக இருக்க வேண்டும். நமது அரசியல் அமைப்பின் முக்கியமான சில பகுதிகளை திருத்தவோ அல்லது மாற்றவோ நாம் மிக மிக கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனினும் நம் அரசியலமைப்பின் பெரும் பகுதிகள் நெகிழும் தன்மை உடையவை என்பதை நினைவு கூறவேண்டும்.
4. வயதுவந்தோர் வாக்குரிமை
வகுப்பு வாரி அடிப்படையில் வாக்களிக்கும் முறை நீக்கப்பட்டு வயது வந்தோர் வாக்களிக்கும் முறை புகுத்தப்பட்டது. நம் அரசியலமைப்பின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
அதாவது 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன் அல்லது குடுமகள் ஒவ்வொருவருக்கும், கல்வி சொத்து, இனம், பால் போன்ற பாகுபாடு ஏதுமின்றி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை அரசியலமைப்பின் ஷரத்து 326 வழங்குகிறது.
21 வயதாக இருந்த வாக்களிக்கும் வயது வரம்பு 1989இல் 61 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் வாயிலாக ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 18ஆக குறைக்கப்பட்டது.
5. சமய சார்பற்ற அரசு
பொதுவாக ஜனநாயக அரசாங்கம் எப்போதும் மதசார்பற்ற தன்மையை கொண்டிருக்க வேண்டும் அந்த அடிப்படையில் நமது அரசியலமைப்பு மதசார்பற்ற தன்மையை கொண்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமயம் மற்றும் சாதியை பின்பற்றவோ, ஆதரிக்கவோ அரசு யாரையும் வற்புறுத்துவது இல்லை.
நமது அரசியலமைப்பின்படி சமயம் என்பது ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவே இந்தியா மத சார்பற்ற அரசை கொண்டுள்ளது.
சமய சார்பற்ற (செர்க்குலர்) என்ற சொல் முகவுரையில் 42 வது அரசியலமைப்பு திருத்தத்தின் போது 1976இல் புதிதாக சேர்க்கப்பட்ட சொல்லாகும். இதன் பொருள் எல்லா சமயங்களுக்கும் சம உரிமை அளிப்பது என்பதாகும்.
6. அரசியலமைப்பின் உச்ச அதிகாரம்
கூட்டாட்சி அரசியல் எப்போதும் அரசியலமைப்பே அதிகபட்ச அதிகாரம் கொண்டதாக விளங்கும் அதாவது மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அதிகாரங்களை அரசியலமைப்பை வழங்குகிறது.
இந்திய அரசியலமைப்பு மைய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை தருகிறது எனவே இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் மிக உயர்ந்த சட்டமாக கருதப்படுகிறது.
இந்திய அரசியல் அமைப்பு உருவாக காரணமான இந்திய மக்கள் அதிகாரத்தின் ஆதி மூலமாக கருதப்படுகின்றனர்.
நீதித்துறையின் அதிகாரத்துவம்
கூட்டாட்சி அரசியல் எப்போதும் தனித்த நீதித்துறையின் அதன் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற தனி அமைப்பு இல்லாததாகவும் நீதித்துறை அமைய வேண்டும்.
இந்தியாவில் இத்தன்மை கொண்ட சுதந்திரமான ஒருங்கிணைக்கப்பட்ட தனித்த நீதித்துறை செயல்படுகிறது.
ஒற்றை குடியுரிமை
கூட்டாட்சி நாடுகளில் பொதுவாக இரட்டை குடியுரிமை முறை நடைமுறையில் காணப்படும். உதாரணமாக அமெரிக்கா சுவிட்சர்லாந்து போன்ற கூட்டாட்சி நாடுகளில் இரட்டைக் குடியுரிமை நிலவுகிறது
ஆனால் இந்தியாவில் இங்கிலாந்தை போன்று ஒற்றை குடியுரிமை முறையை அதாவது இந்தியா முழுமைக்கும் இந்திய குடியுரிமை மட்டுமே நிலவுகிறது.
அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பு தனி நபருக்குாிய அடிப்படை உரிமைகளை வரையறை செய்துள்ளது. பொதுவாக 1935 ஆம் ஆண்டு சட்டத்திற்கும் இந்திய இந்திய அரசியலமைப்பிற்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு இதுவே.
அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் போது தடை ஏதும் வந்தால் அதனை தடுக்கவும் உரிமைகளை பெறவும் அரசியலமைப்பு பரிகார உரிமைகள் (Art.32) தனியே வழங்கப்பட்டிருப்பது. இதன் தனிச்சிறப்பு.
பொதுவாக இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி அரசுக்குாிய சிறப்பு அம்சங்களையும் ஒற்றை ஆட்சிக்குரிய சிறப்பு அம்சங்களையும் ஒருங்கே இணையப் பெற்றுள்ளது. நமது அரசியலமைப்பு சாதாரண காலங்களில் அதாவது இயல்பான சூழ்நிலையில் கூட்டாட்சி அரசாங்கமும் நெருக்கடி காலங்களில் ஒற்றையாட்சி ஆகவும் செயல்படுகிறது.
முகவுரை
முகவுரை என்னும் சொல் முன்னுரை, முகவுரை. துவக்க உரை போன்ற பொருள்களைத் தரும் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நமது அரசியல் அமைப்பின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் நாம் அடைய வேண்டிய நோக்கங்களையும் கூறுவதுடன் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கூட்டமைப்பு மற்றும் குறிக்கோள்களை கொண்டு விளங்குகிறது.
நமது அரசியலமைப்பின் அடிப்படை தத்துவம் என்பது சுதந்திரப் போராட்டத்தின் போது நம்மிடையே காணப்பட்ட உணர்வுகளையும் கனவுகளையும் ஒத்து காணப்படுவதுடன் அவை நமது முகவுரையில் தெளிவாக பிரதிபலிக்கின்றன.
ஜவகர்லால் நேரு அவர்களால் அரசியல் நிர்ணய சபையில் முன்மொழியப்பட்ட கொள்கை தீர்மானம் ஜனவரி 22, 1947 இல் அரசியலமைப்பு நிர்ணய சபையால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தக் கொள்கைகள் தீர்மானமே சிற்சில மாற்றங்களுடன் நமது முகவுரையாக அரசியலமைப்பில் புகுத்தப்பட்டது.
முகவுரை வடிவம்
இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமுதாய சார்பற்ற மக்களாட்சி குடியரசாக அமைப்பது என உறுதி பூண்டுள்ளோம் இதன் மூலம் இந்தியாவில் அனைத்து குடிமக்களையும் குடிமக்களையும் பாதுகாப்போம்.
26 நாள் நவம்பர் 1949 இல் நமது அரசியலமைப்பு அவையில் ஏற்று, இயற்றி, இந்த நாளில் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
முகவுரையில் அரசியல் அமைப்பின் நோக்கங்கள்
இந்திய அரசியலமைப்பின் முகவுரை இந்தியாவை ஒரு 1. இறையாண்மை வாய்த்த, 2. சோஷலிச நெறி சார்ந்த, 3. சமயசார்பற்ற, 4. மக்களாட்சி, 5. குடியரசாக வர்ணிக்கிறது இந்த 5 அரசியலமைப்பின் நோக்கங்களாக கருதப்படுகின்றன.
இறையாண்மை என்பது வேறு உயர் அதிகாரம் எதையும் ஏற்காத முழுமையான அதிகாரம் கொண்ட சுதந்திர நிலையாகும். இத்தகைய தன்மையுடன் செயல்படுகிற நாடு இறையாண்மை உடைய நாடு.
எனவே இறையாண்மை என்ற சொல் இந்தியா ஒரு முழு சுதந்திர நாடு என்பதையும் தனித்து செயல்படும் அதிகாரமுடைய அதே சமயத்தில் வேறு அமைப்புகள் எதையும் சாராமல் செயல்படும் அதிகாரம் உடைய நாடு என்பதையும் விளக்குகிறது
சோஷலிசம் என்பது வருமானத்திலும் அந்தஸ்திலும் வாழ்க்கை தரத்திலும் ஏற்றத்தாழ்வுகளை ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்தி களைவதை குறிக்கிறது.
இந்தியக் சூழலில் சமய சார்பின்மை என்பதற்கு சமய அல்லது இறையியல் கட்டுப்படுத்துதல் அல்லாத அரசு என்பதே பொருளாகும்.
அதாவது இந்தியாவிற்கு என தனியே அரசு அல்லது தேசிய சமயம் என்று ஏதும் கிடையாது அனைத்து சமயங்களும் சமமானவை எனவே சமய அடிப்படையில் குடி மக்களிடையே எந்த விதமான பேதமும் கிடையாது
இந்தியாவில் அதிகாரத்தின் உச்ச நிலையில் பொதுமக்கள் இருக்கும் அமைப்பை குடியரசு என்ற சொல்லின் பொருளாகும் அதாவது நாட்டின் உச்ச அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபாிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
மக்களாட்சி குடியரசு என்பது மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் நிர்வாகத்தையும் கொண்ட நாடு எனலாம்.
மக்களாட்சியில் அவரவருக்கு அவரவர் தலைவர் அவர்களை அவர்களே ஆட்சி செய்து செய்து கொள்ளவும் அவர்கள் விரும்புகின்ற வகையில் தேர்ந்தெடுக்கப்படுபவா் மூலம் ஆளப்படும் முழுமையான உரிமை உள்ளது.
இந்திய பிரதிநிதித்துவ நாடாளுமன்ற மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
முகவுரையை திருத்துதல்
முகவுரையில் அடையவேண்டிய நோக்கங்களும் அதற்கான கொள்கைகளும் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலன் Vs மெட்ராஸ் மாநில அரசு (1950) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் முகவுரையை என்பது நீதிமன்றத்தினால் செயல்படுத்த இயலாத நிலை நிறுத்த இயலாத பகுதி என்று அறிவித்தது.
1969 இல் பெருபாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் முகவுரை என்பது நீதிமன்றத்தில் நிலை நிறுத்தக்கூடிய பகுதியே என்று அறிவித்ததுடன் முகவுரை என்பது அரசியல் அமைப்பின் உட்பட்ட பகுதியன்று என்று குறிப்பிட்டது.
எனினும் 1973 இல் கேசவனாந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கூறிய கருத்துக்களை நிராகரித்து முகவுரை என்பது அரசியலமைப்பு சார்ந்த பகுதியை என்று குறிப்பிட்டதுடன் மேலும் முகவுரை அரசியலமைப்பின் ஷரத்து 368 இன் கீழ் பாராளுமன்றத்தால் திருத்தப்பட கூடியதே என்று தெளிவுபடக் கூறியது.
எனினும் முகவுரையில் காணப்படும் அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளை சிதைக்க இயலாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
அவசரநிலை பிரகடனப்படுத்தி இருந்தபோது இந்திரா காந்தி பிரதமராக இருந்த சூழலில் 42 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் 1976 இல் சோசலிச, சமய சார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு என்ற மூன்று சொற்கள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
முகவுரையின் சிறப்பம்சங்கள்
முகவுரையில் முக்கியத்துவம் கருதியே அது அரசியலமைப்பின் திறவுகோல் என ஏா்னஸ்ட் பாா்க்கா் அவர்களால் குறிப்பிடப்படுகிறது.
எம்.வீ.பைலீ அவர்களால் முகவுரை என்பது வழக்கறிஞர்களின் சொர்க்கம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
முகவுரை அரசியல் ஜோதிட கணிப்பு என்று கே. எம் முன்ஷி குறிப்பிட்டுள்ளார்.