100% TNPSC EXAM-ல் வெற்றி பெற Tips

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற சின்னச்சின்ன விஜயத்தினை முறையாக பின்பற்றினால் போதும் முதல் முயற்சியில் வெற்றி உறுதி.

Tips 1 பாடத்திட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிரிண்ட் எடுக்கப்பட்ட பின் அதனை பெரிய நோட்டில் (லாங் சைஸ் நோட்) தலைப்புகளை (Topics) ஒன்றன் கீழ் ஒன்றாக பெரிய எழுத்துக்களில் எழுதிக் கொள்ள வேண்டும். முக்கியமாக நாமே தான் எழுத வேண்டும்.

ஏனென்றால் அப்போது தான் பாடத்திட்டம் (சிலபஸ்) நமது மனதில் பதிய வாய்ப்பு கிடைக்கும். மேலும் TNPSC பாடத்திட்டத்தினை வெள்ளைத்தாளில் பொிய நோட்டில் எழுதிய போல் ஒன்றன் கீழ் ஒன்றாக நல்ல இடைவெளி விட்டு எழுதி அதை நாம் படிக்கும் அறை அல்லது அடிக்கடி நம் கண்ணில் படும்படி சுவரில் ஒட்டி வைத்துக் கொண்டால் நாம் எந்தெந்த  பாடம்  படித்து உள்ளோம் என்றும், எந்த டாபிக் படிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டு திட்டமிட்டு படிக்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை  குறிப்பாக  தமிழ்நாடு அரசு  சமச்சீர் பாடப் புத்தகங்களை (tnpsc book list) சேகரித்து வைத்துக் கொண்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிலும் பாடத்திட்ட தலைப்பு வாரியாக பிரித்து ஒன்றாக சேர்த்து  புத்தகமாக  பைண்டிங்  செய்து  வைத்துக் கொள்ளலாம்  அல்லது  தைத்து  வைத்துக் கொள்ளலாம் இவர் வைத்துக் கொண்டால் பல மிக சிறப்பாக இருக்கும்.                                                         

ADVERTISEMENT

 TNPSC பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Tips 2  எப்படி படிப்பது

நாம் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள TNPSC (tnpsc book list) பாடத்திட்டத்தினை தலைப்பு வாரியாக டைம்டேபிள் உருவாக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, டிஎன்பிசி குரூப் 2 பாடத்திட்டம் அலகு 1-இல் ”பொது அறிவியல் விதிகள்” என்ற தலைப்பினை எந்த நாளில் எத்தனை மணிக்கு எவ்வளவு மணி நேரம் படிக்க வேண்டும் என்று நேர அட்டவணை அமைத்துக்கொள்ள வேண்டும் .

இவ்வாறு நேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதி நேரத்தை படித்து முடித்தபின் அவற்றை டிக் செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல் பாடத்திட்ட தலைப்புகளில் அனைத்தையும் டிக் செய்து இருந்தால் நாம் டிஎன்பிசி பாடத்திட்டத்தினை அனைத்தையும் படித்து முடித்த திருப்தி ஏற்படும் இவ்வாறு திருப்தி ஏற்படும் போது நாம் மனதில் நாம் வெற்றி பெறுவோம் என்ற உறுதி ஏற்படும்.

Tips 3  நேர திட்டமிடல்

நேரம் திட்டமிடுவதில் தினமும் காலையில் 3 மணி முதலே திட்டம் வகுப்பது மிகச்சிறப்பு ஏனெனில் நாம் முன்னோர்கள் சொன்னது போல் ”பசுமரத்தில் அடைந்த ஆணி போல்” எளிதில் மனதில் நிற்கும் தினமும் காலையில் எழுந்து படிப்பது என்பது கொஞ்சம் சிரமம்தான் எதுவும் சாதிக்க துடிப்பவர்களுக்கு இல்லை.

ADVERTISEMENT

முதல், இரண்டு மூன்று நாட்கள் அலாரம் வைத்து எழலாம். முதல், இரண்டு மூன்று நாட்கள் அலாரம் வைத்து எழுந்து இருப்பது பின்னாளில் அலாரம் வைக்காமலே நம் ஆழ்மனமே தானே எழுப்பிவிடும்.

மேலும் தினம் காலை முதல் மாலை வரை படித்ததை இரவு தூங்கும் முன் ஒரு மணி நேரமாவது திருப்புதல் செய்வது மிக சிறப்பு. உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்பது உண்மை.

Tips 4  மனதிற்கு புத்துணா்ச்சி அளித்தல்

தினமும் காலையில் எழுந்த பின் உடனடியாக அதிக வெளிச்சத்தினை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் அதிக வெளிச்சத்தினை பார்ப்பதால் கண்கள் கூச்சம் ஏற்படும் இதனால் நமக்கு எரிச்சல் ஏற்படும் இவ்வாறு எரிச்சல் ஏற்பட்டால் மனம் ஒரு நிலையில் இருக்காது.

ஆகையால் அதிக வெளிச்சத்தை எழுந்தவுடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

தினமும் காலை மூன்று மணிக்கு எழுந்த பின் குளிர்ந்த நீரால் தங்களின் கழுத்துப்பகுதியில் கழுவினால் ஒருவித புத்துணர்வு ஏற்படும் இதனால் மீண்டும் தூக்கம் வராது எக்காரணம் கொண்டும் படுக்கையில் படுத்துக்கொண்டு படிக்ககூடாது .

மேலும் நாம் படிக்க திட்டமிட்ட புத்தகத்தினை முந்திய நாள் இரவே எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். படிக்கும் மேசையில் நாம் எடுத்து வைத்த புத்தகம் மட்டுமே இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

Tips 5  உறுதி மொழி

படித்துக்கொண்டு இருக்கும் போது மனச்சோர்வு அல்லது ஒருவித எரிச்சல் மனதில் தோன்றினால் பின் வரும் உறுதி மொழியினை கூறினால் மன எரிச்சல் போக்கி படிக்க ஆர்வத்தை தூண்டும்.

இந்த உறுதிமொழியை கூறி பின்பற்றி வந்த பலர் இன்று அரசு ஊழியராக பணியாற்றி வருகிறாா்கள்.

நான் சாதிக்க பிறந்தவன் ! சாதிக்கவே பிறந்தவன்!

நான்  வாழும் காலத்திலும்! வாழ்ந்த பின்னரும் !         

என் பெயரை நிலைநாட்ட செல்வேன் ! 

நிச்சயமாய்! சத்தியமாய்!   

ADVERTISEMENT

நிச்சயமாய்! சத்தியமாய்!     

நான் தெருவில் இறங்கி நடந்து வரும்போது !   

இச்சமுதாயம் என்னும் இரு கைகூப்பி !வணங்க வேண்டும்! 

அதற்கு  என்னை தகுதி படுத்துவேன்! தரதாரப்படுத்துவேன்!   

நிச்சயமாய்!  சத்தியமாய்!   

நான் சாதிக்க பிறந்தவன்! சாதிக்கவே பிறந்தவன்!.

ADVERTISEMENT

Tips 6 எந்த புத்தகத்தினை படிப்பது

தமிழ்நாடு பாட புத்தகங்களான சமச்சீர் கல்வி புத்தகங்களை தான் படிக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை எதிரான வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புத்தங்களில், தமிழ், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணிதப் புத்தகங்களை படித்தே ஆக வேண்டும்.

பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களில், வரலாறு மற்றும் பொருளியல் புத்தகங்களில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள பாட திட்டத்தில் உள்ள தலைப்புகளை மட்டுமே படிக்க வேண்டும்.

Tips 7  தோ்வு எழுதி பாா்த்தல்

டிஎன்பிஎஸ்சி சிலபஸின் அனைத்து தலைப்புகளும் படித்து முடித்த பின்பு என்ன செய்வது? இதுவரை டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் வினாகளின் தொகுப்பினை தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

TNPSC இணையதளத்தில் உள்ள OMR சீட்டினை பதிவிறக்கம் செய்து தேவைக்கேற்ப நகல் எடுத்து வைத்துக் கொண்டு விடை அளித்து அதனை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நாம் SHADE பண்ணும் போதும் தவறு செய்திருந்தால் திருத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும். தினமும் குறைந்தது 100 வினாக்களுக்கு OMR சீட்டில் விடையளித்து பழக வேண்டும்.

இவ்வாறு OMR சீட்டில் விடையளித்து பழகும்போது SHADE பண்ணும் போது தவறுதலாக விடை அளிப்பது தவிர்த்து நமக்கு அதிகப்படியான மார்க்குகளை பெற்றுத்தரும்.

ADVERTISEMENT

ஒரு வினாவிற்கான விடை தவறாக SHADE செய்து விட்டாள் ஒன்றை மார்க்கு குறைவாக வரும் இவ்வாறு ஒன்றை மார்க் குறையும் போது ஒரு லட்சம் பேர்கள் நம்மை விட முந்திச் செல்வார்கள்.

ஆகையால் பெரும்பாலானோர் செய்யும் தவறுகளை செய்வது போல் நாமும் இத்தவறினை செய்ய கூடாது. இதை சரிசெய்து சரியாக SHADE செய்தல் வெற்றி நிச்சயம்.

OMR சீட்டினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

அடுத்த கட்டுரையில்

அடுத்த கட்டுரையில் TNPSC  பாடத்திட்டதின்படி ”இந்திய அரசியல் அமைப்பு” என்ற தலைப்பில் விாிவாக பாா்க்கலாம்.

இதில் அரசியல் அமைப்பின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கம், இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள், முகவுரை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் ஆகியவற்றை விரிவாக பார்க்கலாம்.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் பொதுவாக இந்திய அரசியலமைப்பு பாடப்பகுதியில் எத்தனை கேள்விகள் கேட்கப்படும்.

ADVERTISEMENT

எந்தெந்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதை விரிவாக காண்போம்.

Also Read >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *