தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் Gr.IV மற்றும் VAO தேர்வுகளில் பொதுவாக 8 முதல் 14 சதவீத வினாக்கள் இந்திய அரசியலமைப்பு பாடப்பகுதியில் இருந்து கேட்கப்படுவது இயல்பு.
மேலும் இந்திய அரசியலமைப்பு பாடப் பகுதியைப் பொருத்தவரை, முற்றிலும் சமச்சீர் பாட நூல்களில் இருந்து மட்டும் கேட்கப்படுவதில்லை.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், 2 அல்லது 3 வினாக்கள் மட்டுமே சமச்சீர் பாடப் பகுதியில் இருந்து இடம் பெறுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வினாத்தாள் அமைக்கப்ட்டுள்ள தன்மை, தரம் TNPSC யின் புதிய பாடத்திட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த 15 ஆண்டு வினாத்தாள்கள் ஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இக்கட்டுரை தமிழ்நாடு அரசுப் பாட நிறுவனத்தின் புதிய சமச்சீர் கல்வி நூல்களை அடிப்படையாகக் கொண்டும், அதே நேரத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான பள்ளிப்பாட நூல்களின் முக்கியக் கருத்துக்களையும் அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பாடப்பகுதியில் நவீன காலத்தில் ஏற்பட்ட மாறுதல்கள், செய்திகள், தகவல்கள் மற்றும், இந்திய அரசியலமைப்பு சார்ந்த நடப்பு கால நிகழ்வுகள் ஆகிய தகவல்களும் உரிய உரிய பாடத் தலைப்புக்களின் கீழ் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு பாடப் பகுதியில் தற்கால மாற்றங்களையும் (நடப்புச் செய்திகள் ) இதே பயிற்சித் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி வினாக்களைக் கொண்டு தங்கள் திறனை மேலும் மெருகேற்றிக் கொள்ள கடந்த காலங்களில் கேட்கப்பட்ட தேர்வாணைய வினாக்களைக் கொண்டு பயிற்சி செய்வது மேலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது உறுதி.
தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதும், முறையே வாரம் ஒரு முறை ரிவிஷன் செய்வதும், பாடங்களின் முடிவில் தேர்வு வினாக்களை எதிர்கொண்டு தவறுகளைக் களைவதும் இந்திய அரசியலமைப்பு பாடத்திட்டத்தில் முழு மதிப்பெண்களைப் பெறுவதற்கான சிறந்த வழி ஆகும்.
இந்திய அரசியலமைப்பின் தோற்றம் மற்றும் வளா்ச்சி வரலாறு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா இந்திய அரசியலமைப்பின் தொடக்கம் காலம் வரலாறு கிழக்கிந்திய கம்பெனியின் வருகையில் இருந்தே தொடங்குகிறது.
கிழக்கிந்திய கம்பெனி
லண்டன் மாநகரை சேர்ந்த வணிகர்கள் குழு இந்தியாவுடன் வாணிபம் செய்வதற்காக உரிமையை டிசம்பர் 31, 1600 இல் இங்கிலாந்து பேரரசி முதலாம் எலிசபெத் என்பவாிடம் இருந்து பெற்றது.
அதன்படி கிழக்கிந்தியக் கம்பெனி 15 ஆண்டுகளுக்கு நன்னம்பிக்கை முனையில் இருந்து மெகல்லன் ஜலசந்தி வரையிலுள்ள எல்லா கீழை நாடுகளுடனும் வாணிபம் செய்யும் முற்றுாிமையை (Monopoly)இங்கிலாந்து பேரரசியிடம் இருந்து பெற்றது.
பின்னர் படிப்படியாக கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காணப்பட்ட உறுதியற்ற அரசியல் நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை ஆளும் தனிஅமைப்பாக மாறியது.
1757-ல் ஆங்கிலேயர்கள் பெற்ற பிளாசிப் போர்வெற்றியும், 1764-ல் பெற்ற பக்சார் போர் வெற்றியும் ஆங்கிலேயர்களை மேலும் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றின.
இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தின் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தனது நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வருவதற்காக இயற்றிய முதல் சட்டமே 1773-ம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act, 1773) ஆகும்.
இச்சட்டம் இந்திய நிலப்பரப்பின் மீது அதிகாரம் செலுத்தும் கம்பெனியின் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் விதமாக், கம்பெனி ஆட்சிக்கென்று வழங்கப்பட தனி எழுதப்பட்ட அரசியலமைப்பு எனலாம்.
சிப்பாய் கலகம் (1857)
மே 10, 1857-ல் தொடங்கிய சிப்பாய் கலகம், இந்தியர்களின் எதிர்பார்ப்புக்குமாறாக தோல்வியடைந்தாலும், இந்தியர்கள் விரும்பிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தது.
பிரிட்டீஷ்-இந்திய அரசியலமைப்பை இந்தியர்கள் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி ஒழிக்கப்பட்டு இங்கிலாந்து பேரரசின் நேரடி ஆட்சி தொடங்கியதே சிப்பாய் கலகத்தினால் இந்திய அரசியலில் ஏற்பட்ட உடனடி மாற்றம் ஆகும்.
ஆகஸ்ட் 2, 1857 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட 1858ஆம் ஆண்டு சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் பேரரசின் நேரடி ஆட்சிக்கு வழிவகுத்தது இதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது. அரசியலமைப்பு வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவில் நேரடி ஆட்சி தோன்றியது. இச்சட்டத்தின்படி கம்பெனியின் நிர்வாகத்தில் இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகள் அனைத்தும் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தன. அப்பகுதிகளில் பிரிட்டிஷ் அரசுக்காக அரசின் பெயரில் இந்தியாவிற்கான அரசின் முதன்மை செயலாளர் (Secretary to State)மூலம் நிா்வகிக்க வழி செய்யப்பட்டது.
கவர்னர் ஜெனரல் ஆட்சி
1858 முதல் இந்திய ஆட்சிப் பொறுப்பை இங்கிலாந்து பேரரசிடம் வந்ததால் அரசின் சார்பாக முதன்மைச் செயலாளர் மற்றும் அவரது கவுன்சிலரிடம் இந்தியாவின் அதிகாரங்கள் அனைத்தும் மையப்படுத்தப்பட்டன.
இந்தியாவில் இந்த அதிகாரங்களை செயல்முறை படுத்துவதே கவர்னர் ஜெனரல் பதவி மற்றும் கவுன்சில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாறு முதல் முறையாக இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் ஆட்சி தொடங்கியது
அதிகாரப் பகிர்வு
பாராளுமன்ற ஆட்சி முறை மேற்கிந்திய கல்வி முறை மேற்கத்திய நாடுகளில் காணப்பட்ட அரசியல் முறைகள் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக காலப்போக்கில் மைய அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரங்கள் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் தான் இதற்கான அம்சங்கள் முதல் முதலாக புகுத்தப்பட்டன.
இந்தியாவில் முதன் முறையாக 1861 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டத்தில் தான் இந்தியர்களை கவுன்சிலில் உறுப்பினராக சேர்க்கவும் அவர்களின் ஆலோசனைகளைப் பெறவும் வழி செய்யப்பட்டது. எனவே அதிகார பகிா்வின் துவக்கம் 1861 இல் தான் தொடங்கியது
முதலாவதாக தலசுய ஆட்சி முறையை விரிவுபடுத்தி அதன்மூலம் அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்வு செய்தல் மற்றும் இரண்டாவதாக சட்டமன்ற கவுன்சிலில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் அதிகாரங்களை பகிர்வு செய்தல் ஆகியன.
1919 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டத்தில் மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டு அதிகாரங்கள் இரண்டாக பகிா்வு செய்யப்பட்டன. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் மாகாணங்களின் சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்டு மத்தியில் இறக்கி அறிமுகம் செய்யப்பட்டன.
இந்திய தேசிய போராட்டத்தில் காந்தியடிகளின் செயல்பாடுகள் காரணமாக மக்களிடையே விடுதலை வேட்கை அதிகரித்தது பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றித்தரும் அதிகார மாற்றம் குறித்த கோரிக்கை இரண்டாம் உலகப்போரின்போது வலுப்பெற்றது
சைமன் கமிசன் 1927
1919 ஆம் ஆண்டு சட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரட்டை ஆட்சி முறை சரிவர செயல்படுகிறதா என்பதை பற்றி ஆய்வு செய்ய சார் ஜான் சைமன் என்பவர் தலைமையில் 7 நபர்கள் கொண்ட ஒரு குழு 1927இல் நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் இந்தியர்கள் எவரும் நியமிக்கப்படாததால் இந்தியாவிற்கு வந்த சைமன் குழுவை இந்தியர்கள் புறக்கணித்ததுடன் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனினும் இக் குழு தன் பணியை முடித்து 1929இல் தன் அறிக்கையை சமர்ப்பித்தது மாநிலங்களில் இரட்டையாட்சி முறை நீக்கப்பட வேண்டும் என்றும் மாநிலங்களில் சுயாட்சியும் முறையை ஏற்படுத்தவும் பரிந்துரைத்தது.
நேரு அறிக்கை நேரு அறிக்கை 1928
சைமன் குழுவில் இந்தியர்களை உறுப்பினர்களாக இந்தியர்களை நியமிக்க அவருக்கு இந்தியர்களின் திறமையை காரணம் என்று இந்தியாவிற்கான அரசு செயலாளர் பா்கன்ஹெட் பிரபு குறிப்பிட்டார்.
எனவே இந்தியர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முனைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து கட்சி மாநாடு கூட்டப்பட்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்க மோதிலால் நேரு தலைமையில் 1928இல் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் அறிக்கையை அதாவது அரசியலமைப்பு வடிவமே நேரு அறிக்கை எனப்படுகிறது. அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உடனடியாக இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.
இந்திய அரசு சட்டம் 1935
சைமன் குழு அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு 1935 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தில் மாநிலங்களில் இரட்டையாட்சி நீக்கப்பட்டு மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது.
மத்தியில் இரட்டையாட்சி அறிமுகம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய மாநிலங்களில் இந்திய மன்னர் மாநிலங்களையும் கொண்ட அகில இந்திய கூட்டாட்சி அமைக்க இச்சட்டம் வழி செய்தது சுருக்கமாகக் கூறினால் இச்சட்டம் சில பாதுகாப்புகளுடன் கூடிய பொறுப்பாட்சி ஏற்படுத்தியது.
மாகாண சுய ஆட்சி
1935ஆம் ஆண்டு சட்டத்தில் அடிப்படையில் ஏப்ரல் 1937 இல் நடந்த தேர்தலில் வென்று சென்னை, பீகார், பம்பாய், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம், ஒரிசா, வடமேற்கு எல்லை மாகாணம் மற்றும் அசாம் ஆகிய எட்டு மாகாணங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சரவை பொறுப்பேற்றது.
1935ஆம் ஆண்டு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட மாநில சுயாட்சி காங்கிரஸ் ஆட்சி அமைத்த மாநிலங்களில் 1939 வரை மட்டுமே நடைமுறையில் இருந்தது.
இரண்டாம் உலகப் போரை முன்னின்று 1939இல் மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் ராஜினாமா செய்தது பதவி விலகியதும் மாநிலங்களில் ஆங்கிலேயர்கள் அவசர சட்டங்களை பிறப்பித்தும் தாமே அதிகாரங்களை ஏற்றுக்கொண்டனர் இந்த மாற்றம் 1946 வரை செயல்முறையில் இருந்தது.
ஆகஸ்ட் அறிவிப்பு 1940
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் போர் முயற்சிக்கு இந்தியர்களின் பரிபூரண ஒத்துழைப்பை பெறும் பொருட்டு லின்லித்கோ பிரபு ஆகஸ்ட் 8, 1940இல் அரசு கொள்கை பற்றிய ஆகஸ்டு அறிவிப்பை ஆகஸ்ட் நன்கொடை வெளியிட்டார். ஆகஸ்ட் அறிக்கையில் தான் முதன் முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கைகள் ஏற்கப்பட்டது.
ஆகஸ்ட் அறிக்கையின்படி இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது பிரிட்டிஷ் அரசின் குறிக்கோள் என்றும் அது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னரே வழங்கப்படும் என்றும் இந்தியாவின் முக்கிய பிரிவினரின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவிடம் மட்டுமே வழங்கப்படும் என்றும் போர் முடிந்தவுடன் இந்திய அரசியலமைப்பை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை ஒன்று தோற்றுவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
எனினும் இதனை காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை காங்கிரஸ் உடனடியாக தற்காலிக அரசை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது.
கிரிப்ஸ் குழு 1942
1942இல் இந்திய சிக்கலை நேரடியாக கண்டறிய ஸ்டாஃபோா்டு கிாிப்ஸ் என்பவர் தலைமையில் மார்ச் 1942இல் ஒரு குழு இந்தியா வந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உடனடியாக மக்கள் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் இந்தியாவிற்கான அரசியலமைப்பை வரைவது கிாிப்ஸின் திட்டமாகும்.
சில நிபந்தனைக்கு உட்பட்டு அந்த அரசியலமைப்பை ஆங்கில அரசு முடிவுக்கு கொண்டுவரும் கிரிஷ் திட்டம் தோல்வி அடைந்தது.
தோல்வி அடைந்தாலும் இக்குழு தனது அறிக்கையில் இந்திய அரசியல் அமைப்பு குறித்த அனைத்து பணிகளையும் இந்தியர்களிடையே விட்டு விடலாம் என்று பரிந்துரைத்தது
இரண்டாம் உலகப் போர் 1939 1945 காரணமாக அரசியல் அமைப்பு கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை
போர் முடிவுக்கு வந்தவுடன் இங்கிலாந்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற தொழிலாளர் கட்சி அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட முனைந்தது
அமைச்சரவைத் தூதுக்குழு 1948
காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதமும் ,தொடர் நிகழ்ச்சிகளும், பிரிட்டனின் அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவிற்கு வந்து இந்திய அரசியல் அமைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வு காண வழிவகுத்தன.
வெற்றிக்கு லாரன்ஸ் ஏவி அலெக்சாண்டர் மற்றும் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் ஆகியோர் கொண்ட கேபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு மார்ச் 1946 வந்தது.
இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பது உறுதிப்படுத்துவதற்கான திட்டத்தை தருவதே இக்குழுவின் நோக்கமாகும் இந்திய அரசமைப்பு தீர்வு அமைச்சரவை தீர்வு தூதுக்குழு திட்டம் என அழைக்கப்படுகிறது.
அமைச்சரவை தூதுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 389 உறுப்பினர்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் இந்திய மாநிலங்களில் இருந்து 292 உறுப்பினர்களும் இந்திய சுதேச மாநிலங்களிலிருந்து 93 உறுப்பினர்களும் தலைமை ஆணையர்களின் மாகாணங்களிலிருந்து 4 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் அரசியலமைப்புச் சட்டம் வரையப்படும் வரை இடைக்கால அரசாங்கம் ஏற்படவும் இது வழி செய்தது.
இதன் வழி 1946 செப்டம்பர் 2 இல் இடைக்கால அரசாங்கம் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்டது.
இவ்வாறாக இறுதியாக டிசம்பர் 6 1946 அரசியல் நிர்ணய சபை 389 உறுப்பினர்களுடன் தோற்றுவிக்கப்பட்டது.